கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிடாவின் நுழைவாயில் நீரில் மூழ்கியது.

நேற்றிரவு பேய்த கடும் மழையின் காரணமாக மிக நீண்ட இடைவேளையின் பின்பு பாரிய வெள்ள அனர்த்தமொன்று ஊரைத் தாக்கியுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. சரியான சேதவிபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாகக் அவற்றைவழங்க முயற்சிக்கின்றோம்.

வெள்ளத்தின் பாதிப்புக்களை நிழற் படமாக இங்கு காணலாம்.









விசேட அறிவித்தல்
பெரும்பாலான வாசகா்களின் வேண்டுகோலுக்கிணங்க நமது தளத்தின் முகப்பு வடிவமைப்பு அனைத்தையும் மாற்றியமைத்து புதுப் பொழிவுடன், புதிய பல விடயங்களைத் தாங்கியதாக ஆக்குவதற்கான மீள் நிர்மானப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரிரு நாட்களில் புதுமைகள் காண காத்திருங்கள்.

செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையாகிப்போன மார்க்கப் போதனைகள்


கடந்த சாதாரண தரப் பரீட்சையில் குறிப்பிட்ட தொகை மாணவர்கள் இஸ்லாம் பாடத்திலும் சித்தி பெறவில்லையென்ற தகவல் கேட்டதும் மேல் சிலிர்த்து விட்டது. ஒரு காலத்தில் கணிதப்பாடமே சற்று கடினமாகவிருந்த சரித்திரத்தை நாம் அறிகின்றோம். தற்போது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் எனத் தொடர்ந்த கஷ்டமான பாடங்களின் பட்டியலில் புதிதாக வரலாறு, தமிழ் என்ற பாடங்களும் சேர்ந்து விட்டதை நாம் ஏற்கனவே சுற்றிக் காட்டியிருந்தோம். எது கஷ்டமாக இருந்தாலும் இஸ்லாம் பாடம்தான் மாணவர்களுக்கு ஓரளவு கைகொடுக்கக் கூடியதாகவிருந்தது. தற்போது அதுவும் கணிதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது போலத்தான் தோன்றுகின்றது. இஸ்லாம்பாடத்தில் கோட்டைவிடும் மாணவர்களின் தொகை வருடாவருடம் கூடிக் கொண்டே செல்கின்றது. என்னதான் நடக்கின்றது…? இந்த மாணவர்கள் என்னதான் செய்கின்றார்கள்? என்ற கேள்விகளும் நீண்டுகொண்டுதான் செல்கின்றன. ஏதோ ஓரடிப்படையில் பள்ளிவாசல்களிலும் குர்ஆன் மத்ரஸாக்களிலும் ஓரளவு மார்க்க அறிவை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்துடன் பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடம் கடைசிப் பாடமாகவேனும் கற்பிக்கப்படுகின்றது. இத்துனை முயற்சிகளும் செல்லாக்காசாகப் போய்விட்டதையே இந்த மாணவர்களின் பெறுபேறுகள் நமக்கு உணர்த்துகின்றன. யாரிடம் போய் எதைச் சொல்வது என்ற கூறி சும்மா இருக்க முடியாது. மற்றைய பாடங்கள்போல இஸ்லாம் பாடத்தையும் அதிக அக்கரையுடன் கற்கும் ஆவல் மாணவர்களிடையே உண்டாக்கப்படல் வேண்டும். எனவே பசியும் தூக்கமும் தலைக்கேறிய கடைசிப்பாடநேரத்தில் இஸ்லாம் பாடம் கற்பிக்கப்படுவது துடைத்தெறியப்படல் வேண்டும். இது நாமே நமது மார்க்கத்தைக் கேலி பன்னுவதாக ஆகிவிடமாட்டாதா என்பதையும் ஒரு கனம் நாம் யோசிக்க வேண்டும். கடமைக்கா என்றல்லாமல் மாணவர்களின் சீர்திருத்தத்தை மனதிற்கொண்டு நடைமுறைகளோடு தொடர்பு படுத்தி சிறந்த முறையில் இஸ்லாம் பாடம் மாணவர்களிற்கு கற்பிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நெறிமுறைகள் வழிகாட்டல்களைக் கொண்ட பண்பாடு, கலாசாரம் என்பவற்றைப் பிரதிபலிக்கும் சூழல் பாடசாலைகளில் காணப்படல் வேண்டும். கிறாஅத்துடன் ஆரம்பித்து துஆவுடன் முடிவடைந்து விட்டால் ஏதோ இஸ்லாமியப் பண்பாட்டையே நடைமுறைப்படுத்தி விட்டதாக நாம் மெச்சிக் கொள்வது வடிகட்டிய முட்டாள்தனமாகும். முன்மாதிரியான கடமையுணர்வுள்ள ஆசிரியர் குழாம் செயலாற்ற முனைவார்களானால் அது மாற்றத்திற்கான விடிவெள்ளிகளை நம் வானில் புலரச் செய்யும். இல்லாது போனால் பாதாள உலகக் கும்பல்களையும் காடயர்களையும் பயிற்றவிகும் தளமாக அல்லது சமூக விரோதிகளின் உறைவிடமாக பாடசாலைகள் மாறிப் போவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள்.
ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான்
(அல் குர்ஆன்)

படுபயங்கரமாக மாணவர்களைத் தாக்கும் ஒரு நோய் ரீடிங் போபியா


நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் சாதக, பாதகங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நிகரானவைகளாகும். குறிப்பாக கற்றலோடு தொடர்பான தொழிநுட்ப விருத்தயானது மனிதனுக்குப் பல சௌகரியங்களை வழங்கியிருந்தாலும் மனிதன் தனது சொந்த முயற்சியைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க கணினி மயமான கற்றல், கற்பித்தல் முறைகளில் தங்கியிருப்பதானது இயற்கையான மனித உழைப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக மாறிவிட்டது. இது மனித குலத்துக்கே ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தலாகின்ற அதே சமயம் திறமைகள் பல கொண்ட மனித சிந்தனைக்கும். உழைப்புக்கும் முடிச்சுப் போடுவதாகவும் அமைகின்றது. இதனடிப்படையில் இதை சமகால மாணவ சமூகத்திலும் தெளிவாகவே காணக் கிடைக்கின்றது.
அண்மைய சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை அவதானிக்கும் போது வரலாறு, தமிழ் போன்ற பாடங்களில் கணிசமான மாணவர்கள் சித்திபெறவில்லை என்பதை காணலாம். இதற்கான காரணங்களை ஆராயும்போது அதிர்ச்சியான பல முடிவுகள் கிடைத்துள்ளன. பாடங்களை வாசித்து தேவையான தகவல்களை சேமித்துக் கொள்ள முடியாமைதான் பெரும்பாலான மாணவர்கள் தாம் சித்தியடையாமைக்குக் கூறும் காரணமாகவுள்ளது. வாசிப்புப் பழக்கம் இல்லாத போது பாடங்களைச் சரிவரக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமற் போகின்றது. இதனால் பாடங்களை முழுமையாக மனனமிட்டுக் கொள்ள மாணவர்கள் முயற்சிக்கின்றனர். இது கற்றல் நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே சாராம்சமாகக் கூறுவதென்றால் வாசிப்பென்றால் ‘நஞ்சு’ என்ற பிரமை மாணவர் உள்ளங்களில் இருந்து அகற்றப்பட்டு வாசிப்பில் ஆர்வங்கொண்டவர்களாக மாணவர்கள் மாற்றப்படுவது மிக மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக உயர்தர படிப்புக்களை மேற்கொள்வதற்கு வாசிப்பு இன்றியமையாத ஒன்றாகின்றது. எனவே பாடசாலை மட்டத்திலும், ஊர்மட்டத்திலும் வாசிக்கின்ற சமூகத்தை துரித கதியில் உருவாக்குதல் என்ற அடிப்படையில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மிக வேகமாக செயற்படுத்தப்படுதல் வேண்டும். இதன் முதற்கட்டமாக முடிந்தளவு சகல வசதிகளையும் கொண்டமைந்த பொது நூலகமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரிகைகளைவிட புத்தகங்களே பிரதான தேவையாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி


இணைய உறவுகளின் உள்ளங்களில் ஆழவேறூன்றி வானுயர விபாகிக்கவிருக்கும் இந்த விருடசத்தில் மற்றுமொரு கிளை தளைக்கப் போகின்றது. வித்தியாசம், புதுமை, சுவாரஸ்யம் எல்லாம் கலந்த ஒரு புதிய பயணத்தின் வருகையை வெகு விரைவில் எதிர்பாருங்கள்…..

கஹட்டோவிடாவில் நல்லொழுக்கமுள்ள சமூக சூழலை உருவாக்கல், சாத்தியங்களும், சவால்களும்


பல்வேறு துறைசார் புத்திஜீவிகளையும்,மார்;க்க அறிஞாகளையும் சிறந்த மனிதர்களையும் உருவாக்கிய வரலாறு எமது கஹட்டோவிடாவிற்கு உண்டு. எனினும் தற்போது வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, பாடசாலை முதல் ஆற்றங்கரை வரை பெருகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், மாணவரிடையே ஏற்பட்டுள்ள கல்வி வீழ்ச்சி……. என்று பட்டியல் நீளுமளவுக்கு நமதூரினி பின்னடைவை எதிர்வு கூறும் காரணிகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடரும் பட்சத்தில் கல்வி, கலாசாரம், பண்பாடு, அபிவிருத்தி போன்ற அனைத்து துறைகளிலும் மீளெழ முடியா பாரிய வீழ்;ச்சியை ஊர் சந்திக்க நேரிடும் என்றே கூறவேண்டியுள்ளது. இதைத்தடுப்பதற்கான பல்வேறுபட்ட பிரயத்தனங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு அதை தோல்வியில் முடிந்த போதும் மீண்டும் அவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கு முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றன. அண்மையில் ஊரில் நடைபெற்ற சில சந்திப்புக்கள் இதை உறுதிசெய்திருக்கின்றன. சிறந்த சமூக சூழலை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றமைப்பில் இவ்விவகாரம் தொடர்பான நமது கருதக்துக்களை பகிர்வுக்காய் இங்கு விடுகின்றோம்.

அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு
ஊரில் பரவியிருக்கும் மேற்கூறப்பட்டவை போன்ற சமூக விரோத செயல்களை கண்கானித்து, குற்றச் செயல்களிலீடுபடுவோருக்கெதிராக முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஊரில் காணப்படும் அனைத்து கொள்கைப்பிரிவினரினதும் பிரதிநிதிகளை கொண்ட ஒரு பொதுக்கமிட்டியை உருவாக்குவது பற்றிய ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் இரு வரவேற்கப்பட வேண்டியது என்பதுடன் இதுபோன்ற பொதுக் குழு ஒன்றினாலேயே இப்பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது மறுக்க முடியாததாகும்.

கூட்டமைப்பு சாத்தியமா……..?
மேற்கூறியது போன்ற ஒரு கூட்டமைப்பை கடந்த காலங்களில் ஊரின் நன்மை கருதிப் பல்வேறு விடயங்களுக்காக உருவாக்க முய்ற்சித்து உருவாக்கப்பட்டுமிருக்கின்றது. ஆனால் கொள்கை முரண்பாடுகளினால் இக்கூட்டமைப்புக்கள் நிலைக்கவில்லை. கூட்டமைப்பொன்றை உருவாக்குவதில் இது ஒரு கிளைப் பிரச்சினையென்றாலும், இதவே பிரதான பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இயக்க முரண்பாடுகளிற்கிடையில் உடன்பாடு காண்பது சிக்கலான ஒரு விடயமாகும். ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் தமது செல்வாக்கையே முதன்மைப் படுத்த முயற்சித்தால் அடுத்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் இணங்கிப்போவதில் சில அமைப்பினருக்கு விருப்பமின்மை போன்றன இக்கூட்டமைப்பை உருவாக்கும்போது தீர்வு காணப்படவேண்டிய விடயங்களாகின்றன.
என்ன செய்யலாம்……….?
முன்மாதிரியான, சமூகப்பற்றுள்ள,நல்லுள்ளங்கள் புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்புடனும் கைகோர்த்து இப்பணியை மேற்கொள்ள மனமிறங்கி முன்வருவார்களானால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வழி பிறக்க வாய்ப்புள்ளது. அவரவர் கொள்கைகளை அவரவர் பேணுவதோடு பக்கச் சார்பில்லாத ஒரு உடன்படிக்கையை தயார் செய்து அதனடிப்படையில் பொறுப்புணர்வோடும் இதய சுத்தியுடனும் இப்பிரதிநிதிகள் உழைப்பது அவசியமாகின்றது. இது விடயத்தில் இப்பிரதிநிதிகள் மிகுந்த விட்டுக் கொடுப்புடன் இயங்குவதும் தேவையாகின்றது. பொலிஸாரின் உதவியும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இப்பணியில் வெற்றிக்குப் பிரதானமானவை. பொதுக் கூட்டங்களை நடாத்தி மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதோடு பள்ளிவாசல்கள் மூலமாக அவ்வவ் ஜமாஅத்தினருக்கு இப்பணி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். சமூக விரோதச் செயல்களுக்கான காரணமானவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டு அவற்றை ஒழிப்பதற்கான பொதுத்தீர்;மாணமொன்றை மக்கள் முன்னிலையில் இக்குழுவினர் நிறைவேற்றல் வேண்டும். மென்மேலும் இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று நிலைமைக்கேற்ப மாற்ற நடவடிக்கைகளைக் கையாள வேண்டும்.

முடியாது போனால்……….?
மேற்சொன்னவைகளில் இழுபறி முற்றினால் காலத்தின் தேவையான இந்த சமூகப்பணியை செய்ய முடியாது போக இடமுண்டு. அவ்வாறான ஒரு நிலையேற்படின் நாம் சொல்ல விளைவது இதைத்தான். பள்ளி வாசல் நிர்வாகிகள் தமது நிர்வாகத்தின் கீழுள்ள உறுப்பினர்களை முறையாக அவதானித்து ஊரிலேற்பட்டுள்ள அசாதாரண சூழல் பற்றிய விளக்கங்களையும், தெளிவுகளையும் அவர்களுக்கு வழங்கி, தவறு செய்பவர்களைக் கட்டுப்படுத்த முனைவதுடன் நிர்வகா விதிகளை மீறுபவர்களுக்கெதிராக தகுந்த சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும் செயற்படுமானால் நல்லதொரு சூழல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தென்படலாம். கூட்டமைப்பு உருவாகினோ இல்லையோ இப்பணியில் மிகச் சிறந்ததும், சாத்தியமானதும். இறுதியுமான முறை இந்த முறை மட்டும்தான். எதில் உடண்படாவிட்டாலும் இதில் உடண்படலாம் என்பது திண்ணம். இதிலும் நாம் அசமந்தப் போக்கையே கடைபிடிப்போமானால் ஏற்படப்போகும் பாதிப்புக்கு மறுமையில் நாம் அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்து, நம்மனைவருக்கும் நேரான வழியைக்காட்டி, எமது முயற்சிகள் நிறைவேற அருள் புரிவானாக!

சிற்பிகளைச் செதுக்குவோம் வாருங்கள்…………

கஹட்டோவிட உபதபாலகத்திற்கருகில் பாடாசாலை மாணவர்கள் சிலரும், பாடாசாலை செல்லாத மாணவர்கள் சிலரும் தினமும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவதாகவும் இதன்போது தத்தமது கைத்தொலைபேசியிலுள்ளவற்றை பரஸ்பரம் இந்த இளைஞர்கள் தமக்கிடையே பரிமாறிக் கொள்வதுடன் அக்கம் பக்கத்தவர்களுக்கு இடைஞ்சலாகும் அமைப்பில் கைத்தொலைபேசிகளில் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும் அப்பகுதிவாழ் அன்பர்கள் சிலர் நமக்குத் தெரிவித்துள்ளார்கள். இவ்விளைஞர்களின் இந்தக் கும்மாளங்கள் இரவு ஒன்பது மணியையும் தாண்டி விடுகின்றமையால் அயலவர்களுக்கு பலத்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாடசாலைக்குள்ளும், வெளியிலும் உலாவரும் கிசுகிசுப்புக் கடிதங்களையும் இந்த சந்திப்பின்போது இவ்விளைஞர்கள் தம்மிடையே பரஸ்பரம் காண்பித்துக் கொள்வதாகவும் சொல்லப்படுகின்றது. தலைசிறந்த சமூக கூழலொன்றை உருவாக்குவதில் இது போன்ற நடத்தைகள் பாரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கடந்த காலங்களில் பாடசாலையில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், அண்மைக்கால க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் போன்றன நமது இளைய சமூகம் ஒழுக்கத்திலும், கல்வியிலும் தடம் புரண்டு செல்கின்றது என்பதை உறுதி செய்துள்ளன. ஆகவே பெற்றோர், பள்ளி வாசல்கள், ஊர்ப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் ஒன்றினைந்து இந்த இளைஞர்களினதும் நமது ஊரனதும் வளமான எதிர்காலம் தொடர்பில் கவனமெடுத்து அவர்களை நெறிப்படுத்துவது காலத்தின் அத்தியவசியத் தேவையாகின்றது.

கஹட்டோவிடாவின், கழிவகற்றல், வடிகாலமைப்பு என்பவற்றில் சிறந்த முகாமைத்துவம் தேவை

நிலப்பரப்பில் சிறியதாகவிருந்தாலும் தற்போதைய நெருக்கமான குடியிருப்புக்களால் கஹட்டோவிடாவின் பௌதீகம் தொடர்பில் அதிசிரத்தையுடன் கூடிய கவனம் எடுக்க வேண்டிய நேரமும் காலமும் வந்துவிடடதென்றே கூறவேண்டியுள்ளது. குறிப்பாக கழிவகற்றல்,வடிகாலமைப்பு போன்ற துறைகள் தமதூரைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பை கூலங்கள் சிறந்த முறையில் முறையே அகற்றப்படாததன் விளைவாக ஆங்காங்கே வீதிகளில் தேங்கிக்கிடக்கின்றன. பொது மக்களும் தமது வீட்டுக் கழிவுகள் தமது வீட்டைவிட்டு வெளியில் சென்றால் போதும் என்றமைப்பிலேயே நடந்து கொள்கிறார்கள். இதனால் பாரிய சூழல் மாசடைவுக்கு முழு ஊருமே முகங்கொடுக்க வேண்டியிருப்பதுடன் டெங்கு போன்ற உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்கள் கூட உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காண்களில் தேங்குகின்றன. சில பகுதிகளில் பிரதான வீதிகளில் இந் நீர் தேங்குகின்றது. இது நமதூரின் வடிகாலமைப்பு ஒழுங்கீனத்தையே காட்டுகின்றது. ஆகவே இது தொடர்பில் அக்கரையுடன் கூடிய கூட்டுக்கரிசனையொன்று அவசியமாகின்றது. பொதுவான ஒரு பிரச்சினை என்பதனால் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வைக் காண வேண்டியது தேவையாகின்றது. பொதுமக்கள் ஓர் இணக்கத்துக்கு வந்து ஒரு தீர்வைக்கண்டால் அதை அமுலாக்க அரச உதவிகளைப் பெறுவதும் சுலபமாகிவிடலாம். குறிப்பிட்ட சிலர் மட்டும் கவணமெடுப்பதில் பலனேற்படப் போவதில்லை. ஆகவே வாசகர்களுக்கு இது பற்றிய உங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி பாதையில் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக உள்ள ஒரு சிறிய முல்லை எடுத்து வீசுவது ஈமானின் கடைசிக் கிளை என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எமது ஈமானுடன் தொடர்புடைய இந்த விடயத்தில் அனைவரும் அக்கரையுடன் ஈடுபட்டு ஒரு சிறந்த தீர்வைக்காண முன்வரல் அவசியமாகும்.

வெளிநாட்டிலுள்ள கஹட்டோவிட அன்பர்களிற்கு……

நீங்கள் இத்தளத்தினூடாக எமதூரின் அன்றாட முக்கிய நிகழ்வுகளையும் தகவல்களையும் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் கடல் கடந்து வெகு தூரத்தில் இருந்தாலும் உங்களை உங்களது ஊரிற்கு இத்தளம் அழைத்து வருகிறது. எமது அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நாம், தற்போது உங்களுடைய வெளி நாட்டு அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகளை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றோம்.
எனவே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….
உங்களது அனுபவங்களை தட்டச்சு செய்து அல்லது கையெழுத்தில் எழுதி ஸ்கேன் பன்னி எமது மின்னஞ்சல் முகவரியான kahatow@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அறிந்து கொள்ள வேண்டுமாயின் http://kahatoweta.blogspot.com/2010/02/blog-post_4049.html என்ற தளத்தில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களின் அனுபவங்களை நீங்கள் எம்முடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

கஹட்டோவிட நீர் வினியோகத்திட்டம் - மீண்டும் ஆரம்பம்



கஹட்டோவிடாவின் மிகப் பழமையானதும்,நீண்டகாலமாகச் செயலிழந்து போயுள்ளதுமான அல் அமானா நீர் வினியோகத்திட்டம் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளதாக இத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். நீர் பெறப்படும் கிணற்றில் போதிய நீர் காணப்பட்டாலும் கிணறு அசுத்தமடைந்துள்ளதால் அதைச் சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் சேதமடைந்துள்ள நீர்க் குழாய்கள், நீர்த்தாங்கிகளில் தகுந்த திருத்த வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்புணரமைப்புப் பணிகளை அவசரமாக மேற்கொள்வதற்கு செயற்குழு உறுப்பினர்களுடன் பொது மக்களும் தமது பங்களிப்பை நல்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இது போன்ற நீர் வினியோகத்திட்டங்கள் முறையாகச் செயற்படுத்தப்பட்டால் கோடைகாலங்களில் ஊரில் ஏற்படுகின்ற நீர்ப் பற்றாக்குறையை ஓரளவு சீர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாசார சீர்கேட்டுக்கு இது அத்திவாரமாகலாம.;…..?


நமது ஊரில் அமைந்துள்ள மருந்தகத்தில் பணிபுரியும் இரு மாற்று மதப்பெண்களின் நடை, உடை பாவனைகள் மாபெரும் நடத்தைப் பிறழ்வுக்குக்காரணமாக இருப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விரு பெண்களும் நாளுக்கு நாள் அட்டகாசமாகத் தங்களை அலங்கரித்து வருவதும், நிலையத்துக்கு வரும் வாடிக்ககையாளர்களுடன் வரம்பு மீறி சல்லாபிப்பதும் வெகுவாக இளைஞர்களைக் கவருந்திருப்பதாகவும் இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு வாலிபர்கள் பலர் இந்த மையத்துக்கு முன்னால் மாலை வேளைகளில் முகாமிடுவதாகவும் நேரில் கண்டோர் கூறுகின்றனர். எதுவாயினும், பாடசாலைக்கு அருகில் இந்த நிலையம் காணப்படுவதால் எவ்வகையிலும் இந்தப்பெண்களுடைய நடத்தைகள் ஒழுங்கீனமாக இருக்கலாகாது. மாணவ சமூகத்தின் ஒழுக்கம் தொடர்பான விடயம் என்பதால் ஊர் மக்கள் அனைவருக்கும் இது விடயத்தில் பாரிய பொறுப்பிருக்கிறது. மொடலிங் கூத்தாடிகள் போல் ஆடையணியும் இவ்விருவரின் அசிங்கங்களை கண்டும் காணதது போல் இருந்தால் பின் விளைவுகள் படுபயங்கரமாகலாம். கட்டிடத்தை யாரோ வாடகைக்குக் கொடுத்துள்ளார்கள் அவர்களே இதை கவனிக்கட்டும் நமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லையெனக் கூறி யாரும் தப்பி விடவும் முடியாது. முஸ்லிம் கிராமம் என்ற வகையில் நமது கலாசாரம், பண்பாடு ஆகியன மாற்று மதத்தவருக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டுமே தவிர நமது பண்பாட்டு விழுமியங்களைப்பாதிப்பவையாக மாற்று மத சகோதரர்களின் செயற்பாடுகள் ஊருக்குள் இடம் பெருவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.

ரஷ்ய விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி!

பலியான போலந்து அதிபர் லெக் காக்ஸின்ஸ்கி (இடது) தனது சகோதரரும் போலந்து முன்னாள் பிரதமருமான ஜராஷ்லோ காக்ஸின்ஸ்கியுடன் (வலது)...

மாஸ்கோ: போலந்து அதிபர் லெக் காக்ஸின்ஸ்கி இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மனைவி, முக்கிய அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட சுமார் 132 பேர் அந்த விமான விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் ரிஸ்ஸார்ட், நாடாளுமன்றத் துணைத் தலைவர் ஜெர்ஸி ஸ்மஜ்ஸின்ஸ்கி, அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி லாடிஸ்லா ஸ்டாசியக் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

விமான நிலையம் அருகேயுள்ள மரங்களில் அந்த விமானத்தின் இறக்கைப் பகுதிகள் மோதியதால் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் மின்ஸ்க் நகரில் இந்த விமானத்தைத் தரையிறக்கலாம் என்ற யோசனையை மீறி, பைலட் செய்த தவறுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது 22 ஆயிரம் போலந்து ராணுவ அதிகாரிகளை சோவியத் படைகள் படுகொலை செய்ததன் 70வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போலந்து அதிபரும் முக்கிய பிரமுகர்களும் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

போலந்து அதிபர் உட்பட அந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்ததை ஸ்மோலென்ஸ்க் நகர மேயர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், போலந்து நாட்டின் ‘டிவிஎன் 24′ செய்தித் தொலைக்காட்சியும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அதிபரின் மரணச் செய்தி போலந்து நாட்டையே ஸ்தமபிக்கச் செய்துள்ளது. மக்கள் கண்ணீருடன் இச் செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட டுபோலெவ் டியு-154 என்ற விமானத்தில்தான் லெக் காக்ஸிநிக்ஸி பயணித்தார். இந்த விமானம் 40 ஆண்டுகளாக பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளது. பழைய சோவியத் ரஷ்யாவின் நாடுகளுக்கிடையிலும் கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளிலும் இயங்கி வந்தது. கடந்த ஆண்டு இந்த விமானத்துக்கு ஓய்வு தரவேண்டும் என்று கூறப்பட்ட பிறகும், சேவையில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பலியானதாக கூறப்படும் போலந்து அதிபர் லெக் காக்சின்ஸ்கிக்கு வயது 60. கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பொறுப்பை ஏற்றார். அவருடன் பலியான மனைவி மரியா பொருளாதாரத் துறை நிபுணர்.
-என்வழி செய்திகள்

இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சாரா மாலினி பெரேரா...


இலங்கையில் சகோதரி சாரா அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சனை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

சகோதரி சாரா மாலினி பெரேரா (Sister Sarah Malini Perera) பஹ்ரைனில் வாழ்ந்து வருபவர். மூன்று மாத விடுமுறையில் இலங்கை வந்தவர் கடந்த மார்ச் மாதம் இருபதாம் தேதியன்று இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

38 வயதாகும் சகோதரி சாரா புத்தமத பெற்றோர்களுக்கு பிறந்தவர். 1985 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரைனில் வசித்து வருகிறார். "Discover Islam" அமைப்பின் மூலம் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொண்டவர், 1999 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவினார். இவரது பெற்றோரும் நான்கு சகோதரிகளும் பின்னர் வெவ்வேறு காலக்கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று மாத விடுமுறைக்காக இலங்கை வந்தவர், தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சிங்கள மொழியில் எழுதியிருந்த இரண்டு நூல்களை வெளியிட்டார்.
அவை, "From Darkness to Light" மற்றும் "Questions and Answers" என்பதாகும். இந்த நூல்களில் புத்தரைப் பற்றி மனதை புண்படுத்தும் கருத்துக்கள் (Offensive to Buddha) இருப்பதாக புத்தமத அடிப்படைவாத கட்சியான JHU (Jethika Hela Urumaiya) கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் சகோதரி சாரா கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது பற்றி காவல்துறை எந்த ஒரு தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது. தற்போது முப்பது நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் சகோதரி சாரா மாலினி.

தன்னுடைய இந்த புத்தகங்களை கார்கோ மூலம் பஹ்ரைனுக்கு அனுப்பும் போது தான் கைது செய்யப்பட்டதாக அவருடைய மூத்த சகோதரி மர்யமும் அவரது குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.

அந்த புத்தகங்களை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனத்துக்கும் புத்தமத கட்சியான JHU (Jethika Hela Urumaiya) விற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் சகோதரி சாராவை கைது செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சகோதரி சாரா பஹ்ரைனுக்கு திரும்பும் சமயம் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் இருபத்தி நான்காம் தேதி அவரது பஹ்ரைன் "Residency Permit" முடிவடைகிறது. அவர் போய் அதை புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் கைது நடவடிக்கையால் அது முடியாமல் போய்விட்டது. தற்போது அவரால் மீண்டும் பஹ்ரைன் வர முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பஹ்ரைனில் உள்ள அமைப்புகள் இதற்கு தாங்கள் உதவுவதாக அறிவித்துள்ளன.

சகோதரி சாரா மாலினியின் கைதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவர் எதற்கு கைது செய்யப்பட்டார் என்று அவருக்கு தெரிவிக்கப்படவில்லை, கைது செய்த பிறகு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்தப்படவில்லை, அவரது உறவினர் யாருக்கும் அவரைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. முப்பது நாட்கள் காவல் என்றாலும் இது இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் தெரியாது.

பஹ்ரைனைச் சார்ந்த "Discover Islam" அமைப்பு மற்றும் பஹ்ரைன் மனித உரிமைகள் சங்கம் (Bahrain Human Rights Society, BHRS) ஆகியவை, இலங்கை அரசின் இந்த செயல் நியாயமற்றது என்றும், சகோதரி சாராவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு உலகிலுள்ள மனித உரிமை அமைப்புகள் உதவி புரிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக இலங்கையைச் சேர்ந்த அரசு சாராத அமைப்புகளுடன் (NGO - Non Government Organisations) சேர்ந்து பணியாற்ற போவதாகவும் அறிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பஹ்ரைன் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சகோதரி சாரா மாலினியின் புத்தகங்கள் புத்த மதத்திற்கு எதிரானதாக இருக்காது என்று தான் நம்புவதாக BHRS ன் தலைமைச் செயலாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல் தீரசி (Doctor Abdulla Al Deerazi) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணையக்குழு (Sri Lankan Human Rights Commission) தேவையான உதவியை செய்து வருகிறது.

காரணங்கள் கூறாமல் ஒரு பெண்ணை காவலில் வைத்திருக்கும் இலங்கை அரசின் செயல் மிகுந்த வருத்தமளிக்கிறது.

கூடிய விரைவில் சகோதரி விடுவிக்கப் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆச் செய்வோம்....

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Thanks:
1. Brother Rishan Shareef

Source of Information:
1. SL writer who wrote why she embraced Islam was detained for 30 days - Lanka eNews, dated 1st April 2010.
2. Author Sara Malini Perera held 'for offending Buddhists' in Sri Lanka - Times Online, dated 29th March 2010.
3. Sri Lanka urged to free Bahrain Writer - Bahrain Human Rights Society Website.

இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சாரா மாலினி பெரேரா...

இலங்கையில் சகோதரி சாரா அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற பிரச்சனை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.

சகோதரி சாரா மாலினி பெரேரா (Sister Sarah Malini Perera) பஹ்ரைனில் வாழ்ந்து வருபவர். மூன்று மாத விடுமுறையில் இலங்கை வந்தவர் கடந்த மார்ச் மாதம் இருபதாம் தேதியன்று இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

38 வயதாகும் சகோதரி சாரா புத்தமத பெற்றோர்களுக்கு பிறந்தவர். 1985 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரைனில் வசித்து வருகிறார். "Discover Islam" அமைப்பின் மூலம் இஸ்லாத்தை பற்றி அறிந்துக்கொண்டவர், 1999 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவினார். இவரது பெற்றோரும் நான்கு சகோதரிகளும் பின்னர் வெவ்வேறு காலக்கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று மாத விடுமுறைக்காக இலங்கை வந்தவர், தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சிங்கள மொழியில் எழுதியிருந்த இரண்டு நூல்களை வெளியிட்டார்.
அவை, "From Darkness to Light" மற்றும் "Questions and Answers" என்பதாகும். இந்த நூல்களில் புத்தரைப் பற்றி மனதை புண்படுத்தும் கருத்துக்கள் (Offensive to Buddha) இருப்பதாக புத்தமத அடிப்படைவாத கட்சியான JHU (Jethika Hela Urumaiya) கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் சகோதரி சாரா கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இது பற்றி காவல்துறை எந்த ஒரு தகவலையும் வெளியிட மறுத்துவிட்டது. தற்போது முப்பது நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் சகோதரி சாரா மாலினி.

தன்னுடைய இந்த புத்தகங்களை கார்கோ மூலம் பஹ்ரைனுக்கு அனுப்பும் போது தான் கைது செய்யப்பட்டதாக அவருடைய மூத்த சகோதரி மர்யமும் அவரது குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.

அந்த புத்தகங்களை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிறுவனத்துக்கும் புத்தமத கட்சியான JHU (Jethika Hela Urumaiya) விற்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தான் சகோதரி சாராவை கைது செய்ய வேண்டுமென்று அரசை வலியுறுத்தியதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சகோதரி சாரா பஹ்ரைனுக்கு திரும்பும் சமயம் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் இருபத்தி நான்காம் தேதி அவரது பஹ்ரைன் "Residency Permit" முடிவடைகிறது. அவர் போய் அதை புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் கைது நடவடிக்கையால் அது முடியாமல் போய்விட்டது. தற்போது அவரால் மீண்டும் பஹ்ரைன் வர முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பஹ்ரைனில் உள்ள அமைப்புகள் இதற்கு தாங்கள் உதவுவதாக அறிவித்துள்ளன.

சகோதரி சாரா மாலினியின் கைதில் பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவர் எதற்கு கைது செய்யப்பட்டார் என்று அவருக்கு தெரிவிக்கப்படவில்லை, கைது செய்த பிறகு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் படுத்தப்படவில்லை, அவரது உறவினர் யாருக்கும் அவரைப் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை. முப்பது நாட்கள் காவல் என்றாலும் இது இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்றும் தெரியாது.

பஹ்ரைனைச் சார்ந்த "Discover Islam" அமைப்பு மற்றும் பஹ்ரைன் மனித உரிமைகள் சங்கம் (Bahrain Human Rights Society, BHRS) ஆகியவை, இலங்கை அரசின் இந்த செயல் நியாயமற்றது என்றும், சகோதரி சாராவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கு உலகிலுள்ள மனித உரிமை அமைப்புகள் உதவி புரிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக இலங்கையைச் சேர்ந்த அரசு சாராத அமைப்புகளுடன் (NGO - Non Government Organisations) சேர்ந்து பணியாற்ற போவதாகவும் அறிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பஹ்ரைன் அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சகோதரி சாரா மாலினியின் புத்தகங்கள் புத்த மதத்திற்கு எதிரானதாக இருக்காது என்று தான் நம்புவதாக BHRS ன் தலைமைச் செயலாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல் தீரசி (Doctor Abdulla Al Deerazi) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணையக்குழு (Sri Lankan Human Rights Commission) தேவையான உதவியை செய்து வருகிறது.

காரணங்கள் கூறாமல் ஒரு பெண்ணை காவலில் வைத்திருக்கும் இலங்கை அரசின் செயல் மிகுந்த வருத்தமளிக்கிறது.

கூடிய விரைவில் சகோதரி விடுவிக்கப் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் துஆச் செய்வோம்....

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Thanks:
1. Brother Rishan Shareef

Source of Information:
1. SL writer who wrote why she embraced Islam was detained for 30 days - Lanka eNews, dated 1st April 2010.
2. Author Sara Malini Perera held 'for offending Buddhists' in Sri Lanka - Times Online, dated 29th March 2010.
3. Sri Lanka urged to free Bahrain Writer - Bahrain Human Rights Society Website.

9 பாடங்களில் அதிவிசேட சித்தி (A)


2009 ஆம் ஆண்டில் க.பொ.த. (சா.த) பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவி ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட சித்தியைப் பெற்றுள்ளதாக அறியக் கிடைத்தது. இது சம்பந்தமான தகவல்களை கிடைக்கப்பெறும் போது நாம் வெளியிடவுள்ளோம் என்பதை எமது வாசகர்களிற்கு கூறிக்கொள்கின்றோம்.

கஹட்டோவிடாவில் இரத்த தான முகாம்


கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ கிளை மூன்றாவது முறையாவக நடாத்தும் இரத்த தான முகாம் எதிர்வரும் 11ஆம்; திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8.30மணி முதல் நடைபெறவுள்ளது. வத்துபிடிவல ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இவ் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. நோயினால் பீடிக்கப்பட்டு அல்லலுறும் நோயாளிகளுக்கு எமது இரத்தத்தைக் கொடுத்து அவர்களது உயிர் காக்கும் நன்மையான காரியத்தில் இணைந்து கொள்ளுமாறு கஹட்டோவிட வாழ் ஆண்களையும் பெண்களையும் கஹட்டோவிட வை.எம்.எம்.ஏ கிளை அன்புடன் அழைக்கிறது.

சுன்னத்வல்ஜமாஅத் கதை சுன்னத்வல்ஜமாஅத் கதை முஹையத்தீன் பெயரால் மூட்டை மூட்டையாக..

பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது
காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் அடிமுட்டாள்களை விடகேவலமாக உளறிக் கொட்டினார்.

சுன்னத் வல் ஜமாஅத் என்றப் பெயரில் அறங்கேறிய இந்த கொடுமையை தாங்க முடியாத சில ஓரளவு விபரம் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர் முகம் சுலித்தனர். பிற முஸ்லிம் பெயர் தாங்கிகள் இது குறித்தெல்லாம் எதுவும் கண்டுக் கொள்ளாமல் 'ஜம்'மென்று சுன்னத் பேஜ் குத்திக் கொண்டு அலைந்தனர்.

தமிழக மக்களிடம் செல்லாக்காசாக மாறி விட்ட இந்த ஜாஹிலியத் கதைகளை மீண்டும் உரமூட்ட முயற்சிக்கும் பரங்கிப்பேட்டை சுன்னத் வல்ஜமாஅத் பேர்வழிகள் பரிதாபத்துக்குரியவர்களாக தெரிகின்றனர். உண்மையில் அவர்களை நினைக்கும் போது பரிதாபப்படுகிறோம் மார்க்கத்தின் அச்சரம் கூட தெரியாத நிலையில் தங்களை சுன்னத்
வல் ஜமாஅத் என்று நினைத்துக் கொண்டு முஹம்மத் காசிம்(நாகூர்) போன்ற அடிமுட்டாள்களுக்கு மேடைப் போட்டு கொடுத்து உளர விடுவது அவர்கள் மீதான பரிதாபத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.

பரங்கிப்பேட்டை சுன்னாக்கள் உட்பட உலகிற்கு மீண்டும் முஹையத்தீன் கதைகளை நினைவூட்டுகிறோம்.

ஜீஎன் (பரங்கிப்பேட்டை)*
தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகைலி நோன்புலி ஸகாத்லி ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை நாம் அறியலாம்.

மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி ஆய்வு செய்வோம்.

எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால், அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால், அந்தக் காரியம் முஹம்மத் (ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக,மறுமையில் நன்மையளிப்பதாக ஆக
முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

இந்த விதியைப் புரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை. ''அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தனது இறுதித் தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் வழியாக முஸ்லிம்கள் செய்ய வேண்டிய அனைத்து வணக்கங்களையும் கற்றுத் தந்தான். அவர்களுக்குப் பின் எவருக்கும் வஹீ,இறைச் செய்தி,வர முடியாது'' என்ற அடிப்படைக் கொள்கையை விளங்கியிருந்தால் போதும். இந்த விதியைப் புரிந்து கொள்ள
முடியும்.

முஹம்மத்(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு வணக்கத்தை மற்றவர்களும் ஏற்படுத்தலாம் என்று யாரேனும் கருதினால் முஹம்மத் (ஸல்) அவர்கள் வணக்கங்களை முழுமையாகக் கற்றுத் தரவில்லை என்று அவர் கருதுகிறார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின் மற்றவர்களுக்கும் வஹீ வரக் கூடும் என்றும் அவர் கருதியவராகிறார்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடைகளை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்து விட்டேன்.(அல்குர்ஆன் 5:3)

''நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்'' என முஹம்மத் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: முஸ்லிம் (3541)

''நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்'' எனவும் முஹம்மத் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி (2697)லி முஸ்லிம் (3540).

முஹம்மத் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான்.

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றால் என்ன பொருள்? அதுவும்
அல்லாஹ்வே முழுமைப்படுத்தி விட்டான் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? மார்க்கத்தில் எவையெல்லாம் உள்ளனவோ அவை ஒவ்வொன்றையும் நான் கூறி விட்டேன். புதிதாக எதையும் உருவாக்கிட அவசியமில்லை. அது கூடாது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது.

அல்லாஹ்வால் நேரடியாக முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை என்பதே மவ்லிதை நிராகரிக்கப் போதுமான காரணமாகவுள்ளது.

மேற்கண்ட இரண்டு நபிமொழிகளும் கூறுவது என்ன? நாம் எந்த ஒரு அமலைச் நல்லறத்தைச்) செய்வதாக இருந்தாலும் அது பற்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏதும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். அவர்களது கட்டளையில்லாமல் எந்த ஒரு அமலைச் செய்தாலும் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழிகள் கூறுகின்றன.

மவ்லிது ஓதுமாறு முஹம்மத் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்காததே மவ்லிதை நிராகரிக்க மற்றொரு காரணமாக அமைகின்றது.

''செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவையே காரியங்களில் மிகவும் கெட்டதாகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்'' என்று முஹம்மத்(ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: முஸ்லிம் (1573)

''செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தாம் காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் (அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்'' எனவும் முஹம்மத் (ஸல்) கூறியுள்ளனர்.(நூல்: நஸயீ (1560)

இவ்விரண்டு நபிமொழிகளும் கூறுவது என்னவென்பதை முஸ்லிம்கள் கவனமாகச் சிந்திக்க வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் புதிதாக உருவாக்கப்பட்டவை தாம் மிகவும் மிகவும் கெட்ட காரியம்; அது வழிகேடு; அது நரகத்தில் சேர்க்கும் என்றெல்லாம் கடும் எச்சரிக்கை இதில் உள்ளது. முஹம்மத் (ஸல்) காலத்துக்கு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த மவ்லிதுகளால் நன்மை ஏதும் விளையாது
என்பது ஒருபுறமிருக்க இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை தான் ஏற்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிகச் சிறந்த மார்க்க மேதை! உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர்! இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் அவரது பெயரால் போலிகள் சிலர் இட்டுக்கட்டி அல்லாஹ்வுக்கும் அவன் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மாற்றமாகக் கதை புனைந்து முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெறச் செய்துள்ளனர்.

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது ஆகும். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள்லி குர்ஆன்லி ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம்
காண்போம்.

அபுல் மஆலி என்பார் அப்துல் காதிர் ஜீலானியிடம் வந்துி ''என் மகனுக்குப்
பதினைந்து மாத காலம் காய்ச்சல் விலகாமல் உள்ளது'' என்றார். அதற்கு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள்லி ''காய்ச்சலே! நீ எப்போது இவனைப் பிடித்தாய்? நீ ஹில்லா எனும் ஊருக்குச் சென்று விடு!' என்று உன் மகனுடைய காதில் கூறு'' என்றார்கள். அவர் கட்டளையிடப்பட்டவாறு செய்தார். அதன் பின் அவனுக்குக் காய்ச்சல் ஒரு சிறிதும் மீண்டும் வரவில்லை. பிறகு ஹில்லா எனும் ஊரில் உள்ள ராபிளிய்யா
கூட்டத்தினர் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

இவ்வாறு முஹ்யித்தீன் மவ்லிதில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் பதினைந்து மாத காலம் நீடிக்குமா? என்ற கேள்வியை விட்டு விடுவோம். மார்க்க அடிப்படையில் இந்தக் கதை நம்பத்தக்கது தானா?

இந்தக் கதையில் அப்துல் காதிர் ஜீலானிலி நோய் தீர்க்கும் அதிகாரத்தைப்
பெற்றிருப்பதாகவும் நோயை வழங்கும் அதிகாரம் பெற்றிருப்பதாகவும்லி காய்ச்சல் என்ற நோயுடன் அப்துல் காதிர் ஜீலானி பேசியதாகவும் கூறப்படுகிறது.

நோய்களை வழங்குபவனும்லி அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இந்த அதிகாரத்தில் எவருக்கும் அல்லாஹ் எந்த உரிமையையும் வழங்கவில்லை. இது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதை திருமறைக் குர்ஆனிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அறியலாம்.

நான் நோயுற்றால் எனக்கு நோய் நிவாரணம் வழங்குபவன் இறைவன் என்று இப்றாஹீம் (அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்.(அல்குர்ஆன் 26:80)

இந்த அப்துல் காதிர் ஜீலானியை விடப் பல கோடி மடங்கு சிறந்தவர்களான இப்றாஹீம் நபியவர்கள், அந்த அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்கிறார்கள். இவரோ நோய் தீர்க்கும் அதிகாரம் தமக்குரியது என்கிறார்.

இந்தப் பூமியிலோலி உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம்
உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. (அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. (அல்குர்ஆன் 54:11)
இந்த வசனங்களை நிராகரிக்கும் வகையில் இந்தக் கதை அமைந்தள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரில் பலர் நோய்வாய்ப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் அந்த நோயைப் பார்த்துப் பேசி வேறு ஊருக்கு அனுப்பவில்லை. ஏன்? நபி (ஸல்) அவர்களே கூட நோய்வாய்ப்பட்டார்கள்.

''மனிதர்களின் இறைவா! இந்தத் துன்பத்தை நீக்கு! இறைவா! நீ நிவாரணம் அளிப்பாயாக! உனது நிவாரணம் தவிர வேறு நிவாரணம் இல்லை'' என்று துஆச் செய்யுமாறு தான் அந்தச் சந்தர்ப்பங்களில் தம் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
(பார்க்க: புகாரீ 5675)

நபி (ஸல்) அவர்களுக்குக் கூட இல்லாத அதிகாரம் அப்துல் காதிருக்கு
வழங்கப்பட்டதாக இந்தக் கதை கூறுகிறது.

அந்தச் சிறுவனிடம் இருந்த காய்ச்சலை நீக்கியதோடு இவர் நிற்கவில்லை. ஹில்லா என்று ஊருக்கு அந்தக் காய்ச்சலைத் திருப்பி விட்டாராம். கடுகளவு இஸ்லாமிய அறிவு உள்ளவன் கூட இதை நம்பமுடியாது.

உஹத் போர்க்களத்தில் நபி (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்ட போது அவர்கள் கோபமுற்று ''நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசிய கூட்டத்தினர் எப்படி வெற்றி பெறுவர்?'' என்று கூறினார்கள்.

உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை (அல்குர்ஆன் 3.128) என்ற வசனம் இறங்கியது.

எப்படி இவர்கள் வெற்றியடைய முடியும்? என்று தான் நபி (ஸல்) அவர்கள்
கேட்டார்கள். இவ்வாறு கூறுகின்ற அதிகாரம் கூட நபியவர்களுக்கு இல்லை என்று இறைவன் பிரகடனம் செய்கிறான். அப்துல் காதிர் ஜீலானியோ ஹில்லா என்ற ஊர்வாசிகளை நோக்கிக் காய்ச்சலை அனுப்பி வைத்தாராம்.

திருக்குர்ஆனையும்லி நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் நம்பக்கூடிய முஸ்லிம்களே! அப்துல் காதிர் ஜீலானியை நபி (ஸல்) அவர்களை விடவும் மேலானவராக அல்லாஹ்வுக்குச் சமமானவராகக் காட்டும் இந்தக் கதையை உண்மையான முஸ்லிம் எழுதியிருப்பானா? அல்லது அன்னியர்களின் சதித் திட்டத்தில் இந்தக் கதை உருவாக்கப்பட்டதா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் இந்தக் கதையை மவ்லிது என்ற பெயரில் ஓதி வருவது நன்மையைப் பெற்றுத் தருமா? அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தருமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பொருள் தெரியாது என்பதால் மார்க்க அறிஞர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இந்தக் கதையிலிருந்து உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லையா?

முஹ்யித்தீன் மவ்லிதில் உள்ள மற்றொரு கதையை பாருங்கள்:
ஜும்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசிரியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பி விட்டது. இதைக் கண்ட அப்துல் காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள். இதை அப்துல் காதிர் மக்களிடம் கூறியவுடன் ஹம்மாதின் சீடர்கள்லி இதை நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கேட்டனர். அல்லாஹ்
யூசுஃபுக்கும்லி அப்துர் ரஹ்மானுக்கும் இந்தக் காட்சியைக் காட்டினாôன். தங்கள் தவறுக்காக ஹம்மாதின் சீடர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் காணப்படும் இந்த வரிகளின் கருத்து. இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக மவ்லித் புத்தகத்தில் இடம் பெறும் ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்து விட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.

ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின்
ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர்
சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ''ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜு ம்ஆ தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் 'அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன்' என்றேன்.

நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப் பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன்? இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர், 'இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக்கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா?' என்று கேட்டார்.

நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றிவிட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாஃபஹாச் செய்தார் எனக் கூறினார். இந்தச் செய்தி பரவியதும் ஹம்மாதின் சீடர்கள் இதை நிரூபிக்குமாறு வற்புறுத்தத் திரண்டனர். பெரும் கூட்டமாக அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குமே பேச இயலவில்லை. அவர்கள் வந்த நோக்கத்தை அப்துல் காதிரே கூறலானார்.
''சிறந்த இருவரைத் தேர்வு செய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்மை
நிரூபணமாகும்'' என்றும் கூறினார். அவர்கள் யூசுஃப்லி அப்துர் ரஹ்மான் ஆகிய இரு பெரியார்களைத் தேர்வு செய்தனர். இதை ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தை விட்டு எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார்.

சற்று நேரம் சென்றதும் யூசுஃப் எனும் பெரியார் ஓடோடி வந்தார். ''ஹம்மாதை அல்லாஹ் எனக்குத் தெளிவாகக் காட்டினான். 'யூசுஃபே! நீ அப்துல் காதரின் மதரஸாவுக்கு உடனே செல். அங்குள்ளவர்களிடம் கூறு!' என்று ஹம்மாத் என்னிடம் கூறினார்'' என்றார். பிறகு அப்துர் ரஹ்மான் கைசேதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது போலவே கூறினார். அனைவரும் பாவமன்னிப்புக் கேட்டனர்.

இந்தக் கதையில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அபத்தம்,1
ஜும்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைநேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜும்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போது தான் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிலிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று தெரிகின்றது.

ஒரு சுன்னத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் ஈடுபாட்டுடனும் விருப்பத்துடனும் செய்ய வேண்டும். வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது சுன்னத்தை நிறைவேற்றியதாக ஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

அபத்தம்,2
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல் காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாஃபஹா செய்தார்கள் என்பதிலிருந்து இதை அறியலாம்.

உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.

எந்த ஆத்மாவுக்கு இறைவன் மரணத்தை ஏற்படுத்தி விட்டானோ அவற்றைத் தன் கைவசத்தில் வைத்துக் கொள்கிறான்.(அல்குர்ஆன் 39:42)

அவர்கள் (மரணித்தது முதல்) திரும்ப எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின் ஒரு திரை இருக்கின்றது. அல்குர்ஆன் 23:99)

இறந்தவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்கு நேராகச் சந்தித்ததும் அவருடன் உரையாடியதும் முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்த விளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.

...பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும்.
பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக் கூறப்படும். ''நான் எனது
குடும்பத்தினரிடம் சென்று இந்த விபரங்களை கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன்'' என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள்லி ''நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! அந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக!'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி(991)

இது நபியவர்கள் தந்த விளக்கம்.
நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமை நாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர்லி ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அபத்தம்,3
ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸிற்கு இது முரணாக உள்ளது. மேலும் இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் கூற்றுக்கும் (30:52, 35:22) முரணாக உள்ளது.

அபத்தம்,4
இந்தச் செய்தியை நம்ப மறுத்த ஹம்மாதின் சீடர்களுக்கு இதை அப்துல் காதிர் நிரூபித்த விதமும் ஏற்கத்தக்கதாக இல்லை.

இந்த இடத்தை விட்டு நீங்கள் எழுவதற்கு முன் நிரூபிக்கிறேன் என்று கூறியது மறைவான ஞானம் அவருக்கு உள்ளது என்று கூறுகின்றது. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை முன்னர் நாம் நிரூபித்தோம்.

ஹம்மாத் என்பவர் யூசுஃபுக்கும் அப்துர் ரஹ்மானுக்கும் காட்சி தந்ததாகக்
கூறுவதும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக உள்ளது.

அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது.

இஸ்லாத்தின் கடமைகள் எத்தனையோ இருக்கும் போதுலி மார்க்கம் அனுமதிக்காதலி இணை வைப்புக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மவ்லித் தேவை தானா? என்பதை இம்மாதத்தில் சிந்திப்போம்லி செயல்படுவோம்.

நன்றி மொஹமட் மிர்தான்.

கஹட்டோவிட பாலிகாவிற்கு முதலமைச்சர் விஜயம்


கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் வருடாந்த கலைவிழா நிகழ்வுகள் இன்று காலை (03.04.2010) 10.30 மணியளவில் பாடாசாலை அதிபரின் புகாரி உடையார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண சபை முதலமைச்சரும் கல்வியமைச்சருமான கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.

ஊர்ப் பிரமுகர்களும் பெற்றோரும் மாணவர்களும் நலன் விரும்பிகளும் திரளாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றும்போது, இன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் ஒரே முஸ்லிம் பெண் பாடசாலையான முஸ்லிம் பாலிக வித்தியாலயத்திற்கு வருகை தர முடிந்தமைக்ககா மகிழ்ச்சியடைகிறேன். 1946இல் மறைந்த பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டீ பண்டாரநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை வளங்கள் அற்ற நிலையில் இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது. இப்பாடசாலையின் குறைபாடுகள் பற்றி இதன் அதிபர் என்னிடம் எடுத்துக் கூறிய விடயங்கள் சம்பந்தமாக எனது அவதானத்தை செலுத்தவுள்ளேன். இது விடயமாக பொதுத் தேர்தலின் பின் கலந்துரையாடல் ஒன்றிற்காக வருமாறு அதிபரையும் அவர் குழுவினரையும் அழைத்துள்ளேன். இச்சந்தர்ப்பத்தில் இப்பாடசாலைக்குத் தேவையான மூன்று மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்துத் தருவதற்கு உங்கள் முன்னால் உறுதிளிக்கின்றேன். உங்களுடைய இக்கலைவிழா வெற்றியடைய எனது வாழ்த்துக்கள் என்றார்.

முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான எமதூரைச் சேர்ந்த சகோதரர் கியாஸ் அவர்களும் இவ்வைபவத்தில் உரையாற்றியதோடு மாணவிகளின் விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
POSTED BY : ABU MUSAB, KAHATOWITA

நாட்டைக் கொள்ளையடித்த மஹிந்த வாக்கையும் கொள்ளையடித்தார்.


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தேசிய முண்ணனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரக் கூட்டமொன்று நேற்றிரவு (02.04.2010) ஹிஷாம் ஹாஜியார் அவர்களின் கோழிக்கடைக்கு அருகாமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பாராளு மன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்கள் நாட்டின் உண்மையான ஜனாதிபதி பொன்சேகாவேயாவார். மஹிந்த ராஜபக்ச மக்களின் வாக்கைக் கொள்ளையடித்த போலி ஜனாதிபதியே. நாட்டைக் கொள்ளையடித்த மஹிந்த ராஜபக்ச மக்களின் வாக்கையும் கொள்ளையடித்தார் என்று குறிப்பிட்டார். வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களிற்காக கிடைக்கப் பெற்ற நிதியை பசில் ராஜபக்ஷவின் வெற்றிக்காக போலியான அபிவிருத்தித் திட்டங்களில் அநியாயமான முறையில் இந்த அரசு செலவிடுகிறது. வடக்கின் வசந்தம் என்ற சொல் இப்போது பசிலின் வசந்தமாக மாறியுள்ளது. பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்காது என்பதை கடந்த காலத் தேர்தல்கள் உணர்த்துகின்றன. 1994இல் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியடைந்த சந்திரிக்கா அம்மையாருக்குக் கூட பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பாண்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தேவைப்பட்டது. இவ்வரசாங்கத்தில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டில் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த கிண்ணத்திற்கு வாக்களிக்க வேண்டும். கஹட்டோவிடாவில் இவ்வாறான ஒரு பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு நன்றியைக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சாரக் கூட்டத்தில் ஜனநாயக தேசிய முண்ணனியின் திஹாரிய வேட்பாளர் சகோதரர் நஸார் அவர்களும், மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான வருண ராஜபக்ஷ மற்றும் எமதூரின் மூத்த அரசியல் வாதியான சகோதரர் ஹ{சைன் முஹம்மத் அவர்களும் உரையாற்றினார்.
இப்பிரச்சாரக் கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ரூபா பெறுமதியான பட்டாசுகளும், வாணவெடிகளும் கொளுத்தப்பட்டன. கஹட்டோவிட மக்கள் தமது மகிழ்ச்சியை இவ்வாறு வெளிப்படுத்தினாலும், எமதூர் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றுவதில் ஆர்வமாக இருப்பதனால் இவ்வாறான வீணான செலவினங்களை தவிர்ந்து கொண்;டிருக்கலாம் என பலர் கருத்துத் தெரிவித்தனர்.

”இக்கட்டான சூழ்நிலைகளில் முஸ்லீம் நாடுகளே நம்முடன் கைகோர்த்தனர்” பஸில் ராஜபக்ஷ


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ அவர்கள் நேற்றிரவு 10.45 மணியலவில் கஹடோவிட இக்கிரமுல்லா அவர்களின் வீட்டு முற்றவெளியில் அவரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு வருகைதந்தார்.

பஸில் ராஜபக்ஷ அவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் முஸ்லீம்களும் முஸ்லிம் நாடுகளும் தனிப்பட்ட விதத்திலும் இராஜாங்க அடிப்படையிலும் பல்வேறுபட்ட உதவிகள் செய்தார்கள் எனக்கூறிய அதேவேளை குறிப்பாக யுத்த சூழ்நிலையில் எமது நாட்டுக்கு முஸ்லீம் நாடுகளே ஆயுத தளபாடங்களை வழங்கியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்தியா அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் மற்றும் அத்தனகல்லத் தெர்தல்தொகுதி சார்பாக இம்முறைபொட்டியிடுகின்ற வேட்பாளர் சரண குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.