கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நஜீம் (ஜே.பி) அவர்கள் அமோக வெற்றி!



நேற்று நடைபெற்ற 65 தொகுதிகளில் உள்ள பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட எமதூரைச் சேர்ந்த சமாதான நீதிவான் சகோதரர் நஜீம் அவர்கள் சுமார் 4050விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் காட்சி சார்பாகப் போட்டியிட்டவர்களுல் இரண்டாம் இடத்தை இவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட திஹாரியைச் சேர்ந்த சகோதரர் அஷ்ரப் அவர்களும் 4ஆம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கி்டைத்தள்ள 5ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் கமால் அப்துல் நாசா அவர்கள் இம்முறை குறைவான விருப்பு வாக்குகள் பெற்றமையினால் தோல்வியடைந்துள்ளார். எமது இணையத்தள கருத்துக் கணிப்பீட்டிலும் சகோதரர் நஜீம் அவர்கள் முன்னணியில் இருந்து வந்தமை குறிப்பிடத் தக்கது. 
சகோதரர் நஜீம் அவர்கள் எவ்வகையான சேவைகளை செய்தல் வேண்டும் என எமது வாசகர்களின் சிறந்த ஆலோசனைகளை எமது தளத்தினூடாக நாம் கருத்தக்களை பெற தீர்மாணித்துள்ளோம். எனவே வாசகர்களாகிய உ ங்களின் சிறந்த ஆலோசனைகளை எமக்கு அனுப்பி எமது ஊரின் முன்னேற்றத்தில் பக்களிப்பு செய்யுமாறு உங்களிடம் வேண்டுவதுடன் அமோக வெற்றியுடன் அரசியல் வாழ்வில் முதற்படி எடுத்து வைத்துள்ள நஜீம் நாநாவின் சேவைகள் மேலும் தொடர  எமது தளம் சார்பாக வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!

2 comments:

உடுகொட said...

நஜீம் நானா அவர்களது வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்

Anonymous said...

வெற்றி பெற்ற நஜீம் நானா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். வித்தியாகமான ஒரு அரசியல்வாதி என்றரீதியில் அவர் என்ன சாதிக்கப் போகிரார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Post a Comment