கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையாகிப்போன மார்க்கப் போதனைகள்


கடந்த சாதாரண தரப் பரீட்சையில் குறிப்பிட்ட தொகை மாணவர்கள் இஸ்லாம் பாடத்திலும் சித்தி பெறவில்லையென்ற தகவல் கேட்டதும் மேல் சிலிர்த்து விட்டது. ஒரு காலத்தில் கணிதப்பாடமே சற்று கடினமாகவிருந்த சரித்திரத்தை நாம் அறிகின்றோம். தற்போது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் எனத் தொடர்ந்த கஷ்டமான பாடங்களின் பட்டியலில் புதிதாக வரலாறு, தமிழ் என்ற பாடங்களும் சேர்ந்து விட்டதை நாம் ஏற்கனவே சுற்றிக் காட்டியிருந்தோம். எது கஷ்டமாக இருந்தாலும் இஸ்லாம் பாடம்தான் மாணவர்களுக்கு ஓரளவு கைகொடுக்கக் கூடியதாகவிருந்தது. தற்போது அதுவும் கணிதப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது போலத்தான் தோன்றுகின்றது. இஸ்லாம்பாடத்தில் கோட்டைவிடும் மாணவர்களின் தொகை வருடாவருடம் கூடிக் கொண்டே செல்கின்றது. என்னதான் நடக்கின்றது…? இந்த மாணவர்கள் என்னதான் செய்கின்றார்கள்? என்ற கேள்விகளும் நீண்டுகொண்டுதான் செல்கின்றன. ஏதோ ஓரடிப்படையில் பள்ளிவாசல்களிலும் குர்ஆன் மத்ரஸாக்களிலும் ஓரளவு மார்க்க அறிவை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அத்துடன் பாடசாலைகளிலும் இஸ்லாம் பாடம் கடைசிப் பாடமாகவேனும் கற்பிக்கப்படுகின்றது. இத்துனை முயற்சிகளும் செல்லாக்காசாகப் போய்விட்டதையே இந்த மாணவர்களின் பெறுபேறுகள் நமக்கு உணர்த்துகின்றன. யாரிடம் போய் எதைச் சொல்வது என்ற கூறி சும்மா இருக்க முடியாது. மற்றைய பாடங்கள்போல இஸ்லாம் பாடத்தையும் அதிக அக்கரையுடன் கற்கும் ஆவல் மாணவர்களிடையே உண்டாக்கப்படல் வேண்டும். எனவே பசியும் தூக்கமும் தலைக்கேறிய கடைசிப்பாடநேரத்தில் இஸ்லாம் பாடம் கற்பிக்கப்படுவது துடைத்தெறியப்படல் வேண்டும். இது நாமே நமது மார்க்கத்தைக் கேலி பன்னுவதாக ஆகிவிடமாட்டாதா என்பதையும் ஒரு கனம் நாம் யோசிக்க வேண்டும். கடமைக்கா என்றல்லாமல் மாணவர்களின் சீர்திருத்தத்தை மனதிற்கொண்டு நடைமுறைகளோடு தொடர்பு படுத்தி சிறந்த முறையில் இஸ்லாம் பாடம் மாணவர்களிற்கு கற்பிக்கப்படல் வேண்டும். இஸ்லாமிய நெறிமுறைகள் வழிகாட்டல்களைக் கொண்ட பண்பாடு, கலாசாரம் என்பவற்றைப் பிரதிபலிக்கும் சூழல் பாடசாலைகளில் காணப்படல் வேண்டும். கிறாஅத்துடன் ஆரம்பித்து துஆவுடன் முடிவடைந்து விட்டால் ஏதோ இஸ்லாமியப் பண்பாட்டையே நடைமுறைப்படுத்தி விட்டதாக நாம் மெச்சிக் கொள்வது வடிகட்டிய முட்டாள்தனமாகும். முன்மாதிரியான கடமையுணர்வுள்ள ஆசிரியர் குழாம் செயலாற்ற முனைவார்களானால் அது மாற்றத்திற்கான விடிவெள்ளிகளை நம் வானில் புலரச் செய்யும். இல்லாது போனால் பாதாள உலகக் கும்பல்களையும் காடயர்களையும் பயிற்றவிகும் தளமாக அல்லது சமூக விரோதிகளின் உறைவிடமாக பாடசாலைகள் மாறிப் போவதைத் தவிர்க்க முடியாததாகிவிடும். அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள்.
ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான்
(அல் குர்ஆன்)

8 comments:

Anonymous said...

THE CORRECT MEANING OF THE QURAAN VERSES U GAVE HERE IS...SOORA.. AR RAHDH 13,
"..எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையை தாங்களாகவே மாற்றிக்கொள்ளாதவரை, அள்ழாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை...." (13 ; 11 )
FIRST
TO CHANGE OURSELVES , WE HAVE TO FEAR ALLAAH STUDYING QURAAN WITH MEANING and UNDERSTANDING .........THEN WE CAN HAVE LEADER WHO TOO WAS SELECTED UPON THE BASIS OF TRUE ISLAAM....THEN HE WILL GUIDE US IN THE STRAIGHT PAATH OVERWHELMING ALL EVILS FROM SOCIETY..THUS, WE HAVE TO THINK DEEPLY THE VERSES ABOVE AND MUST OBEY ..OR ELSE ALLAAH WILL NEVER HELP US.....

பளிச்! said...

Hello, Editor of KAHATOWETA,

your Thoughts gives me an idea of that the school administration & the relevant teachers have not shown any interest to teach ISLAM in a proper way. If that is true, how the girls are producing good results? Are the teachers teaching only to girls? No, ... rather never, it is the trend of our boys these days; discipline has gone deep down, not only in schools but also in Madrasas, even. This trend cannot be eliminated without a body with full authority. We all should try to form such an authority very early in order to take care of Education, Discipline and all other matters of our soil, Kahatowita.

ihthisam said...

அஸ்ஸலாமு அழைக்கும்,

இதை யாRதான் பொறுப்பு எடுப்பது?

வேறு வருடங்களில் கணிதம் , விஞ்ஜானம், போன்றவற்றில் சிறந்த சித்திகள் வந்தால், நான் படித்துக்கொடுத்ததால்தான் இப்படி பாஸ் பண்ணினார்கள் என்று பட்டம் அடிக்கும் அஷிரியர்மார்கள் ( A to Z , ஏனைய்ய அமைப்புக்கள், பாடசாலை)

ஏன் இதனை பொறுப்பு எடுக்க யாரும் வருவதில்லையா?

நாம் அனைவரும் circularisam என்னும் யஹூதி , நசாராக்களது திட்டத்துக்கு அகப்பட்டு நீண்டகலமாகி விட்டது , எமக்கு இன்னும் புரியாமல் இருப்பது ஆச்சரியம்.

Anonymous said...

yes dear, i appreciate your comment, no body to take responsibility when G.C.E Results got flop. Proudly those teachers will say, to my tutor this much A, this much B this much C...... if school got Good Result, but, result is negative, no body to talk about this. i'm kindly asking to school teachers, please take care of our society. work for future of our youngsters. Money is not the life, allah will give in other ways, don't sell education. you all are getting government salary, if you guys teach well in school, no need of tutor classes. give hard works to students. make them to concentrate in studies. before, all teachers did their duty well, now a days look fed-up, don't be like that, think about future of our students, allah will give you everything in this world and next world after death also. we study well and got nice jobs, because of you(teachers), now i think you all tired. please, think, you all can do duty well as befor.
thank you
an old boy
of badriya.

Rasny Mohamed 0770643545 said...

salam
kattayamaha manawarhal mathhiyil kalviyen mukkiyaththuwam unarththap padal wendum olungana kalviai arambaththil koduththal nallazu ( grade 1to 5) entha muyachchiyil naam ( kahatowita friendship society ) edu pattullom.insha allah endha warudam 5m aandu manawarhalukku "pulamaip parechchi karuththarangu2010" nadaththa ullom.(ur makkalazu uzawiyudan)

முஹிப்புல் ஹக் said...

இந்த கட்டுரையை வாசிக்கும் போது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. ஏனெனில் எமது ஊரில் முக்கியமான ஒரு இஸ்லாமிய இயக்கம் கடந்த சாதாரண தர வகுப்பு மாணவர்களிற்கு தர்பிய்யா வகுப்புமை் ஏனைய வகுப்புக்களையும் மிகவும் ஆர்ப்பாட்டமாக நடாத்தினார்க்ள். தர்பிய்யா வகுப்புக்குப் சென்ற மாணவர்கள் அங்கு என்னதான் செய்தார்கள். மேலும் அகதியா என்ற ஒரு சங்கமும் இந்த மாணவா்களிற்கு வகுப்பு நடாத்தினார்கள். அதற்கும் என்ன நடந்தது? எல்லாம் அவரவா் இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் முயற்சிதான் என்பது இப்போது விளங்குகிறது..............

Unknown said...

Assalamualikum,

Dear brother Mr.Muhebul Haq,

Above you said comments absoulutly right....

palich! said...

visit www.palichkahatowita.blogspot.com for latest 'Gazzette'

Post a Comment