கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சிந்திக்க ஒரு நிகழ்வு, உண்மைச் சம்பவம்



எமது கஹட்டோவிடாவின் பக்கத்துக் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்வு முஸ்லிம்களாகிய எம்மை அதிர்ச்சியடைய வைத்த அதே நேரம் சற்று சிந்திக்கவும் செய்தது. .
பல வருடங்களாகப் பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடாத்தி வந்த ஒரு குடும்பம் திடீரென கிறிஸ்தவ மதத்தைத் தழுவ முற்பட்டதே அந்நிகழ்வாகும். எனினும் ஒரு சிறந்த இஸ்லாமிய இயக்கத்தின் துரித நடவடிக்கையினால் இக்குடும்பத்தினரின் ஈமான் பாதுகாக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இம்முயற்சியினால் எமது அனைவரினதும் ஒரு பொறுப்பு நீங்கியது எனலாம்.அவர்களுக்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக!

இச்சம்பவம் எமக்குணர்த்தும் பாடம்தான் என்ன? வறுமையில் வாடும் இதுபோன்ற பல குடும்பங்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் இவர்கள் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதே கிடையாது என்பது கவலைக்குறிய ஒரு விடயமாகும். வருடந்தோறும் பல உம்றாக்களையும் பல ஹஜ்களையும் நிறைவேற்றும் தனவந்தர்கள் தமத பொருளாததரத்தை இதுபோன்றவர்களின் நலன்புரிகளிற்கு செலவிட்டால்தான் என்ன? எமது சமூகத்திலுள்ள தனவந்தர்களையும் வழிநடாத்த சமூகப்பற்றுள்ள ஒரு புத்தி ஜீவிகள் அமைப்பு அவசியமானது என்பதை இவை எமக்கு உணர்த்தகின்றன. காலப் போக்கில் இந்நிலைமை மாற்றியமைக்கப்படாவி்ட்டால் இது போன்ற நிகழ்வுகள் எமதூரிலும் நடைபெறும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எமதூரின் பள்ளிவாசல்கள் தமது அங்கத்தவர்கள் விடயத்தில் மிகக் கவணமெடுத்து அவர்களின் நலன்புரியில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

1 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும்.

அல்லாஹுத்தஆலா ஈமான் கொண்ட முஸ்லிம்களை அவற்றின் தன்மையினை அறிவதற்காக அவர்களுக்கு அதிகப்படியான செல்வத்தையும், வருமைய்யினைய்யும் கொடுத்து சோதிப்பான்.

இஸ்லாத்தை விளங்கி உள்ளச்சத்தோடு ஈமான்கொண்டுள்ள மனிதர்களுக்கு வறுமை என்பது அவர்களுக்கு கிடைத்த பாக்கியமாக எடுத்துக்கொள்வான் ஏனெனில் அவன் வறுமையில் செய்கின்ற நல்ல செயல்களுக்கு அல்லாஹ் இரட்டிப்பான கூலியினை வழங்குவான்.

இதற்கு சகாபாக்களின் சரித்திரங்கள் ஏராளம்.

இஸ்லாத்தை பெயரளவில் ஏற்றுக்கொண்டு தொழுகையே இல்லாமல், நோன்பென்றதே பிடிக்காமல் வாழும் சில முஸ்லிம்கள் இவ்வாறான ஷைத்தானின் சதிக்கு இலகுவில் மாட்டிக்கொள்வார்கள். ( நலீமியாவில் படித்த ஒரு சகோதரர் பல ஆண்டுகளுக்கு முன்னாள் கிறிஸ்தவ மதத்தை தழுவியதாக கிடைத்த தகவல்)உண்மை நிலை அல்லாஹ் அறிவான்.
எவ்வளவுதான் படித்தாலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேரானவளியினைக்காட்டுவான் இதற்கு வரலாற்று உண்மை சம்பவங்கள் ஏராளம்.
இருந்தாலும் ஊரில் உள்ள சகாத் வழங்கும் அமைப்புக்கள் ஒற்றுமையுடன்செயல்படுவது அவசியமான ஒன்றாகும். 

Post a Comment