கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டம் ஆனால் ..




தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் நிரந்தர இருப்பு மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஜெனிவா


நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதிழைத்திருப்பதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே எம்து இளைஞர் பாராளுமன்றம் வேறு பல முக்கிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று ஏற்பாடு செய்து வருகிறது என்று பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன ஜெனிவாவில் இருந்து தெரிவித்தார்.
சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் இந்த முயற்சிக்கு World Muslim foundation, vital international, Islamic Relief organization, Centre islamic de Geneve, La Fondation culturelle islamique, Association Islamique de Suisse - Geneve, Muslim Rights and relief Foundation (MRRF), உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜெனிவா நகரில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஜெனிவாவில் இருக்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பங்குபற்றுவர்.

இவ்வார்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படும்.

ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்ற சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தில் 36 நாடுகளைச் சேர்ந்த பல்லின

இளைஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன் ஊடாக இளைஞர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கி, அவர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை சர்வதேச இளைஞர்

பாராளுமன்றம் சிறப்பாக முன்னெடுத்து வருவதுடன் உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படுவது, நல்லாட்சி, கல்வி, சமூக பொருளாதார மேம்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று ஜெனீவாவை

தலைமையகமாக கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக இளைஞ்சர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.

கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்-ஜனாதிபதிக்கு சம்மேளனம் கடிதம்


கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு இந்த நாட்டின் உயர்வுக்கு எல்லா இன மக்களை போன்றும் முஸ்லிம்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர். இந்த நாட்டின் இறைமையை போனுவதிலும், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் மிக அக்கறையுடன் முஸ்லிம்கள் பாடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வேண்டி பள்ளிவாயல்களின் ஊடாக சமய நடவடிக்கைகளின் ஈடுபடுவார்கள். இம்மார்க்க செயற்பாடுகள் எந்தவொரு இனத்தையும் பாதிப்பதாக அமைவதில்லை.

காத்தான்குடி பிரசேத்தை சேர்ந்த உஸ்மான் சாகிப், கச்சி முகம்மட் ஆகிய சகோதரர்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தம்புள்ளை பிரசேத்தில் தனது வியாபார ஸ்தலத்தோடு சேர்த்து தொழுகைக்கான ஒர் அறை ஒன்றையும் அமைத்ததாக வரலாற்று ஆவனங்கள் குறிப்பிடுகின்றன. தற்போதுள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயல் 1960ஆம் ஆண்டு பள்ளிவாயலாக நிறுவப்பட்டதற்கான சான்றுகள் காண்பிக்கின்றன.
வரலாறு இவ்வாறிருக்கின்ற போது புனித பிரதேசம் என்ற பெயரில் சில பௌத்த மத தீவிர வாதிகளால் இவ்வாறு உருவாக்கப்பட்ட பள்ளிவாயல் சேதப்படுத்தப்பட்டதன் காரணமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிக வேதனையடைகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களிலும் இடம் பெறக்கூடாது என்பதுடன் மேற்படி ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயல் சேதமாக்கப்பட்டது சம்பந்தமாக கீழ் வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூறிக் கொள்ள விரும்புகிறது.

மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயல் தற்போது இருக்கும் அதே இடத்திலேயே இருக்க வேண்டும். இது தொடர்பிலான மேலதிக முடிவுகள், நடவடிக்கைகள் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் அனுசரனையுடன் மேற் கொள்ளப்பட வேண்டும். சட்ட விரோதமாக இச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி எப்.எம்.உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எனவே இந் நாட்டில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய மேற்படி விடயங்களை சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சுக்கள் உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வினயமாக கேட்டுக் கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் பிரதமர் தி.மு.ஜயரட்ன, மற்றும் காணி அமைச்சர் ஜானபக பண்டார தெண்ணக்கோன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இம் மகஜர் கடிதம் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைசக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளளத்தின் செயலாளர் அஸ்ஸெய்க் டி.எம்.எம்.அன்சார் நழீமி தெரிவித்தார்.

ஹைரியா மஸ்ஜிதில் சர்வதேச ஊடகங்கள் பார்க்க ஜும்ஆ இடம்பெற்றது


தம்புள்ளையில் இருந்து எமது செய்தியாளர் : இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ இடம்பெற்றது அதில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டிகொண்டமைக்கு அமைவாக துவா பிராத்தனையும் இடம்பெற்றது . இன்று மஸ்ஜிதுக்கு சர்வதேச மற்றும் தேசிய ஊடங்கள் வந்திருந்தது , அல் ஜசீரா தொலைகாட்சி ஊடகவியலாளர்கள் காட்டார் நாட்டில் இருந்து வந்திருந்தனர்.

அவர்களில் மூன்று அரபிகளும் இருந்தனர் . அவைகள் மஸ்ஜித் இமாம் உட்பட அங்கு வந்திருந்த வர்களிடம் பேட்டிகண்டனர் . மற்றும் குவைத் நாட்டில் இருந்தும் ஊடகவிலாளர்கள் வந்திருந்தார் மொத்தமாக சுமார் பத்துக்கும் அதிகமான ஊடக துறை சாந்தவர்கள் இன்று இடம்பெற்ற ஜும்ஆ வை உள்வாங்கி கொண்டதுடன் தகவல்களையும் கேட்டறிந்து கொண்டனர் .
மற்றும் பாதுகாப்புக்கு கடந்த நாட்களை போன்று சுமார் 30 வரையான பொலிசார் நிறுத்தப் பட்டிருந்தனர்.

படங்கள் F.M. பர்ஹான்,அஸ்லம் அலி

ஆளுநர் அலவி மௌலான இராஜினாமா செய்ய தயாராகிறார்



மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான தம்புள்ள மஸ்ஜிதை இடிப்பதற்கு அல்லது அதை தம்புள்ளையில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிப்பார்களானால் தான் தனது ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எந்த நிலைமையிலும் இது விட்டுகொடுக்க முடியுமான விடயமல்ல. மஸ்ஜித் வேறு இடத்திற்கு மாற்றப்படுமாக இருந்தால் அது ஒரு மாதிரியாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ள தகவலில் தம்புள்ள ஹைரியா மஸ்ஜிதுக்கு பதிலாக தங்கத்திலான ஒரு பள்ளியை தந்தாலும் அதை முஸ்லிம் சமூகம் ஏற்றுகொள்ளாது என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலை அகற்ற முடியாது தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது


தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை குறித்து அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தம்புள்ளை ரஜமஹா விகாரை பூமி குறித்து தேரர்கள், பெளத்தர்கள், முஸ்லிம்கள் சிலருக்கு சட்ட ரீதியான அதிகாரம் உண்டு. பள்ளிவாசல் குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். முஸ்லிம் பள்ளிவாசலை அகற்ற முடியாது என காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலை அகற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் சில வேளைகளில் அதனை அகற்றியிருக்கலாம். தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெற்ற சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாருக்கு சந்தர்ப்பம் இருந்தது.
பௌத்தர்களை தூண்டிவிட்டு அநாவசிய பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்காவிட்டால் பாரிய அழிவு ஏற்படும்.
தம்புள்ளை விகாரை அமைப்புப் பணிகள் 6 மாதத்திலும் அநாவசிய கட்டடங்களை அகற்றும் பணிகள் 3 மாதங்களிலும் செய்து முடிக்கப்படும் என பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இப்படியிருக்கையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்த உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நான் நம்புகிறேன்.
தம்புள்ளை ரஜமஹா விகாராதிபதிக்கும் எனக்கும் இடையில் அரசியல் முரண்பாடு காணப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளர் ஒருவர் தோல்வியுற்று நான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றுவிட்டார். இதுதான் பிரச்சினையின் ஆரம்பம்”.
இவ்வாறு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.-

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்.




63 வருட வரலாற்றை கொண்ட தம்புள்ள பள்ளிவாசல் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டுமென பிரதமர் டீ.எம். ஜயரட்ணா வியுறுத்தியுள்ள அதேவேளை மறுபுறம் திங்கட்கிழமை, 23 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கிடையில் பள்ளிவாசல் அகற்றப்படாவிட்டால் அதனை இடித்து தரைமட்டமாக்குவோமென தீவிரவாத பௌத்த தேரர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
 தம்புள்ள பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் முஸ்லிம்கள் தரப்பில் எவரும் பங்குகொள்வதில்லை என்ற தீர்மானத்தையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மேற்கொண்டுள்ளது.
 ஆகமொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை மிகமுக்கியத்துவமிக்க நாளாக அமையப்போகிறது.
 இலங்கை அரசாங்கத்திடம் அல்லாஹ்வின் இல்லத்தை பாதுகாத்துத் தருமாறு நமது முஸ்லிம் உறவுகள் விடுத்த வேண்டுகோளுக்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை. முஸ்லிம் அரசியல் வாதிகள் மேற்கொண்ட பயன்களுக்கு இதுவரை சாதக முடிவுகள் கிடைக்கவில்லை.
 இந்நிலையில் முஸ்லிம்களுக்கு  எஞ்சியிருப்பது துஆ (பிரார்த்தனை) மாத்திரமே ஆகும். தம்புள்ளயில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லம் பாதுகாக்கப்பட வேண்டுமென முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போம்..!!

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிட சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம உத்தியோகித்தர் அன்ஸார் நானா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் சில்மி (வதுபிடுவல வைத்தியசாலை), இல்ஹாம்  ஆகியோரின் தந்தையும் ஆவர்.

 அன்னாரின் ஜனாஸா நெற்று (2012.22) காலை 9.00 மணியளவில் கஹடோவிட முஹியத்தீன்   ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

தம்புள்ள மஸ்ஜித் திறக்கப்பட்டது

இன்று காலையில் பள்ளியில் சுன்னத்தான தொழுகைகள் இடம்பெற்றுள்ளது. மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது நேற்று மஸ்ஜித் தாக்கப்பட்ட பின்னர் மஸ்ஜித் பூட்டப்பட்டு அதிகாரிகளினால் மீள் ஒழுங்கு படுத்தப் பட்டு எம்மிடம் வழங்கப்பட்டுள்ளது இன்று இன்ஷா அல்லாஹ் லுகர் தொழுகை ஜமாத்துடன் இடம்பெறும் என்று lankamuslim.org க்கு மஸ்ஜிதின்  நிர்வாகி மற்றும் மௌலவி ஆகியோர் தெரிவித்தனர்

அமைச்சர்கள் குழு விஜயம்



அவர்கள் எமக்கு சற்று முன்னர் வழங்கிய தகவலில் : மஸ்ஜிதுக்கு வைக்கபட்டிருந்த சீல் இன்று அதிகாலை பொலிசாரினால் நீக்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணியளவில் ரிஷாத் பதியுதீன் , அமைச்சர் பௌசி ஆகியோருடன் பாராளுமன்ற உறுபினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற பள்ளிக்கு வந்து பள்ளியை திறந்து தந்துள்ளனர்.


பள்ளியின் வெளிபகுதியில் வந்த அமைச்சர்கள் குழு நிலைமைகளை கேட்டு அறிந்துள்ளதுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது அதில் அமைச்சர்கள் AGA-DS- , தம்புள்ள போலீஸ் மா அதிபர் மற்றும் மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள சிங்கள மக்களும் ஆகியோர் கலந்து கொண்டனர் .இதன்போது சிங்கள மக்கள் பள்ளியின் பழமை பற்றி அங்கு கருத்துகளை தெரிவித்தனர்.


பிந்திக் கிடைத்த தகவல்: பிரதியமிச்சர் MLAM ஹிஸ்புல்லாஹ் தலைமயில் குழுவொன்று தற்போது மஸ்ஜிதுக்கு சென்று நிலைமைகளை ஆராந்து வருகிறது இன்று லுகர் தொழுகையில் MLAM ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவருடன் சென்றுள்ள அரசியல்வாதிகள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தம்புள்ள மஸ்ஜிதின் செயலாளர் lankamuslim.org க்கு சற்று முன்னர் தெரிவித்தார்.


மஸ்ஜித் தொடர்பான கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது அது 23 ஆம் திகதியா அல்லது எப்போது என்று எமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்










தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல்: சாட்சிகளின் வாக்குமூலம்

இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆளும் தரப்பில் இருந்தும் தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டுள்ளது: மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனு தொடர்பு கொண்டதாக தெரிவித்தனர். ஆனால் ஜூம்ஆ இடம்பெறாமல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் பள்ளி தாக்கப்பட்டுள்ளது அல் குர்ஆம் வீசி எறியப்பட்டுள்ளது.
பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் மஸ்ஜிதின் பாதுகாப்பு தொடர்பாக உயர் மட்டத்துடன் தொடர்புகளை கொண்டிருந்தார் அதேபோன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியுடனும் , பாதுகாப்பு செயலாளருடனும் போலீஸ் மா அதிபருடனும் இது தொடர்பாக பேசியிருந்தார் இருந்தும் பேரினவாதிகள் திட்டமிட்டபடி சம்பவம் நடைபெற்றுள்ளது .இது தொடர்பாக அமைச்சர்கள் என்ன சொல்லபோகிறார்கள் .
இது தொடபாக தம்புள்ள ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரும் சம்பவங்களை நேரில் மறைந்திருந்து அழுகையுடன் நேரில் பார்த்தவரும் மற்றும் சம்பவம் நடக்கும்போது 11 மணி தொடக்கம் 12.30 மணி வரை பள்ளியில் இருந்தவர்களில் மௌலவி ஒருவரும் ஆகிய இருவர் lankamuslim.org க்கு தெரிவித்த தகவல்களை உங்களுக்கு தருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்கள் தவிர்க்கப் பட்டுள்ளது .
மௌலவி: இன்று காலை 10: 30 மணியளவில் ஜும்ஆ தினம் என்பதால் சுமார் 50 பேர் பள்ளியில் இருந்தனர் காலை 11:00 மணியளவில் பெளத்த தேரர்கள் தலமையில் ஆயிரக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்கனவே அவர்கள் திட்டமிட்டபடி மஸ்ஜிதை முற்றுகையிட்டு உள் நுழைய முயன்றனர். அவர்களின் முதல் முயற்சி இராணுவத்தால் தடுக்கப்பட்டது இதை தொடர்ந்து தேரர்களின் பின்பக்க வழியால் பள்ளிக்குள் நுழைந்தது மிகவும் மோசமான சொல்லமுடியாத வார்தைகளிளால் இராணுவம் , போலீஸ் முன்னிலையில் கடுமையாக திட்டி கொண்டு பள்ளியின் உள்ள பக்க கதவுகளை தாக்கினர்.
பெளத்த தேரர்களில் சிலர் தமது காவி உடையை கழட்டி மோசமாக நடந்து கொண்டனர். இதனை இராணுவமும் பொலிசாரும் பார்த்துகொண்டு இருந்தனர். அவர்களை தடுக்க முற்படவில்லை இந்த நிலையில் பள்ளியின் மீது தொடந்து கற்கள் வீசப்பட்டது பள்ளியை நாங்கள் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தோம் சிலர் இபாதத்திலும் ஈடபட்டு இருந்தபோது நிலைமை மோசமானது பாதுகாப்பு அதிகாரிகள் எம்மிடம் வந்து பள்ளிக்கு எதுவும் நடக்காது பள்ளியில் இருந்து வெளியேறுமாறு கூறினர் நிலைமை மோசமடைய அவர்கள் ஒழுங்கு செய்த வலியின் மூலம் வெளியேறினோம் அதன்போது பாதுகாப்பு கருதி தொப்பியை கழட்டிவிட்டு செல்லுங்கள் என்று கூறினார் இது 11:00 மணி தொடக்கம் 12:00 வரை இடம்பெற்ற விடயம் இன்று ஜூம்ஆ தொழுகை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதத்க்கது.
ஜும்ஆ பள்ளி நிர்வாகி இதை தொடந்து தம்புள்ள ஜும்ஆ பள்ளி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் எம்மிடம் தெரிவித்த தகவலை தருகிறோம்:
தேரர்கள் பள்ளியில் முன்பகுதியில் வந்து மோசமாக நடந்து கொண்டிருந்தனர் போலீசார் எம்மை பள்ளிக்கு ஒன்றும் நடக்காது பள்ளியில் இருந்து வெளியேறுமாறு கோரினர் நாம் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்டோம் அதற்கு அவர்கள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை பின்னர் பாதுகாப்பு தருவாதாக கூறினார் அதன்படி நாம் 12:30 அளவில் பள்ளியை விட்டு வெளியேறினோம் .
எங்களை வெளியேற்றிய பின்னர் நான் உட்பட எம்மில் சிலர் மறைந்து இருந்து நடப்பதை அவதானித்தோம் சுமார் 15 நிமிடங்கள் தேரர்கள் தலமையிலான ஆர்பாட்ட கார்களுக்கும் இராணுவ அதிகாரிகள் , போலீஸ் அதிகாரிகள் , AGA ஆகியோருக்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது அதை தொடர்ந்து AGA உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியின் கதவுகளை ஆர்பாட்ட கார்களுக்கு திறந்து கொடுத்தனர் பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த அல் குர்ஆன் அலுமாரி உட்பட மின் விசிறிகள் , கதவுகள், தளபாடங்களை தாக்கினர் உடைத்தனர் அல் குர்ஆன்ங்களை வீசி எறிந்தனர் இவற்றை படமாகவும் வீடியோ வாகவும் எடுத்துள்ளனர். அதன்பின்னர் வெளியேறி சென்றனர் அவற்றை நான் மறைவான இடமொன்றில் இருந்து பார்த்துகொண்டிருந்தேன் .
அவர்கள் வெளியேறி சென்றபின்னர் பள்ளியின் தலைவர் பள்ளியை பார்க்க வந்தார் அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை சீல் வைகபட்டிள்ளது அது AGA யினால் வகைப்பட்டதாக இருக்கலாம் .
அதன் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் உடைந்த வற்றை மீளவும் சரிசெய்து வைக்கும் வேலையில் ஈடுபட்டனர். சேதமான மின்விசிறி உட்பட அனைத்தையும் எதுவம் நடக்காதது போன்று சரிசெய்து இடத்தையும் துப்பரவு செய்தனர். அதன் பின்னர் பள்ளி தலைவரை அழைத்து ஊடங்களுக்கு எதையும் நடகாத்தை போன்று வெறும் ஆர்ப்பாட்டம் நடனத்தை போன்ற தோரணையில் ஊடங்களுக்கு தெரிவிக்குமாறு கூறியதாக தெரிகிறது அவர் இதுவரை எந்த செய்தியையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்று தெரிகிறது .
தற்போது பள்ளி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது , முஸ்லிம் கடைகள் மூடப்பட்டுள்ளது அச்சமான சூழ்நிலை நிலவுகிறது கண்டிப்பாக முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக எமது இடத்துக்கு வரவேண்டும் நிலைமைகளை நேரில் பார்க்கவேண்டும் என்று வேண்டுகோளும் விடுகிறேன் இந்த செய்தியை முடியுமானவரை விரைவாக எடுத்து செல்லுங்கள் என்றும் எம்மிடம் தெரிவித்தார் .
அவரிடம் எமது செய்தியாளர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்டபட முஸ்லிம் அமைச்சர்கள் குழு ஒன்று கொழும்பில் இருந்து தம்புள்ளைக்கு செல்லவுள்ளது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் ஊடக செயலாளர் சில மணிகளுக்கு முன்னர் எமக்கு தெரிவித்திருந்த தகவலை தெரிவித்தார் .
1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயில் 2002ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளன அதேவேளை இந்த பள்ளி சட்டவிரோதமானது என்று பிரதேச செயலாளர் தெரிவித்தாக செய்திகள் வெளிவந்துள்ளது . எதிர்வரும் திங்கள் கிழமை இது தொடர்பாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது .
தம்புள்ளை ஜூம்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது முஸ்லிம் கடைகள் பூட்டப்பட்டுள்ளது இப்போது முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யபோகிறார்கள் என்பதை பாப்போம் ???

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது (update – Video இணைப்பு)



தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜும்ஆவிற்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கட்கள் வீசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தகட்டினால்லான பள்ளியின் சிறுபகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இராணுவத்தினறும் பொலிசாரும் கடமையில் உள்ளபோதும் நிலைமை மிகவும் அச்சமாகவே உள்ளதாக அங்கே உள்ள சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.

இறைவனின் இல்லமான இப்பள்ளிவாயலைப் பாதுகாப்பதற்கான பிரார்த்தனைகளில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு தம்புள்ளையில் தொழில்நிமித்தம் வசித்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

3rd Update

தற்போது கிடைக்கபெற்ற தகவல்களின்படி, தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது.

முதலில் பள்ளிவாயலில் உள்ளே இருந்த முஸ்லிம் சகோதரர்கள் பொலிசாரின் வற்புறுத்தலின் காரணமாக வெளியேற்றப்பட்டனர். அங்கே ஜும்ஆ நடைபெறவில்லை.

பின்னர் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் காவி உடை அணிந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே இருந்த சகல பொருட்களையும் உடைத்து அளித்தனர்.

அத்தோடு பள்ளியையும் உடைத்து அளித்துள்ளதாக அங்கே இருந்து எமது சகோதரர் காத்தான்குடி இன்போவிற்கு கண்ணீருடன் தெரிவித்தார்.

அரசில் ஒட்டியுள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு பல்வேறு தகவல்கள் இது தொடர்பாக தெரிவிக்கப் பட்டபோதும், அவர்களால் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மேலதிக தகவல்கள் கிடைக்குமிடத்து வாசகர்களுக்காக பதிவேற்றப்படும்

4th Update

பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்களை இங்கே பிரசுரிக்கின்றோம்.



பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது.


கடந்த 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று நண்பாகல் பௌத்த  தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு  ஆதரவான பெரும்பான்மையினத்தவர்களும் பள்ளியினுள் கூடியிருந்தவர்களை  அப்புறப்படுத்திவிட்டு பள்ளிவாயிலை இடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்’தினராலும் பொலிசாராலும் குறித்த கும்பலைக்கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளிவாயில் 2002ம் ஆண்டு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
புனித பிரதேசத்திற்குள் இப்பள்ளிவாயில் இருப்பதாக கூறியே தேரர்கள் இப்பள்ளிவாயிலை உடைத்ததாக தெரிவிக்கப்பாடுகின்றது.
பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்களை இங்கே பிரசுரிக்கின்றோம்.








நபியின் இதயம் பிளக்கப்பட்டதா?

சிறு பராயத்தில் நபியின் இதயம் பிளக்கப்பட்டதா? பி.ஜே பதில்

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த கைருல் பாதிமா காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் காலம்சென்ற ஹிபதுல்லா அவர்களின் மனைவியும், லாபிருல் மதனி, முஹம்மத் அன்ஸார், நிஹாரா, நிலூபா, ரிலாயா ஆகியோரின் தாயாரும் ஆவர்.
 அன்னாரின் ஜனாஸா நாளை  (2012.04.18) காலை 9.00 மணியளவில் கஹடோவிட ஜாமிஉத் தௌஹித் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

ஆப்கானில் தலிபான்கள் கடும் தாக்குதல் _

ஆப்கானிஸ்தானில் நேற்று, அந்நாட்டு பாராளுமன்றம், ஜெர்மன், ரஷ்ய தூதரகங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில், தலிபான்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். அந்நாட்டில் அமெரிக்க தாக்குதலால் ஆட்சியை இழந்த தலிபான்கள், அரசுக்கு எதிராக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காபூல் நகரில் உள்ள ரஷ்யா மற்றும் ஜெர்மன் தூதரகம், நேட்டோ படைகளின் தலைமை அலுவலகம், பாரளுமன்றக் கட்டிடம் உள்ளிட்ட ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜலாலாபாத் மாவட்டத்தில் உள்ள இராணுவ தளத்தின் மீதும், விமான நிலையத்தின் மீதும், தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லோகர் மற்றும் பக்டியா மாகாணங்களிலும், நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

காபூலில் பாராளுமன்றம் மீதும், ரஷ்ய தூதரகத்தின் மீதும், போராளிகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தினர். போராளிகள் சிலர் பாராளுமன்றத்தினுள் நுழைய முயன்றபோது, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை.ஜெர்மன் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அந்த கட்டடத்தில் தீப்பிடித்து கரும்புகை பரவியது.பிரிட்டன் தூதரக அதிகாரிகள் தங்கியிருந்த வீட்டின் மீது இரண்டு ரொக்கெட்கள் ஏவப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காபூலில் சமீபத்தில் கட்டப்பட்ட நட்சத்திர விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த கட்டடம் தீப்பற்றி எரிந்தது. இந்த விடுதியை போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.உஷார் நிலைஇந்த தாக்குதலை கேள்விப்பட்ட அமெரிக்க தூதரகம், சைரன் ஒலியை எழுப்பி, தனது ஊழியர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கும்படி அறிவித்தது.

ஆப்கானிஸ்தானின், 11 மாகாணங்களில் நேற்று முன்தினம் முதல், நேற்று வரை பாதுகாப்புப் படையினர், நேட்டோ படையினருடன் சேர்ந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், 47 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர். 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஹெராத் மற்றும் தகார் மாகாணங்களில் தலிபான்கள் வைத்த இரண்டு கண்ணி வெடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான்கள் நேற்று, பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.தங்கள் அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில், விரோதிகள் பலர் கொல்லப்பட்டு விட்டதாக, தலிபான் தகவல் தொடர்பாளர் சபியுல்லா தெரிவித்துள்ளார்.
___

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த அல்ஹாஜ் உஸ்மான் அவர்களின் சகோதரரான மர்ஹூம் ஸாலி டொக்டர் அவர்களின் மனைவி காலமானார். அந்நாரின் ஜனாஸா நாளை காலை 11மணிக்கு ஆரிகாமம் ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அல்லாஹ் அந்நாரின் பாவங்களை மன்னித்து அந்நாரின் கப்றை விசாலமாக்கி சுவனவாழ்வை நல்குவானாக! அந்நாரின் குடும்பத்தினரிற்கும் றஹ்மத் செய்வானாக!

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.

Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும்.  Team Viewer 7.0. இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
மேலே படத்தில் உள்ளது போல உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் இரண்டு வசதிகள் உள்ளன என்று சொல்லி இருந்தேன். இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய என்றும் சொல்லி இருந்தேன். இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும். இதைப் பற்றி பின்னர் பகிர்கிறேன்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்.

மதுப்பிரியர்களை குணப்படுத்தும் நவீன மருத்துவம்

ஒரு பழக்கத்திற்கு அடிமையாவதென்பது ஒரு வகை மனநோயாகும். இந்த வகையில் பலர் மதுவுக்கு அடிமையாகி தமது வாழ்வையும் குடும்பத்தையும் படுகுழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றனர். இவர்களின் இந்த மதுப் பழக்கத்தை இல்லாதொழிக்க பலர் பல வழிகளில் முயற்சிக்கிண்டனர். எனினும் பெறுபேறுகள் ஸீரோவே.


அண்மையில் இந்த மதுப் பழக்கத்தை இல்லாமல் செய்ய கொழும்பில் ஒரு வைத்தியர் முயன்று வெற்றியும் கண்டுள்ளார். மதுப் பாவணையாளர்களிற்கு ஒரு வகை மாத்திரையை வழங்குவது மட்டுமே அவா் செய்யும் வேலை. இந்த மாத்திரை உடம்பில் சென்று மதுசாரத்தை அலேஜிக் ஆக்கிவிடுமாம். இதன் பின்னர் மது அருந்துபவர்களிற்கு வாந்தி ஏற்படுவதுடன் உடம்பை அசைக்க முடியாமல் அப்படியே கிடப்பாராம். இதனால் பலர் இந்த மருந்தை பயன்படுத்தி தமது மதுப்பழக்கத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர். எமதூரிலும் பலர் இந்த மருத்துவத்தைப் பயன்படுத்தி தமது மதுப்பழக்கத்தை விட்டு மீண்டுகொண்டிருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றனஇ

தவறான வழியில் வழி நடாத்தல் - வஸீலா பற்றிய தெளிவு.

அன்மையில் எமதூரின் ஒரு பள்ளி வாசலில் வஸீலா தேடுவது பற்றிய ஒரு குத்பா நிகழ்த்தப்பட்டது. அதில் மரணித்த நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் போன்ற அனைவர் பொருட்டாலும் வஸீலா தேடலாம் என்று சொல்லப்பட்டது.
 வஸீலா பற்றிய தெளிவில்லாமல் மக்கள் குழம்பிவிடக் கூடாது என்று இந்தக் கட்டுரையை பிரசுரிக்கிறோம் .
................................
மூலம்  http://www.islamkalvi.com/portal/?p=5357 -எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி-
அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு.
அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.
இந்நிலையில் அமல்கள், இபாதத்கள் புரிபவனுக்கு மறுமையில் மகத்தான கூலி கள் வழங்கப்பட்டு சுவனமும் பரிசாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகிலேயே அந்த இபாதத்திற்கான நற்பலன்களும் காட்டப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:
“விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவனிடத்திலே “வஸீலா” தேடுங்கள். அவனது பாதையிலே போர் புரியுங்கள். வெற்றியடைவீர்கள். (அல்குர் ஆன் 5:35)
இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து முக்கியமான மூன்று கட்டளைகள் சொல்லப்படுகின்றன.
1. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழ வேண்டும்.
2. அல்லாஹ்விடத்தில் வஸீலா தேட வேண்டும்.
3. அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வேண்டும்.
தக்வா என்றால் என்ன? அதனை எப்படி செயலாற்ற வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் பாதையில் எப்படி ஜிஹாத் (போர்) புரிய வேண்டும் என்பதும் நன்கு தெரியும். ஆனால், அல்லாஹ்விடத்தில் எப்படி வஸீலா தேடுவது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.
வஸீலா” என்ற இந்த வார்த்தைக்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் சொல்லும்போது, “அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெறுதல்” என்பதாகக் கூறுகிறார்கள். அபூ கதாதா (ரஹ்) அவர்கள் கூறும்போது “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அவனுக்கு உவப்பான முறையில் நடந்து, அவனது நெருக்கத்தைப் பெறுதல்” என்று கூறுகிறார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கத்தைப் பெறுவதற்கு எந்த நற்காரியம் உதவி புரியுமோ அதுவே வஸீலா எனப்படும்.
இதனடிப்படையில் ஒரு விசுவாசி அல்லாஹ் விரும்புகின்ற பிரகாரம் அமல்களைப் புரிந்து அதன் பொருட்டாக அல்லாஹ்வின் நெருக்கத்தை, அன்பை, ரஹ்மத்தை பெற வேண்டும். தான் புரிகின்ற நல்லறங்களினூடாக அல்லாஹ்வின் அன்பைப் பெறும்போது இம்மையிலும் மறுமையிலும் அவன் மிகச் சிறந்த ஸாலிஹான மனிதனாக ஆகிவிடுகின்றான்.
ஸாலிஹான மனிதன் என்ற அந்தஸ்து இறைவிசுவாசியான ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்கியுள்ளது. “விசுவாசம் கொண்டவர்களே!” என்று அல்குர்ஆன் ஆண் பெண் இரு சாராரையும் விழித்தே பேசுகிறது. விசுவாசியான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அல்லாஹ்வின் நெருக்கத்தின் பால் விரையுங்கள் என்ற கட்டளையை குர்ஆன் கொடுக்கிறது.
அல்லாஹ்வின் பால் நெருக்கத்திற்குக் காரணமான அந்த நல்ல அமல்களை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுமாறும் பிரார்த்தனைகள் செய்யுமாறும் கட்டளையிடுகிறது.
“விசுவாசம் கொண்டவர்களே! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமை யாளர்களுடன் இருக்கிறான்”. (அல்குர்ஆன் 2:153)
தொழக் கூடிய ஒவ்வொரு தொழுகையாளியும் தன்னுடைய தொழுகையை முன் வைத்து தனக்குத் தேவையான உதவிகளை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். அல்லாஹ்வுடைய சோதனைக்கு ஆளாகும் போது அதனை பொறுமையாக சகித்துக் கொண்டு அந்த பொறுமையை முன் வைத்து துஆ கேட்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் இபாதத்தை முன்வைத்தே துஆ கேட்க வேண்டும்.
யாஅல்லாஹ்! இந்த தொழுகையை உனக்காகத் தொழுதேன். உன் திருப்தியை நாடித் தொழுதேன். எனது இந்த தேவையை நிறைவேற்றித்தா என கஷ்டங்கள், துன்பங்களின்போது பொறுமையைக் கடைப்பிடித்து, தான் தொழுத தொழுகையை (செய்த நல்லமலை) முற்படுத்தி பார்த்திக்கலாம்.
யா அல்லாஹ் நோயைத் தந்து என்னை சோதித்தபோது பொறுமைiயாக இருந்து உன் திருப்தியை நாடி சகித்துக் கொண்டேன். எனது இந்த பொறுமையை முன்வைத்து உன்னிடம் எனது இப்போ துள்ள இந்தத் தேவையை கேட்கிறேன் என பிரார்த்திக்கலாம். (இதுபோன்ற வாசக அமைப்பில் கேட்கலாம்.)
பிரார்த்தனையின்போதும் அல்லாஹ் விடம் கையேந்தி துஆ கேட்கும்போதும் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது சிறப்புக்குரிய பெயர்களை (அஸ்மாஉல் ஹுஸ்னா) கூறி பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் உண்டு. எனவே அந்த அழகிய பெயரைக் கொண்டே அவனை அழையுங்கள். (7:180)
நபியே! நீர் கூறும், நீங்கள் அல்லாஹ் என்று அழைத்தாலும் சரி! அர்ரஹ்மான் என்று அழைத்தாலும் சரி! எந்தப் பெய ரைக் கூறியும் (அவனை) அழையுங்கள். அவனுக்குரிய பெயர்கள் அனைத்தும் நல்லவைதாம். (17:110)
ஒவ்வொரு இறைவிசுவாசியான ஆணும் பெண்ணும், தான் செய்கின்ற நல்லறங்களை முன்வைத்தே அல்லாஹ் விடம் கேட்பதற்கு உரித்துடையவர்கள். “நான் செய்த நல்லமல்களுக்காக உன்னிடம் என் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்கிறேன்” என்றே பிரார்த்திக்க வேண்டும். அப்படி பிரார்த்திக்குமாறு குர்ஆனும் ஹதீஸும் வழிகாட்டுகிறது. மேலேயுள்ள 5:35 வசனமும் நேரடியாக அப்படித்தான் கட்டளையிடுகிறது.
மூன்று குகைவாசிகள் தாங்கள் செய்த நல்லறங்கள் குறித்து அல்லாஹ்விடம் உதவி தேடிய போது உதவி கிடைத்தது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் பின்வருமாறு புகாரியில் பதிவாகியுள்ளது.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கின்றார்கள்:
“உங்களுக்கு முன் வாழ்ந்தோரில் மூன்று நபர்கள் (வெளியூர்) சென்றார்கள். செல்லும் வழியில் ஒரு குகையில் இவு தங்கும்படியான (சூழல்) ஏற்பட்டு, அதில் அவர்கள் நுழைந்தார்கள். (அப்போது) மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து, அவர்கள் இருந்த குகையின் வாசலை அடைத்துவிட்டது. அப்பொழுது அவர்கள், “நாம் செய்த செயல்களில் நல்லதைக் கூறி அல்லாஹ்விடம் நாம் பிரார்த் தனை செய்தாலே தவிர, இந்தப் பாறையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது” என்று (தங்களுக்குள்) பேசிக் கொண்டார்கள். (பின்னர் ஒவ்வொருவராக தாங்கள் செய்த அமலை முன்வைத்து உதவி தேடி பிரார்த்திக்கலானார்கள்.)
“இறைவா! எனக்கு வயதான பெற்றோர் உண்டு, அவ்விருவரும் உண்ணும் முன் குடும்பதாருக்கோ, ஊழியர்களுக்கோ நான் பால் தர மாட்டேன். ஒருநாள் விறகு தேடி வெகு தூரம் சென்றுவிட்டேன். இரவு கடந்துவிட்டது. என் பெற்றோருக்காக நான் பாலைக் கறந்து எடுத்து வந்தேன். இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். எழுப்ப மனமில்லாமல் அவர்கள் விழிக்கும் வரை காத்திருந்தேன். அதற்கு முன் என் குடும்பத்தினருக்கு அதனைக் கொடுக்க விருப்பமில்லை.
இறுதியில் காலை நேரமும் வந்துவிட்டது. குழந்தைகள் என் காலடியில் பசியுடன் தூங்கிவிட்டார்கள். என் பெற்றோர் விழித் தனர். இருவரும் பாலை அருந்தினார்கள். இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால் இந்தப் பாறை மூலம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடையை நீக்குவாயாக!” என்று அவர்களில் ஒருவர் பிரார்த்தித்தார். உடனே அதிலிருந்து வெளியே வர இயலாத அளவுக்கு பாறை சிறிது விலகியது.
“இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். (மற்றொரு அறிவிப்பில், ஆண்கள் பெண்களை விரும்புவதில் கூடுதல் நிலை இருப்பது போலவே.) அவளை அடைய நான் விரும்பினேன். (என் ஆசைக்கு இணங்க மறுத்தவளாக) என்னிடமிருந்து விலகி விட்டாள். பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். “அவளும் நானும் தனியே இருப்பது” என்ற நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன். (மற்றொரு அறிவிப்பில், அவளின் இரண்டு கால்களுக்கிடையே உட்கார்ந்தேன்.) அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் நீங்கிவிட்டேன். அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று மற்றொருவர் பிரார்த்தித்தார். இருப்பினும் அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை சற்று விலகியது.
“இறைவா! பல கூலியாட்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தேன். அவர் களின் கூலியை ஒருவரைத் தவிர அனை வருக்கும் கொடுத்துவிட்டேன். தனக்குரியதை விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார். அவரது கூலியை தொழிலில் பயன்படுத்தி னேன். அதிலிருந்து லாபம் பெருகியது. சில காலம் கழிந்தது. என்னிடம் அவர் வந்தார். “அல்லாஹ்வின் அடியாரே! என் கூலியை எனக்குத் தந்திடுவீராக!” என்று கூறினார். “நீ பார்க்கும் இந்தச் (சொத்து) அனைத்தும் உன்னுடையதுதான். ஒட்டகம், மாடு, ஆடு, அடிமை அனைத்தும் உமக்கே!” என்று கூறினேன். “உன்னை நான் கேலி செய்யவில்லை” என்று விஷயத்தைக் கூறினேன். உடனே அவர் அனைத்தையும் எடுத்துக் கொண்டார். அதிலிருந்து எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்தி ருந்தால், நாங்கள் இப்பொழுது உள்ள இந்த நிலைமையை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று மூன்றாவது நபர் பிரார்த்தித்தார். உடனே பாறை விலகியது. மூவரும் குகையை விட்டு வெளியேறினார் கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி: 2215, 2272, முஸ்லிம் 2743)
இம்மூவரும் தாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி செய்த சேவைககாக நற்கூலியை கேட்டு பெறும் சந்தர்ப்பத்தை அல்லது சூழலை நபியவர்கள் அழகாக தெளிவுப்படுத்துகிறார்கள்.
உளப்பூர்வமாக அல்லாஹ்வை அஞ்சி காரியமாற்றும் போது அதற்கான பிரதிபலனை அல்லாஹ் இம்மையிலே காட்டிவிடுகிறான் என்பதற்கு இந்த ஹதீஸ் போதிய சான்றாகும். மனிதன் அல்லாஹ்வின் திருப்தியை நோக்காக அமல் செய்யும் போது இக்கட்டான சூழலிலும் அம் மனிதனுக்கு அல்லாஹ் நன்றி பாராட்டும் முகமாக அவனுடைய துஆவை ஏற்று உதவியளிக்கிறான்.
தாங்கள் செய்கின்ற நல்லமல்கள் மூலம் இம்மையிலும் பலனை அடைந்து கொள்ள முடியும் என்ற நன்செய்தியை அறியாத பலர், மரணித்துப் போன நல்லடியார்கள் எனக் கூறப்படுகின்ற கப்றுகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றவர்களின் பெயர்களால் அவர்களின் பொருட்டால் பிரார்த்திக்கிறார்கள். “இந்த அவ்லியாவின் பெயரால் இந்த நாதாவின் பெயரால் இந்த ஷைக் கின் பெயரால் உன்னிடம் கேட்கிறேன். என் தேவைகளை யா அல்லாஹ் நிறை வேற்றித் தா!” என்று கேட்கிறார்கள்.
வஸீலா என்றால் இன்னுமொருவர் மூலம் உதவி பெறல் என்ற அர்த்தம் இருக்குமாக இருந்தால் நபியவர்கள் யார் மூலம் உதவி தேடியிருப்பார்கள்? விசுவாசிகளே அல்லாஹ்வை அஞ்சுங்கள் வஸீலா தேடுங்கள் எனும் போது அதில் நபியவர்களும் உள்ளடங்குகிறார்களே. முதலாவது விசுவாசி அவர்கள் தானே! அவர்கள் மரணித்துப்போனவர்களை அழைத்தார்கள் என்று சொல்லலாமா?
அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்டு ஈமானின் அடிப்படையில் செயலாற்றும் போது அச்செயலை முற்படுத்தி அல்லாஹ்விடம் கேட்க வேண்டுமா? அல்லது மரணித்துப் போன ஒருவரின் பெயரால் கேட்க வேண்டுமா? என சிந்திக்க வேண்டும்.
நான் செய்கின்ற நல்ல அமல்கள், இபாதத்கள் என்னை நரகிலிருந்து காப்பாற்றி சுவனத்துக்குள் நுழையச் செய்யும் எனும் போது மரணித்தவனின் பெயரால் கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரால் நான் ஏன் கேட்க வேண்டும்.? அவர் பெயரால் கேட்க வேண்டும் என்றால் நான் ஏன் அமல் செய்ய வேண்டும்? நான் செய்யும் அமல்கள் எனக்குப் பிரயோசனம் தரும் என அல்லாஹ்வும் அவனது தூதரும் வாக்குறுதி தரும்போது போது இறந்து போனவர்களை ஏன் அழைக்க வேண்டும்?
கப்ரில் அடக்கம் பண்ணப்பட்டவர் உயிரோடு பூமியில் வாழும்போது அவர் செய்த நல்லமல்களை வைத்து அவர் அல்லாஹ்விடம் கேட்பதற்கு தகுதியுடையவராக இருந்தது போலவே -நல்லவராகப் போய் சேர்ந்தது போலவே- நானும் உயிரோடு வாழும்போது என்னுடைய நல்லமல்களை முன்வைத்து அல்லாஹ்விடம் துஆ கேட்பதற்கும் நல்ல ஸாலிஹான மனிதனாகப் போய்ச் சேர்வதற்கும் உரித்து டையவனாக இருக்கிறேன். இந்த அம்சத்தைப் புரிந்தாலே வஸீலா அர்த்தம் தெளிவாகப் புரிந்து விடும்.
உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்கு முன்) இறந்தும் அப்பெண் (தாய்) நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால் அவர் சுவர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களிடம் கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?” என்று கேட்டார். இரு பிள்ளைகள் இறந்தாலும்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
மூன்று குழந்தைகளை மரணிக்கச் செய்த சோதனைக்கு ஆளாக்கும்போது அந்த சோதனையை பொறுமையாக ஏற்று அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்கும் பெண்ணுக்கு சுவனத்தை அல்லாஹ் கொடுக்கிறான்.
இச்சோதனை என்பது ஒரு முஃமி னுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறு வதற்கான வழியேயல்லாமல் தண்டனையல்ல. பெரிய இழப்பை இழந்தபோதும் மனம் தளராது அல்லாஹ்விடம் கையேந்தினால் அல்லாஹ் பதிலளிக்கிறான். நல்ல அமல்கள் செய்கின்ற மனிதனுக்கு அல்லாஹ்வின் நெருக்கம் இதன்போது கிடைக்கிறது.
“சிறிதளவு பயந்தாலும் பசியாலும் உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்நிலைகளில்) பொறுமையை மேற்கொள் கின்றவர்களுக்கு (நபியே!) நீ நற்செய்தி கூறுவீராக. அவர்கள் (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பச் செல்வோராய் இருக்கிறோம் என்று கூறுவார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இரட்சகனிடமிருந்து நல்வாத்துகளும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்த கையோர் தாம் நேர்வழி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 2:155)
சோதனைகளைக் கண்டு துவண்டு விடாமல் படைத்தவனாம் அல்லாஹ்வின் பக்கம் மீளும்போது “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என கூறும்போது அல்லாஹ்வின் அருளும் நல்வாழ்த்தும் கிடைக்கிறது. பொறுமையை கைக்கொள்ளும் ஒவ்வொரு ஆண், பெண் ணுக்கும் இந்த மகத்தான கூலியும் அல்லாஹ்வின் நேசமும் கிடைக்கிறது.
நான் நல்லமல் செய்துவிட்டு -மரணித்து அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரால்- என் தேவையை நிறைவேற்றித் தா! என கேட்பதுதான் அறிவுள்ள செயலாகுமா? அப்படி கேட்கச் சொல்வதும் அறிவார்ந்த செயலாகுமா?


.