நேற்றிரவு கடும் மழை மீண்டுமொரு வெள்ள அபாயம் தோன்றலாமென்று மக்கள் அச்சம்.
நேற்றிரவு கஹட்டோவிடாவிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடும் மழை பொழிந்துள்ளது. இன்றும் மழையுடன் கூடிய காலநிலையே நிழவுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றில் முன்பெப்போதும் வெள்ளம் ஏற்படாத வெயான்கொடையை அண்டிய பகுதியான நைவலை பிரதேசத்திலும் இம்முறை வெள்ள அனர்த்தமேற்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவில் ஏற்பட்ட வெள்ளம் தொடா்பான தகவல்களை நிழற்படங்களுடன் வழங்கியிருந்தோம். மீண்டும் அத்தகைய பயங்கர வெள்ளமொன்று எந்நேரமும் கஹட்டோவிடாவைத் தாக்கலாம் என்ற பீதி மக்களிடையே ஆட்கொண்டிருக்கின்றது. இச்செய்தியை நம் பதிவிரக்கம் செய்யும் வரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவல்களினடிப்படையில் கஹட்டோவிடாவின் முகப்பையொட்டிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாக கூடிக்கொண்டு செல்வதாகத் தெரிகின்றது. பெரும்பாலும் இன்றிரவு இந்த நீர் மட்டம் அதிகரித்து பெரு வெள்ளமேற்படலாம்.
0 comments:
Post a Comment