கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

படுபயங்கரமாக மாணவர்களைத் தாக்கும் ஒரு நோய் ரீடிங் போபியா


நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் சாதக, பாதகங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நிகரானவைகளாகும். குறிப்பாக கற்றலோடு தொடர்பான தொழிநுட்ப விருத்தயானது மனிதனுக்குப் பல சௌகரியங்களை வழங்கியிருந்தாலும் மனிதன் தனது சொந்த முயற்சியைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க கணினி மயமான கற்றல், கற்பித்தல் முறைகளில் தங்கியிருப்பதானது இயற்கையான மனித உழைப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக மாறிவிட்டது. இது மனித குலத்துக்கே ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தலாகின்ற அதே சமயம் திறமைகள் பல கொண்ட மனித சிந்தனைக்கும். உழைப்புக்கும் முடிச்சுப் போடுவதாகவும் அமைகின்றது. இதனடிப்படையில் இதை சமகால மாணவ சமூகத்திலும் தெளிவாகவே காணக் கிடைக்கின்றது.
அண்மைய சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை அவதானிக்கும் போது வரலாறு, தமிழ் போன்ற பாடங்களில் கணிசமான மாணவர்கள் சித்திபெறவில்லை என்பதை காணலாம். இதற்கான காரணங்களை ஆராயும்போது அதிர்ச்சியான பல முடிவுகள் கிடைத்துள்ளன. பாடங்களை வாசித்து தேவையான தகவல்களை சேமித்துக் கொள்ள முடியாமைதான் பெரும்பாலான மாணவர்கள் தாம் சித்தியடையாமைக்குக் கூறும் காரணமாகவுள்ளது. வாசிப்புப் பழக்கம் இல்லாத போது பாடங்களைச் சரிவரக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமற் போகின்றது. இதனால் பாடங்களை முழுமையாக மனனமிட்டுக் கொள்ள மாணவர்கள் முயற்சிக்கின்றனர். இது கற்றல் நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாகும். ஆகவே சாராம்சமாகக் கூறுவதென்றால் வாசிப்பென்றால் ‘நஞ்சு’ என்ற பிரமை மாணவர் உள்ளங்களில் இருந்து அகற்றப்பட்டு வாசிப்பில் ஆர்வங்கொண்டவர்களாக மாணவர்கள் மாற்றப்படுவது மிக மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக உயர்தர படிப்புக்களை மேற்கொள்வதற்கு வாசிப்பு இன்றியமையாத ஒன்றாகின்றது. எனவே பாடசாலை மட்டத்திலும், ஊர்மட்டத்திலும் வாசிக்கின்ற சமூகத்தை துரித கதியில் உருவாக்குதல் என்ற அடிப்படையில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மிக வேகமாக செயற்படுத்தப்படுதல் வேண்டும். இதன் முதற்கட்டமாக முடிந்தளவு சகல வசதிகளையும் கொண்டமைந்த பொது நூலகமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பத்திரிகைகளைவிட புத்தகங்களே பிரதான தேவையாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.

0 comments:

Post a Comment