கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவில் நல்லொழுக்கமுள்ள சமூக சூழலை உருவாக்கல், சாத்தியங்களும், சவால்களும்


பல்வேறு துறைசார் புத்திஜீவிகளையும்,மார்;க்க அறிஞாகளையும் சிறந்த மனிதர்களையும் உருவாக்கிய வரலாறு எமது கஹட்டோவிடாவிற்கு உண்டு. எனினும் தற்போது வயது வித்தியாசமின்றி அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, பாடசாலை முதல் ஆற்றங்கரை வரை பெருகிவிட்ட ஒழுக்கக் கேடுகள், மாணவரிடையே ஏற்பட்டுள்ள கல்வி வீழ்ச்சி……. என்று பட்டியல் நீளுமளவுக்கு நமதூரினி பின்னடைவை எதிர்வு கூறும் காரணிகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடரும் பட்சத்தில் கல்வி, கலாசாரம், பண்பாடு, அபிவிருத்தி போன்ற அனைத்து துறைகளிலும் மீளெழ முடியா பாரிய வீழ்;ச்சியை ஊர் சந்திக்க நேரிடும் என்றே கூறவேண்டியுள்ளது. இதைத்தடுப்பதற்கான பல்வேறுபட்ட பிரயத்தனங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு அதை தோல்வியில் முடிந்த போதும் மீண்டும் அவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கு முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றன. அண்மையில் ஊரில் நடைபெற்ற சில சந்திப்புக்கள் இதை உறுதிசெய்திருக்கின்றன. சிறந்த சமூக சூழலை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றமைப்பில் இவ்விவகாரம் தொடர்பான நமது கருதக்துக்களை பகிர்வுக்காய் இங்கு விடுகின்றோம்.

அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு
ஊரில் பரவியிருக்கும் மேற்கூறப்பட்டவை போன்ற சமூக விரோத செயல்களை கண்கானித்து, குற்றச் செயல்களிலீடுபடுவோருக்கெதிராக முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஊரில் காணப்படும் அனைத்து கொள்கைப்பிரிவினரினதும் பிரதிநிதிகளை கொண்ட ஒரு பொதுக்கமிட்டியை உருவாக்குவது பற்றிய ஆலோசனைகளை முன்வைக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில் இரு வரவேற்கப்பட வேண்டியது என்பதுடன் இதுபோன்ற பொதுக் குழு ஒன்றினாலேயே இப்பணியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது மறுக்க முடியாததாகும்.

கூட்டமைப்பு சாத்தியமா……..?
மேற்கூறியது போன்ற ஒரு கூட்டமைப்பை கடந்த காலங்களில் ஊரின் நன்மை கருதிப் பல்வேறு விடயங்களுக்காக உருவாக்க முய்ற்சித்து உருவாக்கப்பட்டுமிருக்கின்றது. ஆனால் கொள்கை முரண்பாடுகளினால் இக்கூட்டமைப்புக்கள் நிலைக்கவில்லை. கூட்டமைப்பொன்றை உருவாக்குவதில் இது ஒரு கிளைப் பிரச்சினையென்றாலும், இதவே பிரதான பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இயக்க முரண்பாடுகளிற்கிடையில் உடன்பாடு காண்பது சிக்கலான ஒரு விடயமாகும். ஒரு அமைப்பைச் சார்ந்தவர்கள் தமது செல்வாக்கையே முதன்மைப் படுத்த முயற்சித்தால் அடுத்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் இணங்கிப்போவதில் சில அமைப்பினருக்கு விருப்பமின்மை போன்றன இக்கூட்டமைப்பை உருவாக்கும்போது தீர்வு காணப்படவேண்டிய விடயங்களாகின்றன.
என்ன செய்யலாம்……….?
முன்மாதிரியான, சமூகப்பற்றுள்ள,நல்லுள்ளங்கள் புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்புடனும் கைகோர்த்து இப்பணியை மேற்கொள்ள மனமிறங்கி முன்வருவார்களானால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வழி பிறக்க வாய்ப்புள்ளது. அவரவர் கொள்கைகளை அவரவர் பேணுவதோடு பக்கச் சார்பில்லாத ஒரு உடன்படிக்கையை தயார் செய்து அதனடிப்படையில் பொறுப்புணர்வோடும் இதய சுத்தியுடனும் இப்பிரதிநிதிகள் உழைப்பது அவசியமாகின்றது. இது விடயத்தில் இப்பிரதிநிதிகள் மிகுந்த விட்டுக் கொடுப்புடன் இயங்குவதும் தேவையாகின்றது. பொலிஸாரின் உதவியும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இப்பணியில் வெற்றிக்குப் பிரதானமானவை. பொதுக் கூட்டங்களை நடாத்தி மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதோடு பள்ளிவாசல்கள் மூலமாக அவ்வவ் ஜமாஅத்தினருக்கு இப்பணி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். சமூக விரோதச் செயல்களுக்கான காரணமானவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டு அவற்றை ஒழிப்பதற்கான பொதுத்தீர்;மாணமொன்றை மக்கள் முன்னிலையில் இக்குழுவினர் நிறைவேற்றல் வேண்டும். மென்மேலும் இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று நிலைமைக்கேற்ப மாற்ற நடவடிக்கைகளைக் கையாள வேண்டும்.

முடியாது போனால்……….?
மேற்சொன்னவைகளில் இழுபறி முற்றினால் காலத்தின் தேவையான இந்த சமூகப்பணியை செய்ய முடியாது போக இடமுண்டு. அவ்வாறான ஒரு நிலையேற்படின் நாம் சொல்ல விளைவது இதைத்தான். பள்ளி வாசல் நிர்வாகிகள் தமது நிர்வாகத்தின் கீழுள்ள உறுப்பினர்களை முறையாக அவதானித்து ஊரிலேற்பட்டுள்ள அசாதாரண சூழல் பற்றிய விளக்கங்களையும், தெளிவுகளையும் அவர்களுக்கு வழங்கி, தவறு செய்பவர்களைக் கட்டுப்படுத்த முனைவதுடன் நிர்வகா விதிகளை மீறுபவர்களுக்கெதிராக தகுந்த சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பள்ளி நிர்வாகங்களும் செயற்படுமானால் நல்லதொரு சூழல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தென்படலாம். கூட்டமைப்பு உருவாகினோ இல்லையோ இப்பணியில் மிகச் சிறந்ததும், சாத்தியமானதும். இறுதியுமான முறை இந்த முறை மட்டும்தான். எதில் உடண்படாவிட்டாலும் இதில் உடண்படலாம் என்பது திண்ணம். இதிலும் நாம் அசமந்தப் போக்கையே கடைபிடிப்போமானால் ஏற்படப்போகும் பாதிப்புக்கு மறுமையில் நாம் அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்து, நம்மனைவருக்கும் நேரான வழியைக்காட்டி, எமது முயற்சிகள் நிறைவேற அருள் புரிவானாக!

1 comments:

palich! said...

பயனுள்ள ஒரு இடுகை. இதனை மேலும் மெருகூட்டி, ஒரு துண்டுப் பிரசுரமாக ஊரில் எல்லோரது கைகளிலும் தவழ விட முடியுமென்றால்..............?!

Post a Comment