கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

”இக்கட்டான சூழ்நிலைகளில் முஸ்லீம் நாடுகளே நம்முடன் கைகோர்த்தனர்” பஸில் ராஜபக்ஷ


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்ற ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ அவர்கள் நேற்றிரவு 10.45 மணியலவில் கஹடோவிட இக்கிரமுல்லா அவர்களின் வீட்டு முற்றவெளியில் அவரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு வருகைதந்தார்.

பஸில் ராஜபக்ஷ அவர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் முஸ்லீம்களும் முஸ்லிம் நாடுகளும் தனிப்பட்ட விதத்திலும் இராஜாங்க அடிப்படையிலும் பல்வேறுபட்ட உதவிகள் செய்தார்கள் எனக்கூறிய அதேவேளை குறிப்பாக யுத்த சூழ்நிலையில் எமது நாட்டுக்கு முஸ்லீம் நாடுகளே ஆயுத தளபாடங்களை வழங்கியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சந்தியா அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் மற்றும் அத்தனகல்லத் தெர்தல்தொகுதி சார்பாக இம்முறைபொட்டியிடுகின்ற வேட்பாளர் சரண குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

கஹடோவிட பெண்கள் பாடசாலை ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலை அல்ல என்று முஜஹிட் அவர்ஹல் குறிப்பிட்டுள்ளமை மிஹவும் கேளிக்கை ஆஹவே உள்ளது, avarhalatu கஹடோவிட தௌஹீது பள்ளியில் ஆண்கள் பென்பில்லைஹளுக்கு படிப்பிப்படுமட்டும் என்னவாம்?

Post a Comment