கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவின், கழிவகற்றல், வடிகாலமைப்பு என்பவற்றில் சிறந்த முகாமைத்துவம் தேவை

நிலப்பரப்பில் சிறியதாகவிருந்தாலும் தற்போதைய நெருக்கமான குடியிருப்புக்களால் கஹட்டோவிடாவின் பௌதீகம் தொடர்பில் அதிசிரத்தையுடன் கூடிய கவனம் எடுக்க வேண்டிய நேரமும் காலமும் வந்துவிடடதென்றே கூறவேண்டியுள்ளது. குறிப்பாக கழிவகற்றல்,வடிகாலமைப்பு போன்ற துறைகள் தமதூரைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பை கூலங்கள் சிறந்த முறையில் முறையே அகற்றப்படாததன் விளைவாக ஆங்காங்கே வீதிகளில் தேங்கிக்கிடக்கின்றன. பொது மக்களும் தமது வீட்டுக் கழிவுகள் தமது வீட்டைவிட்டு வெளியில் சென்றால் போதும் என்றமைப்பிலேயே நடந்து கொள்கிறார்கள். இதனால் பாரிய சூழல் மாசடைவுக்கு முழு ஊருமே முகங்கொடுக்க வேண்டியிருப்பதுடன் டெங்கு போன்ற உயிராபத்தை ஏற்படுத்தும் நோய்கள் கூட உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காண்களில் தேங்குகின்றன. சில பகுதிகளில் பிரதான வீதிகளில் இந் நீர் தேங்குகின்றது. இது நமதூரின் வடிகாலமைப்பு ஒழுங்கீனத்தையே காட்டுகின்றது. ஆகவே இது தொடர்பில் அக்கரையுடன் கூடிய கூட்டுக்கரிசனையொன்று அவசியமாகின்றது. பொதுவான ஒரு பிரச்சினை என்பதனால் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வைக் காண வேண்டியது தேவையாகின்றது. பொதுமக்கள் ஓர் இணக்கத்துக்கு வந்து ஒரு தீர்வைக்கண்டால் அதை அமுலாக்க அரச உதவிகளைப் பெறுவதும் சுலபமாகிவிடலாம். குறிப்பிட்ட சிலர் மட்டும் கவணமெடுப்பதில் பலனேற்படப் போவதில்லை. ஆகவே வாசகர்களுக்கு இது பற்றிய உங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி பாதையில் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக உள்ள ஒரு சிறிய முல்லை எடுத்து வீசுவது ஈமானின் கடைசிக் கிளை என நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எமது ஈமானுடன் தொடர்புடைய இந்த விடயத்தில் அனைவரும் அக்கரையுடன் ஈடுபட்டு ஒரு சிறந்த தீர்வைக்காண முன்வரல் அவசியமாகும்.

0 comments:

Post a Comment