கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

Dr. Zakir Naik's response for Maldivian publicly renouncing Islam

Dr Zakir Nayke அவர்களிடம் ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை மறுக்கும் கேள்வி

2010 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதி


Insha Allah, the intake of Second batch of students for Tanweer Academy Sinhala Medium Al-Alim Course will be held at 10.30am on Tuesday, 01st June, 2010 at the Academy premises. Alhamdulilllah, 20 students who have done the Sinhala Medium G.C.E O/L in 2009 have been selected from various part of the Island.
However, considering the importance of Sinhala Medium Ulama for the districts such as Kandy, Badulla, Nuwaraeliya, Matara, Hambantota and Colombo it has decided to select 05 more students from these areas through a fresh interview. The minimum Qualification required is 05 passes. Interested parents/ students from these areas, please contact 0777874982 immediately for more details.


தன்வீர் அகடமியின் சிங்கள மொழிமூல அல்-ஆலிம் (ஷரீஅ) கற்கைநெறியின் 2010 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதிக்கும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ எதிர்வரும் 01/06/2010 காலை 10.00 மணிக்கு திஹாரிய தன்வீர் அகடமியில் நடைபெறும்.
அத்துடன் கண்டி, நுவரெலியா, கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்த்தோட்டை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் ஐந்து மாணவர்கள் இக்குழுவுக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். எனவே, மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த சிங்கள மொழிமூலம் கற்று அம்மொழிலேயே 2009 இல் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் உடன் விண்ணப்பிக்கலாம். இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் 05 பாடங்களிலேனும் சித்தியெய்தியிருத்தல் வேண்டும். மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள 0777874982 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தகவல் Muslim Watch Group

கிளை 05 : அதற்காகத்தான் காத்திருக்கின்றோம்.

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
.......................................................................................................
காலை ஐந்தரை மணி அலாம் ஓசை காதைப் பிளக்க, பதறியடித்துக் கொண்டு நித்திரைக்கு கடுப்போடு விடை கொடுத்து, அலுவலகம் செல்ல ஆயத்தாமாகும் அந்தப் பொழுதினில் வேதனைதான். விரும்பியும் விரும்பாதும் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற ஒரு சான் வயிற்றின் போராட்டமல்லவா இது. முதலாளி, தொழிலாளி என்ற நியதியை மாற்றுவதற்குப் படைத்தவனாலேயே முடியும். இந்த விதிகளில் பொறுத்தவருக்கே வாழ முடியும். இந்த ஆறுதல்களை தமக்குத்தாமே கூறிக்கொண்டு சில உருவங்கள் ஓட்டமும் நடையுமாக அந்த 185 இலக்க பேரூந்தின் வருகைக்காய் நடக்கின்றன. காத்திருப்பின் வலியும்,வேதனையும் நம்மூர் பஸ் நிலையத்தில்தான் தெரிகிறது. இரண்டு கால்கள் ஒற்றைக் காலாகி, ஒற்றைக் கால் முழங்காலாகி .......... என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எங்களுக்கு இதுவெல்லாம் பழகிப்போச்சு. எங்களைப் போல் நிற்பதில் பட்ட மரமும் தோற்றுவிடும். மரண வேதனை என்னவென்றறிய நம்மூர் பஸ்ஸில் பயணித்தால் நன்கு புரியும். கால்கள் பின்னிக் கொள்ள உடல் நசுங்கி விழி பிதுங்கி மூச்சுத் திணறி கோமாவையும் மிஞ்சிடலாம். மரண வேதனைக்கு ஒத்திகையா இது என்று புலம்புவதற்கும் நாவிற்கு சீவனிருக்காது. இது சில நிமிட அவஸ்தைதான். ஆனால் எங்களுக்கு இதுவொரு ஆயுள் தண்டனை. சுதந்திரத்திலாவது எங்கள் தண்டனைக் காலம் குறைக்கப்படலாம் என்பதில் எங்களுக்கு இனிமேலும் நம்பிக்கையில்லை. கடைசியாய் நாம் வேண்டுவதெல்லாம் எங்கள் புலம்பல் எவருக்கும் இன்னும் புரியவில்லையா என்பதைத்தான்.

கிளை 04 - இங்கு சென்றால் ஊமையனும் பேசுவான்

அடுத்த வீட்டு அடுக்குப் பானையிலிருந்து வெள்ளை மாளிகை பல்கனி வரைக்கும் அத்தனையும் இங்கு விவாதிக்கப்படும். புதிதாக ஒருவர் அங்கு சென்றால் ‘சடன, ரதுஇர, மின்னல்’ போன்ற நிகழ்ச்சிகளை இங்குதான் நடாத்துகின்றார்களோ என்றெண்ணத் தோன்றும். அமைதி என்ற வார்த்தைக்கு இவர்களின் அகராதியில் இடமில்லை. எடுக்கக் கூடாதவைகளைவிட எடுக்கத் தேவையானவைகள் இவர்களின் கதைச் சமர்களில் காணக் கிடைக்கின்றன. இவர்களோடு மோத எவராலும் முடியாது என்று சிலர் எல்லை மீறி இவர்களைக் கடிந்ததுமுண்டு. இவர்களின் கண்ணாடியில் ஊரையும் பார்க்கலாம், உலகையும் பார்க்கலாம்.

லார்ஸ் வில்க்ஸ் Lars Vilks உதைக்கப்படும் காட்சிகள்

மனித நாகரீக விரோத கேலிச் சித்திரத்தினூடாக பிரபல்யம் அடைந்த லார்ஸ் வில்க்ஸ் இவன் நேற்று டென்மார்க் பல்கலை கழக மாணவர்கள் மத்தியில் இறுதித் தூதர் முஹம்மத்-ஸல்- அவர்களை ஒரு தன்னினச் சேர்க்கையாளராக சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் அடங்கிய வீடியோ காட்சிகளை காண்பித்தபோது கோபம் கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டுள்ளான், இந்த சம்பவத்தில் ஒரு பல்கலை கழக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்

பல நூறு சொற்களில் வரையப்படும் அரசியல் பிரச்சினையை ஒரு கேலிச் சித்திரத்தினூடாக மிக எளிமையாக வெளிப்படுத்த முடியும் என்பதாலும் வாசிக்க சோம்பல் படுபவர்கள் கூட காட்டூன் – கேலிச் சித்திரம் என்றால் அவர்களும் விளங்கி கொள்வார்கள் என்பதாலும் காட்டூன் பிரபல்யம் பெற்றிருக்கின்றது இந்த ஊடக முறை நன்மைக்கும் , அழிவுக்கும் பயன்படுத்துகின்றன.

இந்த வகையில் இன்று மேற்குலக பத்திரிகைச் சூழலில் கேலிச் சித்திரங்கள் மிகவும் மோசமான இன வன்முறை ,ஆபாச வெறி , இன , மத வெறி, துவேசம் போன்றவற்றை தூண்ட மிகவும் அதிகமாக பயன்படுத்தபட்டுள்ளது, பயன்படுத்த பட்டுகொண்டிருகின்றது என்பது வரலாறு இந்த வகையில் மேற்கு மேலாதிக்க சக்திகள் முழு அளவில் இஸ்லாமிய எழுச்சியை ,இஸ்லாத்தை மிகவும் மோசமான வாழ்க்கை முறையாக சித்தரித்து காட்டுவதில் ஒன்றுக்கு ஒன்று சிறப்பாக செயல்படுகின்றது இறைவனின் இறுதித் தூதரான முஹம்மத்-ஸல்- அவர்களை கருப்பொருளாக கொண்ட மிகவும் மோசமான மனித நாகரிகத்துக்கு எதிரான , விரோதமான சித்திரங்களை வரைவதிலும் அவற்றை பதிவு செய்வதிலும் பெருமை கொள்கின்றன வீடியோ
இவர்களின் இந்த மனித நாகரீக விரோத செயல்கள் பல முறைகளில் எதிர்கொள்ளப்படுகின்றன அவற்றுள் ஒன்றுதான் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ காட்டும் பதிவு டென்மார்க் பல்கலை கழகம் ஒன்றில் அண்மையில் மனித நாகரீக விரோத கேலிச் சித்திரத்தினூடாக பிரபல்யம் அடைந்த லார்ஸ் வில்க்ஸ் என்ற சியோனிச கைக்கூலி டென்மார்க் பல்கலை கழக மாணவர்களினால் உதைக்கபட்டுள்ளார் அந்த காட்சிகளை இங்கு பார்க்கலாம் .

கைத்தொலைபேசி மூலமான ஆபாச இணையங்களுக்கு நீதிமன்றம் தடை




புதன்கிழமை, 26 மே 2010 21:59

கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையதளங்களைத் தடை விதிக்க கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்தது.

20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை திறப்பு


கடந்த 20 வருடங்களின் பின்னர் யாழ்பாண பெரிய பள்ளிவாசல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளாதாக அப்பள்ளி வாசல் நிர்வாக சபை முக்கியஸ்தர் சட்டத்தரணி ரமீஸ் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு யாழ் குடா நாடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிற்பாடு யாழ் நகரில் முஸ்லிம்கள் வசிக்காத காரணத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே இப்பள்ளிவாசல் காணப்பட்டது. எனினும் தற்போது யாழ் நகரில் முஸ்லிம்கள் மீண்டும் குடியேறியுள்ள காரணத்தால் மீள் புனர்நிர்மானத்துடன் இப்பள்ளிவாசல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக் கிழமை யாழ்ப்பாண ஜின்னா மைதானத்தில் வைத்திய முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார்.

யாழ்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 1713ஆம் ஆண்டு ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. இதுவே யாழ்ப்பாணத்தின் முதல் பள்ளிவாசலும் ஆகும்.

எதிர்வரும் வெள்ளிக் கிழமை இப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள குத்பா பேருரை அஷ்ஷெய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் அவர்களால் நிகழ்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A

கிளை 03 : முச்சந்தி டீக்கடை.

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
.......................................................................................................................................................
ஒரு கிராமத்து வீடு எப்படியிருக்குமோ அது போலதான் எல்லாமே எளிமை அந்த டீக்கடையிலே. சுபுஹ{ தொழுததும் வாய்க்கேதேனும் வேண்டுமென்பதற்காய் பலர் அக்கடைக்கு ஓடோடி வருவர். எல்லாச் சிற்றுண்டிகளும் அங்கு பொதுவாகச் சூடாகவே இருக்கும். வந்த அவசரத்தில் சூடான ஒரு லேவரியாவைக் கடித்து வாயில் சூடு பட்டதும் அதைக் காட்டிக்கொள்ளாமல் சிலர் கதையை மாற்றுவர். அரசியல் முதல் அடுப்பங்கரைவரை அத்துணையும் சுழற்சி முறையில் அங்கு அலாவப்படும். அதற்கிடையில் நக்கல்,நையாண்டி எல்லாம் கலந்த ஓர் அரட்டையரங்கையே அங்கு பார்க்கலாம். எதை மறந்தாலும் அந்தக் கடைக்கேயுரிய அந்த நேரத்து டீயை யாராலும் மறக்க முடியாது. ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் இது போல டீ போடவே மாட்டாங்கப்பா என்று கூட சிலர் அந்த டீயை மெச்சியதுண்டு.

கிளை 02 : சூர்யோதய சீண்டல்கள்..

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
......................................................................
‘பஜ்ர்’ தொழுகைக்கான அதான் நாற்றிசையெங்கும் ஒலிக்கும் கம்பீரம், கட்டாக்காளி நாய்களின் ஊலையிடும் இறைச்சல்கள், பருந்துக்கஞ்சி தாயின் இறக்கைக்குள் தஞ்சம் புகுந்த கோழிக் குஞ்சுகள் அச்சம் நீங்கியதும் வெளியில் வருவது போல உழைத்துக் களைத்து, நிறைவேறவேண்டிய கனாக்களுடன் அவ்வப்போது செல்லமாய் சீண்டும் சோகங்களும் ஒரே நொடியில் அதயத்தில் சங்கமித்தமையால் அந்த நிமிடமே கண்ணயர்ந்து இரவின் மடியில் ஆறுதல் கானும் அந்த இதமான வைகறைப் பொழுதினிலே இவ்வுலகிலேயே நிம்மதியை தரும் ஒரே இடமான பள்ளி வாசல்களை நோக்கி நடக்கும் சில கால்களின் செருப்போசைகள். தன்னையே நம்பி வாழும் விட்டில் பூச்சுக்களுக்காகவும், பாதை சாரிகளக்காகவும் இரவு முழுதும் சளைக்காது ஒளி வீசிக்கொண்டிருக்கும் பாதையோர மின் விளக்குகள், சின்னஞ்சிறுசுகள், தத்தித்தத்தி நொண்டிக்கோடு விளையாடுவது போல விடியலின் வருகையை ஊருக்குச் சொல்லும் பாலங் குருவிகளின் கீச்சல்கள், இவையனைத்தும் எங்க@ரின் உதய தரிசனத்துக்குரியவையாகும்.

சீர்திருத்த மாநாடு பாதியிலே முறிவுறும் அபாயம்.......!!!

ண்மைக்காலமாக கஹட்டோவிடாவில் பண்பாடு ரீதியாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்திற்கொண்டு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக நாம் ஏலவே வரிவாகக் சுட்டிக்காட்டியிருந்தோம். இவ்விவகாரம் தொடர்பில் இதுவரைக்கும் மூன்று அமர்வுகளில் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. நான்காம் அமர்விற்கும் தினம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இதுவரைக்கும் இந்தக் கூட்டத் தொடர்களில் காணக் கிடைக்கவில்லை. இது பற்றிய நமது முன்னைய இடுகைகளில் நாம் குறிப்பிட்ட “ஒரு பிரிவனரின் பிரசன்னம் மற்றய பிரிவினருக்குப் பிடியாமை” அல்லது “குறித்த ஒரு பிரிவினர் தமது செல்வாக்கை இப்பொதுக்குழுவில் நிலை நிறுத்த முயற்சித்தல்” என்ற விடயம்தான் தற்போதைய இந்த சீர்திருத்த கூட்டத் தொடரிலும் பெரும் சிக்கல்களை உண்டுபண்ணியிருக்கின்றது. இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த ஒருவர் இன்னொரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி அப்பிரிவினரோடு ஒன்றிணைந்து செயல்படுவதை தாம் விரும்பவில்லையென்பதை உணர்த்தியுள்ளார். கொள்கை ரீதியாக முரண்பட்ட போக்குடைய மூன்று பிரதான பள்ளி நிர்வாகங்கள் ஏதோ ஓர் அடிப்படையில் இப்பொது விடயத்தில் இணைந்து செயற்படுதற்கான சாத்தியக் கூறுகள் ஆரம்பத்தில் ஓரளவு காணப்பட்டன. எனினும் தற்போது நிலைமை தலைகீழாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பிரிவினரைக் காரணம் காட்டி ஊரின் முன்னேற்றங்களை கை நழுவவிடுவது அறிவுடைமையாகாது. என்றாலும் இப்பின்னடைவுக்குப் பின்னனியில் குறிப்பிட்ட சிலர் சதி செய்கின்றார்கள் என்பது நியாயமான ஊகமாகின்றது. ஏனெனில் ஊரின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் சிலர் இந்தப் பொதுக் குழுவில் தாம் உள்வாங்கப்படுதற்கும், தமக்குப் பிடிக்காத சிலர் இப்பொதுக் குழுவிலிருந்து அகற்றப்படுவதற்கும் தந்திரமாக காய் நகர்த்துவதாகவும் தமது சதி முயற்சிகள் தோல்வியடையும் போது குறிப்பிட்ட ஒரு பிரிவினரைக் காரணம் காட்டி “ இவர்கள் இருப்பதால்தான் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது” என்று சொல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய புள்ளுருவிகள் இருக்கும் வரைக்கும் எந்த நல்ல காரியங்களையும் செய்ய முடியாது என்பது திண்ணம். இத்தகைய களைகள் முளையிலேயே கிள்ளி வீசப்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு பள்ளி வாசல்களும் தமது நிருவாகத்தின் கீழுள்ள அங்கத்தவர்களை நெறிப்படுத்துவதே இப்பிரச்சினைக்குத் தகுந்த தீர்வாக அமையுமென்பது நமது கருத்தாகும்.

நேற்றிரவு கடும் மழை மீண்டுமொரு வெள்ள அபாயம் தோன்றலாமென்று மக்கள் அச்சம்.





நேற்றிரவு கஹட்டோவிடாவிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடும் மழை பொழிந்துள்ளது. இன்றும் மழையுடன் கூடிய காலநிலையே நிழவுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றில் முன்பெப்போதும் வெள்ளம் ஏற்படாத வெயான்கொடையை அண்டிய பகுதியான நைவலை பிரதேசத்திலும் இம்முறை வெள்ள அனர்த்தமேற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவில் ஏற்பட்ட வெள்ளம் தொடா்பான தகவல்களை நிழற்படங்களுடன் வழங்கியிருந்தோம். மீண்டும் அத்தகைய பயங்கர வெள்ளமொன்று எந்நேரமும் கஹட்டோவிடாவைத் தாக்கலாம் என்ற பீதி மக்களிடையே ஆட்கொண்டிருக்கின்றது. இச்செய்தியை நம் பதிவிரக்கம் செய்யும் வரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவல்களினடிப்படையில் கஹட்டோவிடாவின் முகப்பையொட்டிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாக கூடிக்கொண்டு செல்வதாகத் தெரிகின்றது. பெரும்பாலும் இன்றிரவு இந்த நீர் மட்டம் அதிகரித்து பெரு வெள்ளமேற்படலாம்.

கிளை 01- அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

...............................................................................
கிளை 01 : இவர்களும் தூண்டிலும்..
எங்கள் ஊரை ஓரக் கண்ஜாடையால் உரசிச் செல்லும் அந்த ஆறு எங்களுக்கு நண்பனும்தான் எதிரியும்தான். கோடை வெயில் குளியல்தான் அந்த ஆற்றங்கரைக்கு எங்களைக் கூட்டிச் செல்கிறது. சில மணி நேர அந்த சந்தோஷங்கள் எங்கள் வாழ்வின் ரம்யங்கள். ஒரேயொரு கெண்டை மீனுக்காய் ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் கொக்குகள் போல குறிஞ்சி நிலக் குன்றுகளாக ஆற்றிடையே வீட்டிருக்கும் கற்களில் தூண்டிலும் கையுமாய் நாம் ஏங்கிய அந்தக் கனப் பொழுதுகளை மறக்க முடியுமா? ஒரு மீன் சிக்கினால் போதும் அது எங்களக்கு விலை மதிப்பற்ற அம்பருக்குச் சமம். வறுவல்,பொறியல் அத்துனையும் கலந்த ஆற்று மீன் சமயல் ஆயிரம் நாவிருந்தாலும் அதை ருசிக்க அவையும் போதாது. இங்கே பொழுதையும் கழிக்கிறோம் எங்கள் மனச் சுமைகளையும் இறக்கின்றோம். உழைத்துக் களைத்த எங்கள் வாழ்வின் சௌந்தர்ய நிமிடங்களில் இதுவும் ஒன்றுதான்.

சூடான்: உமர் பஷீர் மீண்டும் வெற்றி



சூடானில் கடந்த 24 ஆண்டு களுக்குப் பின்னர் நடந்த, பல கட்சிகள் களமிறங்கிய தேர்தலில் உமர் ஹஸன் அல் பஷீர் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள் ளார். எதிர்க்கட்சியின் பல வேட் பாளர்கள் பின்வாங்கியதை அடுத்து பஷீர் மீண்டும் தெரிவுசெய்யப்படு வார் என்ற பரவலான எதிர்பார்ப்பு அந்நாட்டில் நிலவியதாக அவ தானிகள் கூறுகின்றனர்.


ஏப்ரல் 26ம் திகதி தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள முடிவின்படி உமர் பஷீர் 68%மான வாக்குகளைப் பெற்றுள்ளார். சூடான் தேசிய தேர் தல் ஆணையகத்தின் தலைவர் ஆபில் அய்யாஷ், "பஷீர் அதிகப் படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்" என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்துள் ளார். தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, நாட்டு மக்களுக்கு உரை யாற்றிய பஷீர், "தனக்கு ஆதரவ ளித்த, ஆதரவளிக்காத அனைத்துப் பிரஜைகளுக்கும் தாம் சேவையாற் றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று அரைச் சுயாட்சி நிலவும் தெற்குப் பிராந்தியத்தில் நடந்த மீள் தேர்தலில் சூடான் மக்கள் விடுதலை இயக்க தலைவர் சல்வா கிர் வெற்றி பெற்றுள்ளார். அப்பிராந்தியத்தில் 92.9%மான வாக்குகளை கிர் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவிக்கின் றது. 2,616,613 வாக்குகளை கிர் பெற்றுள் ளார். தென் பிராந்தியம் கிறிஸ்தவர்களை பெரும்பான்மை யாகக் கொண்டுள் ளமை குறிப் பிடத்தக்கது.
2005ல் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போ தைய தேர்தல் கள் நடைபெற்று முடிந்துள்ளன. இவ்வமைதி ஒப்பந் தத்தின் மூலமே வடக் கிற்கும் தெற்கிற்குமான சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அதிகா ரப் பரவலாக்கம் தொடர் பான இணக்கம் காணப்பட்டது. பஷீரின் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் தெற்கின் சூடான் மக்கள் விடுதலை அமைப் பிற்கும் இடையில் இவ்வமைதி ஒப்பந்தம் நடைபெற்றது.
தற்போது ஜனாதிபதி, பாராளு மன்ற, பிராந்திய உள்ளூராட்சி என மூன்று தேர்தல்களும் ஒருசேர நடைபெற்று முடிந்துள்ளன. எதிர்க் கட்சிகள் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சிக் கின்றபோதும் தேர்தல் ஆணைய கம் அதனை மறுத்துள்ளது. நாட் டின் சில பிரதேசங்களில் இவ்வா றான குழப்படிகள் நடைபெற் றுள்ளதாக கார்டூமிலுள்ள ஆபிரிக்க நீதியமைப்பின் தலைவர் ஹாபிஸ் முஹம்மத் கருத்து வெளியிட்டுள் ளார்.
வடக்கின் பல மாநிலங்களில் சூடான் மக்கள் விடுதலை இயக் கம் பாராளு மன்றத் தேர்தலை பகிஷ்கரித்திருந்தது. அதேபோன்று ஜனாதிபதி வேட்பா ளராகக் கள மிறங்கிய யாஸிர் அர்மானும் முன்னாள் பிரதமர் ஸாதிக் அல் மஹ்தி ஆகியோரும் தேர்தலைப் பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது.
2011 ஜனவரியில் எண்ணெய் வளம் கொண்ட தெற்குப் பிராந் தியத்தின் சுயாட்சி குறித்த அபிப் பிராய வாக்கெடுப்பொன்று நடை பெறுவதற்கு முன்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட வாறு இந்த அபிப்பிராய வாக் கெடுப்பு நடத்தப்படும் என பஷீர் உறுதியளித்துள்ளார். சூடானின் தேசிய தொலைக்காட்சியில் உரை யாற்றியபோது, "திட்டமிடப்பட் டுள்ளவாறே தெற்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறும் என பஷீர் தெரிவித்தார். இதேவேளை, நாட்டின் மேற்குப் புறமாக உள்ள தார்பூர் பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்க ளும் நடைபெறும்" எனவும் அவர் கூறினார்.
பஷீர் மீது பிடியாணை விதித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உட்பட அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

கேள்வியே கேட்கக் கூடாதென்று கூறி வாயைக் கட்டிப்போட்டு விட்டு மார்க்கத்தின் பெயரால் கண்டதையெல்லாம் பிரசாரம் செய்யும் மதப் போதகர்கள்- மௌலவி முஜாஹித் உரை

கப்றில் முன்கர் நகீர் ஒருவரிடம் உனது ரப்பு யார் என்று கேட்டதும் அவர் அச்சமிகுதியால் முகையத்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பெயரைக் கூறினாராம். குழம்பிப்போன இந்த மலக்குகள் அல்லாஹ்விடம் இதை முறையிட, அல்லாஹ்வோ முஹம்மத் எனது ஹபீப், முஹையத்தீன் அப்துல் காதர் எனது மஹ்பு{ப். ஆகவே அவர் எனது மஹ்பூபின் பெயரைக் கூறியுள்ளார், எனவே அவரை சுவர்க்கத்திற்கு அனுப்புங்கள் என்று கட்டளையிட்டானாம். ஆகவே கப்றில் உனது ரப்பு யார் என்று கேள்வி கேட்டால் முஹிதீன் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்லலாம் என்று ஒரு மதபோதகர் பள்ளத் தக்கியாவில் உரையாற்றியுள்ளதாக நேற்று தஃவாப் பள்ளிவாசலில் நடைபெற்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் மௌலவி முஜாஹித் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இத்தகைய கருத்தானது தெளிவான இறைநிராகரிப்பாகும் என்பதைத் தெளிவு படுத்தி இத்தகைய கூற்று படுபயங்கரமான பிழை என்பதை உணர்த்தி பகிரங்கமாகவோ அல்லது தக்கியாவிற்குள்ளோ இக்கருத்தை வாபஸ் பெறவைக்க வேண்டும் என்றும் கூறினார். இவ்வாறு அந்த மார்க்கப் போதகர் சொல்லியிருப்பது மிகப் பெறும் தவறு என்பதை உணர்ந்த சில தரீக்காச் சகோதரர்கள் இதனால் குழம்பிப் போயிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆகவே இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற இவ்வாறான விசக் கருத்துக்களை நாக்கூசாமல் எப்படியப்பா சொலகிறார்கள் என்பதை எண்ணும் போதுதான் ஆச்சரியமாகவிருக்கின்றது.

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றோருக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்.


கடந்த சனிக்கிழமை பெய்த பெரும் மழையினால் கஹடோவிட்டாவின் நுழைவாயிற் பகுதி
கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. சுமார் 50 குடும்பங்கள் இதனால் நிர்க்கதிக்குள்ளானதாக உத்தியோகபூர்வ தகவல்கள் சுட்டிக்காட்டிகின்றன. குறிப்பாக கிணறுகள், மலசலகூடக் குழிகள் போன்றவற்றில் வெள்ள நீர் உட்புகுந்தமையால் பாரிய சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படிகின்றது. இவ்விடயம் அனர்த்த நிவாரண அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு வெள்ளப்பெருக்கில் சிக்குண்ட குடும்பங்களுக்கு கஹடோவிட Muslim Ladies Study Circle காரியாலயத்தில் நேற்று உலருணர்வுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. இன்னிகழ்வில் அனர்த்த நிவாரண அமைச்சரின் செயலாளரும் கலந்து சிறப்பித்தார்.

கஹட்டோவிடாவில் வெள்ள நீர் வடிவு, நிலைமை வழமைக்குத் திரும்பிகிறது. (இணைப்பு 02)

நேற்றைய தினம் பெய்த கடும் மழைகாரணமாக வெள்ளத்தில் மூழ்கிய கஹட்டோவிட வெள்ள நீர் வடிவின் பின்னர் சுமுக நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணப் பொருட்களை வழங்க எமதூரின் அரசியற் பிரமுகர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.