கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த உம்மு நயீமா அவர்கள் காலமானார். அன்னார் ஓகடபொளையைச் சேர்ந்த தாஹா நாநா அவர்களின் மனைவியும் கஹட்டோவிடாவைச் சேர்ந்த நயீம் நாநா அவர்களின் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு (29.07.2011) 10.00மணியளவு முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்த நிம்மதியான கப்றுடைய வாழ்வை வாழ அருள் புரிவானாக!

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நஜீம் (ஜே.பி) அவர்கள் அமோக வெற்றி!



நேற்று நடைபெற்ற 65 தொகுதிகளில் உள்ள பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட எமதூரைச் சேர்ந்த சமாதான நீதிவான் சகோதரர் நஜீம் அவர்கள் சுமார் 4050விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் காட்சி சார்பாகப் போட்டியிட்டவர்களுல் இரண்டாம் இடத்தை இவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட திஹாரியைச் சேர்ந்த சகோதரர் அஷ்ரப் அவர்களும் 4ஆம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கி்டைத்தள்ள 5ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் கமால் அப்துல் நாசா அவர்கள் இம்முறை குறைவான விருப்பு வாக்குகள் பெற்றமையினால் தோல்வியடைந்துள்ளார். எமது இணையத்தள கருத்துக் கணிப்பீட்டிலும் சகோதரர் நஜீம் அவர்கள் முன்னணியில் இருந்து வந்தமை குறிப்பிடத் தக்கது. 
சகோதரர் நஜீம் அவர்கள் எவ்வகையான சேவைகளை செய்தல் வேண்டும் என எமது வாசகர்களின் சிறந்த ஆலோசனைகளை எமது தளத்தினூடாக நாம் கருத்தக்களை பெற தீர்மாணித்துள்ளோம். எனவே வாசகர்களாகிய உ ங்களின் சிறந்த ஆலோசனைகளை எமக்கு அனுப்பி எமது ஊரின் முன்னேற்றத்தில் பக்களிப்பு செய்யுமாறு உங்களிடம் வேண்டுவதுடன் அமோக வெற்றியுடன் அரசியல் வாழ்வில் முதற்படி எடுத்து வைத்துள்ள நஜீம் நாநாவின் சேவைகள் மேலும் தொடர  எமது தளம் சார்பாக வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!

சிந்திக்க ஒரு நிகழ்வு, உண்மைச் சம்பவம்



எமது கஹட்டோவிடாவின் பக்கத்துக் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வு முஸ்லிம்களாகிய எம்மை அதிர்ச்சியடைய வைத்த அதே நேரம் சற்று சிந்திக்கவும் செய்தது. .
பல வருடங்களாகப் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடாத்தி வந்த ஒரு குடும்பம் திடீரென கிறிஸ்தவ மதத்தைத் தழுவ முற்பட்டதே அந்நிகழ்வாகும். எனினும் ஒரு சிறந்த இஸ்லாமிய இயக்கத்தின் துரித நடவடிக்கையினால் இக்குடும்பத்தினரின் ஈமான் பாதுகாக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இம்முயற்சியினால் எமது அனைவரினதும் ஒரு பொறுப்பு நீங்கியது எனலாம்.அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக!

இச்சம்பவம் எமக்குணர்த்தும் பாடம்தான் என்ன? வறுமையில் வாடும் இதுபோன்ற பல குடும்பங்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவர்கள் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதே கிடையாது என்பது கவலைக்குறிய ஒரு விடயமாகும். வருடந்தோறும் பல உம்றாக்களையும் பல ஹஜ்களையும் நிறைவேற்றும் தனவந்தர்கள் தமத பொருளாததரத்தை இதுபோன்றவர்களின் நலன்புரிகளிற்கு செலவிட்டால்தான் என்ன? எமது சமூகத்திலுள்ள தனவந்தர்களையும் வழிநடாத்த சமூகப்பற்றுள்ள ஒரு புத்தி ஜீவிகள் அமைப்பு அவசியமானது என்பதை இவை எமக்கு உணர்த்தகின்றன. காலப் போக்கில் இந்நிலைமை மாற்றியமைக்கப்படாவி்ட்டால் இது போன்ற நிகழ்வுகள் எமதூரிலும் நடைபெறும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எமதூரின் பள்ளிவாசல்கள் தமது அங்கத்தவர்கள் விடயத்தில் மிகக் கவணமெடுத்து அவர்களின் நலன்புரியில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

கஹடோவிட மகளிர் கல்லூரியின் பிறிதொரு சாதனை

 சமீபத்தில் நடைபெற்ற மாகாண மட்டங்களுக்கிடையிலான கணிதப் போட்டியில் கஹடோவிட மகளிர் கல்லூரி மூன்று முதலிடங்களைப் பெற்று அகில இலங்கை ரீதியாக நடைபெற இருக்கும் தேசிய கணிதப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. மேற்படி சாதனைகளைப் புரிந்து பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடித்தந்த சகோதடிகளான; எம்.ஏ.எப். பஹ்ஜத்(தரம் 6), எம்.எஸ்.எப். ஸமீரா (தரம் 9), ஏ.ஆர்.எப். மித்ஹா (தரம் 10) ஆகியோரை நாம் மனதார வாழ்த்துகிறோம்.

உயிர் பெருமா பள்ளிவாசல்களின் சம்மேளனம்…..?

கஹட்டோவிடாவில் தீமைகள் கலையப்பட்டு ஆரோக்கியமானதொரு சூழல் உருவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதே கஹட்டோவிட, ஓகொடபொள பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகும். இப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தால் பாரியதொரு நற்பணி நடைபெறப் போவதையிட்டு இந்த ஊரே மகிழ்ச்சியடைந்தது எனலாம். எனினும் பள்ளிவால்கள் சம்மேளனத்தின் தற்போதைய மந்த நிலைமை இவ்வெதிர்பார்ப்புக்களை சிதறடித்துள்ளதாக பரவலாகக் கருத்துத்கள் தெரிவிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
எது எப்படியிருப்பினும் ஊரின் அண்மைக்கால நிகழ்;வுகளை அவதானிக்கும்பொழுது பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயற்பாடு துறிதப்படுத்தப்படல் அவசியமாகின்றது என்பதை காணக் கூடியதாகவுள்ளது. இளைஞர்கள் மத்தியில் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் காதல் தொடர்பானது மிக மோசமான விளைவுகளில் முடிவதுடன் , இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைகளாக மாறிவருவதையும் காண முடிகின்றனது. மட்டுமின்றி புகைத்தல் இளைஞர்கள் மத்தியில் சர்வசாதாரணமான ஒரு விடயமாக மாறியிருப்பதுடன் சினிமாவை சித்தரிக்கும் ஒரு வாழ்க்கையை நமது இளைஞர்கள் வாழ்கிறார்கள் என்றாலும் மிகையாகாது. எனவே எமது இன்றைய இளைஞர்களை வழிகாட்டி நெறிப்படுத்தி ஆரோக்கியமான ஒரு சமுதாயமாக மாற்ற பள்ளிவாசல்கள் சம்மேளனத்தில் தலைமையில் எமது ஊரின் நலன் விரும்பிகள் ஒன்றினைந்து செயற்படுது காலத்தின் தேவையாகும்