கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

வெளிநாட்டிலுள்ள கஹட்டோவிட அன்பர்களிற்கு……

நீங்கள் இத்தளத்தினூடாக எமதூரின் அன்றாட முக்கிய நிகழ்வுகளையும் தகவல்களையும் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் கடல் கடந்து வெகு தூரத்தில் இருந்தாலும் உங்களை உங்களது ஊரிற்கு இத்தளம் அழைத்து வருகிறது. எமது அனுபவங்களையும் நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நாம், தற்போது உங்களுடைய வெளி நாட்டு அனுபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகளை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றோம்.
எனவே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….
உங்களது அனுபவங்களை தட்டச்சு செய்து அல்லது கையெழுத்தில் எழுதி ஸ்கேன் பன்னி எமது மின்னஞ்சல் முகவரியான kahatow@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அறிந்து கொள்ள வேண்டுமாயின் http://kahatoweta.blogspot.com/2010/02/blog-post_4049.html என்ற தளத்தில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களின் அனுபவங்களை நீங்கள் எம்முடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

10 comments:

Anonymous said...

மிகவும் சிறந்த ஒரு சந்தர்ப்பம்

ihthisam said...

எல்லோருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்,

இந்த வெப் தளம் மிஹவும் சிறந்த ஒரு பணியை இதுவரையும் செய்துஉள்ளது, நான் ஒரு தவறினை அல்லது குறை இணை காண்கிறேன் என்னவென்றால்

உங்களது வெப்தளம் வெறுமனே சமூகத்தின் பிரச்சனைகளை கிளறிவிடுவது மத்திரம்போல் தெரிகிறது அதற்கான தீர்மானம் ஒன்றை எடுப்பதாக தெரியவில்லை , நீங்கள் சும்மா பிரச்சனைகளை குர்ப்பிட்டு விட்டு அதற்கு வாசகர்கள் தரும் commence இணைக்கொண்டு மகிழ்கிறீர்களே ஒழிய நடைமுறையில் எதனையும் செய்வதாக தெரியவில்லை

நீங்கள் குறிப்பிடுகின்றவை உண்மையாஹா இருந்தாலும் அதற்கான நடமுரியிலான விடயங்களையும் செய்வது பிரச்சனைகளை கிளருபவர்களின் கடமை அல்லவா ?

தனிப்பட்ட முறையில் நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகளுக்கான நடைமுறையிலான தீர்வுக்கு உங்களுக்கு ஒத்துழைப்பை தர நான் ஆவலஹா உள்ளேன் என்பதனை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிரச்சனைகளை வெப்தளத்தில் குறிப்பிடுவதோடு நடைமுறையிலான தீர்வையும் முநேடுத்து வைப்போமானால் , அந்த பிரச்சினை தெருக்களில் கதைத்து வேருபிரச்சினைகளாக மாறுவதை நிருத்தமுடிவதொடு பிரச்சினைக்கான சுமுகமான தீர்வும் கிடைக்கும்.

இந்த வெப்தளம் சமூகத்தின் ஒழுக்கம் சம்பந்தமான பிரச்சனைகளை சும்மா கிளருபவர்களாக மாத்திரம் இருக்காமல் அதற்கான நடைமுறை தீர்வை எடுப்பவர்கலாகவும் இருந்தால் மிகவும் நல்லது என்பதனை மிகவும் தாழ்மையுடன் தெரிவுத்துக்கொல்கிறேன்.

நன்றி அஸ்ஸலாமு அழைக்கும்

Anonymous said...

Dear Mr. Ihthisam. Wassalam, I wish to know what are the practical ways to eliminate the moral collapse of our society..? Please if you could update your views and ideas so that others can be gathered toward your planning.

palich said...

Dear Ihthisham, Salam

I heard a good news,tonight. Some of our villagers are going to gather some VIPs from our village to have a discussion regarding 'How can we eliminate such bad habits?'. This gathering has been planned to be held at a common place, tomorrow night(17.04.2010). You also can join. Please attend with your opinions & suggestions.

www.palichkahatowita.blogspot.com

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
வெளி நாட்டில் உள்ளவர்களும், ஊரின் செய்திகளை அறிய இந்த தளமும் ஒரு உதவி செய்கிறது. இந்த தளத்தை அமைத்த பெயர் குறிப்பிடாத உங்கள் முயற்சிக்கு நன்றிகள், நீங்களும் நானும் ஒரே ஊர், ஆகவே, என்னை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பலர் பல நியாயமான காரணங்களுக்காக வெளிநாட்டில் வசிக்கிறார்கள். பலர் வீடு கட்டுவதற்கும், கூடப்பிரந்தவர்களை படிப்பிபதட்கும், அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்து கொடுப்பதற்கும், பெற்றோர் பட்ட கடன்களை அடைப்பதற்கும், இன்னும் சிலர், ஊரில் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தவும், என பல காரணங்களுக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருவர், அருகே இருக்கும் போது அவரின் அருமை விளங்காது,அனால் தூரத்தில் இருக்கும் நிலையில் விளங்கும். பெற்றோரை, மனைவியை,குழந்தையை, சகோதரர்களை, நண்பர்களை விட்டு தூரம் போன பின்தான் அவர்களின் உறவு புரியும். பின் யோசிப்பான், நான் எதற்கு இங்கு வந்தேன், பணத்துக்காகத்தானே, என்று மனதை திடப்படுத்தி திரும்ப திரும்ப அதையே நினைத்து தனது காலத்தை ஒட்டுவான். அவனுக்கென்று பல ஆசைகள் இருக்கும். ஆனால் முதலில் தனது குடும்பத்தையும், மீதியிருந்தால் நண்பர்களையும் கவனிப்பான். அதிலும் மீதி இருந்தாலே தனது ஆசையை நிறைவேற்ற பார்ப்பான். பல பிரச்சனைகளை முகம் கொடுப்பதிலேயே காலம் ஓடும்.
மிகச் சிலரே ஒரு தொலைபேசி அழைப்பை செலவு செய்து எடுத்து அவனிடம் பேசுவர்.எல்லோருக்கும் பிரச்சனை இருக்கு, அதற்காக, தனியே உள்ளவனிடம் எல்லா சோகங்களையும் சொல்லி அவனை இன்னும் யோசிக்க வைப்பார்கள் பல குடும்பத்தை சேர்ந்தவர்கள். இது அனைத்தும் பொதுவாக எல்லா இடத்திலும் நடக்கின்றவையே.........
I hope, All of foreign employees of Kahatowita will give positive feedback to this post sooner. I wish the all my brothers in Islam of kahatowita.
Here,
Mohamed Fawaz
Maldives.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சிறந்ததொரு ஆக்கத்தை அஞ்சல் செய்துள்ளார் சகோ.பவாஸ்.
உண்மையாக 99% வீதமான வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களின் உளக்குமுறல்களின்
பிரதிபலிப்பாகவே நான் அதைக் காண்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை எங்களுடைய கஷ்டங்களையும், சோகங்களையும் வெளிப்படுத்துவதற்காக
இத்தளத்தை ஊடகமாக பயன்படுத்தக் கூடாதெனக் கருதுகிறேன்.
ஏனெனில் இப்போது உள்ளவர்கள் முன்பைப் போன்ற பெற்றோர்கள் அல்ல.
நாம் வெளிநாடுகளில் பணிபுரிகிறோம் என்று கூறும்போது வெளியில் சந்தோசப்பட்டுக் கொண்டாலும்
உளத்திருப்தி அடையாத உம்மாக்களும், வாப்பாக்களும்தான் இன்று.
இன்னும் இவர்கள் நம்மைப்பற்றியே சிந்தித்து மனம் நொந்து கொள்வதற்கு இது ஒரு படிக்கல்லாக
அமைந்து விடக்கூடாது.
நம்முடைய வாழ்க்கையில் அவர்களின் மனதை சந்தோசப்படுத்துவதைத் தவிர
வேறு எதைத்தான் பெரிதாக சாதித்து விடப்போகிறோம்?
கத்தரிலிருந்து,
செல்வன்.

Anonymous said...

அனுபவங்கள் பலவிதமாக உள்ளன, அவற்றில், எதை வேண்டுமானாலும் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம். நாம் வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு இருப்பதால், மற்ற நமது சகோதரர்களும் இங்கு வர ஆசைப்படுகிறார்கள். நமது நாட்டில் கஷ்டம்,வறுமை,வேலையின்மை போன்ற காரணங்களாலும் அவர்கள் பாதிப்புற்றிருக்கிரார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் சொவார்கள் "எங்கட கருமம், நாங்க இங்க கஷ்டப்படுகிறோம் , ஆனால் ஒரு சந்தோஷம், என்னால எனது குடும்பம் வாழுது" என்று. பெருநாள்,மையத்து,கலியாணங்கள், இன்னும் பல நிகழ்ச்சிகளை காண முடியாமல் தவித்துக்கொண்டு தனது உழைப்பை குடும்பத்துக்காக செய்கிறார்கள். கட்டாயம், வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்கள் உங்கள் துன்பங்கள், கஷ்டங்கள், சிக்கல்கள், சந்தோசங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பகிர்ந்துகொள்வதில் தப்பில்லை. வீட்டில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள் என்றால், நீங்கள் பெயர் குறிப்பிடாமல் உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள். எமதூர் இளைஞர் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் அமைய இடமுண்டு.... பல இளைஞர் கள் இப்போதே பாடசாலையில் இருந்து நினைக்கிறார்கள், நாமும் வெளிநாடு சென்றால் பணம் தேடலாம். படித்து என்ன செய்ய? .... இவ்வாறான எண்ணங்கள் பல சிறுவர்களிடமும் உண்டு. என்னை வாப்பா அவர் வேலை செய்ற நாட்டுக்கு எடுப்பார், நானா எடுப்பார், மாமா எடுப்பார். படிப்பில் அக்கறை இல்லாமல் சிறுவர்கள் இருக்கிறார்கள். சகோதரர்களே ! விரும்பினால் உங்கள் அனுபவங்களை மாற்றார்க்கு ஒரு பாடமாகவும் இங்கு பதியலாம்.
Dear brothers and friends, if I'm wrong in this comment, please contact me through mhdfawass@gmail.com (my e-mail)

Mohamed Fawaz
Maldives.

Anonymous said...

Weldon Fawaz. Still you have hopes about our village.

Anonymous said...

kahatowitayouth.blogspot.com

Anonymous said...

why man u should approve the comment????????
then it may be selfish............
if u have any idea to say anything to our people, say in public and allow to publish their comments without anyones approve?????

Post a Comment