கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மூடுவதற்கு முயற்சிக்கப்படும் “எமது கிரமாத்தின் ஓர் பாதை” பற்றி மக்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக மக்கள் பாவனையில் இருந்து வந்த  குரவலானவையும் மௌலானபுரவையும் இணைக்கின்ற பாதையானது கடந்த சில மாதங்களாக “பிரச்சினைக்குள்” சிக்குண்டு வருகிறது. இது குரவலான சார்லங்கா மக்கள் தாய் சேய் நிலையத்தை (CLINIC) தொடர்புகொள்ள பயன்படுத்தும் பிரதான பாதையும் ஆகும். இப்பாதையானது கடந்த நான்கு நாட்களாக மூன்றாவது முறையாகவும் மூடப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக,
- கஹட்டோவிட்ட மக்கள் கழிவுப் பொருட்களை பாதையில் அண்டியுள்ள காணிகளில் வீசிவிட்டுச் செல்கின்றமை.
- காணியில் அமையப்பெற்றுள்ள கிணற்றிலும் இக்கழிவுப் பொருட்களை வீசுகின்றமை.
- அக்காணியில் அமைந்துள்ள உபயோகமற்றுக் கிடக்கும் வீட்டை கஹட்டோவிட்ட இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைத் தளமாக பாவிக்கின்றமை.

போன்ற குற்றச் சாட்டுக்களை “பாதையை மூடியுள்ள” சிங்கள சகோதரர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகளாக,

1) கழிவுப் பொருட்கள் எரிவது முற்றாகத் நிறுத்தப்பட வேண்டும்.
2) போதைப் பொருள் பாவிக்கப்படுவது கண்டால் அது யாராகினும் போலிஸ் அவசரப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட வேண்டும்.
3) இப்பாதையைத் தொடர் பாவனைக்கு உபயோகிக்கவும் விஸ்தரிக்கவும்  உத்தியோகபூர்வமாக ஊர் மக்களின் அங்கீகாரம் பெறப்பட்ட கோரிக்கையொன்று (மஹஜர்) அத்தனகல்ல பிரதேச சபைக்கு கொடுக்கப்பட உள்ளது. கோரிக்கை கடிதம் மக்கள் பார்வைக்காக பள்ளிவாயல் “நோட்டீஸ் போர்ட்” இல் விடப்பட்டுள்ளது.

குறிப்பு :

கையெழுத்து சேகரிப்பதற்கான படிவம் பள்ளிவாயல், DHOLAYAN COMMUNICATION, CAPITAL BOOK SHOP, PHARMACY போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஊர்மக்களாகிய உங்களது கையெழுத்துக்களை பதியுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
கிராம அபிவிருத்திச் சங்கம்,
கஹட்டோவிட்ட.

0 comments:

Post a Comment