கஹட்டோவிட நீர் வினியோகத்திட்டம் - மீண்டும் ஆரம்பம்
கஹட்டோவிடாவின் மிகப் பழமையானதும்,நீண்டகாலமாகச் செயலிழந்து போயுள்ளதுமான அல் அமானா நீர் வினியோகத்திட்டம் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளதாக இத்திட்டத்தின் செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார். நீர் பெறப்படும் கிணற்றில் போதிய நீர் காணப்பட்டாலும் கிணறு அசுத்தமடைந்துள்ளதால் அதைச் சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் சேதமடைந்துள்ள நீர்க் குழாய்கள், நீர்த்தாங்கிகளில் தகுந்த திருத்த வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்புணரமைப்புப் பணிகளை அவசரமாக மேற்கொள்வதற்கு செயற்குழு உறுப்பினர்களுடன் பொது மக்களும் தமது பங்களிப்பை நல்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இது போன்ற நீர் வினியோகத்திட்டங்கள் முறையாகச் செயற்படுத்தப்பட்டால் கோடைகாலங்களில் ஊரில் ஏற்படுகின்ற நீர்ப் பற்றாக்குறையை ஓரளவு சீர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment