கிளை 05 : அதற்காகத்தான் காத்திருக்கின்றோம்.
புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
.......................................................................................................
காலை ஐந்தரை மணி அலாம் ஓசை காதைப் பிளக்க, பதறியடித்துக் கொண்டு நித்திரைக்கு கடுப்போடு விடை கொடுத்து, அலுவலகம் செல்ல ஆயத்தாமாகும் அந்தப் பொழுதினில் வேதனைதான். விரும்பியும் விரும்பாதும் உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற ஒரு சான் வயிற்றின் போராட்டமல்லவா இது. முதலாளி, தொழிலாளி என்ற நியதியை மாற்றுவதற்குப் படைத்தவனாலேயே முடியும். இந்த விதிகளில் பொறுத்தவருக்கே வாழ முடியும். இந்த ஆறுதல்களை தமக்குத்தாமே கூறிக்கொண்டு சில உருவங்கள் ஓட்டமும் நடையுமாக அந்த 185 இலக்க பேரூந்தின் வருகைக்காய் நடக்கின்றன. காத்திருப்பின் வலியும்,வேதனையும் நம்மூர் பஸ் நிலையத்தில்தான் தெரிகிறது. இரண்டு கால்கள் ஒற்றைக் காலாகி, ஒற்றைக் கால் முழங்காலாகி .......... என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எங்களுக்கு இதுவெல்லாம் பழகிப்போச்சு. எங்களைப் போல் நிற்பதில் பட்ட மரமும் தோற்றுவிடும். மரண வேதனை என்னவென்றறிய நம்மூர் பஸ்ஸில் பயணித்தால் நன்கு புரியும். கால்கள் பின்னிக் கொள்ள உடல் நசுங்கி விழி பிதுங்கி மூச்சுத் திணறி கோமாவையும் மிஞ்சிடலாம். மரண வேதனைக்கு ஒத்திகையா இது என்று புலம்புவதற்கும் நாவிற்கு சீவனிருக்காது. இது சில நிமிட அவஸ்தைதான். ஆனால் எங்களுக்கு இதுவொரு ஆயுள் தண்டனை. சுதந்திரத்திலாவது எங்கள் தண்டனைக் காலம் குறைக்கப்படலாம் என்பதில் எங்களுக்கு இனிமேலும் நம்பிக்கையில்லை. கடைசியாய் நாம் வேண்டுவதெல்லாம் எங்கள் புலம்பல் எவருக்கும் இன்னும் புரியவில்லையா என்பதைத்தான்.

1 comments:
ஸலாம்.
உங்களது இலக்கிய நடையுடன் எனது கருத்துக்களை பதிய முனைந்தேன் ஆனால் சொற்கள் இடைமறிக்கி்ன்றன. என்றாலும் ”அவன் எழுதும் கிராமத்து தரிசனம்” என்ற தொடர் மேலும் பல சிறப்பான அன்றாட நிகழ்வுகளை சுமந்து வரவேண்டுமென்ற பிரார்த்தனையுடன், வாழ்த்தும் இவள் IF
Post a Comment