கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிளை 03 : முச்சந்தி டீக்கடை.

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
.......................................................................................................................................................
ஒரு கிராமத்து வீடு எப்படியிருக்குமோ அது போலதான் எல்லாமே எளிமை அந்த டீக்கடையிலே. சுபுஹ{ தொழுததும் வாய்க்கேதேனும் வேண்டுமென்பதற்காய் பலர் அக்கடைக்கு ஓடோடி வருவர். எல்லாச் சிற்றுண்டிகளும் அங்கு பொதுவாகச் சூடாகவே இருக்கும். வந்த அவசரத்தில் சூடான ஒரு லேவரியாவைக் கடித்து வாயில் சூடு பட்டதும் அதைக் காட்டிக்கொள்ளாமல் சிலர் கதையை மாற்றுவர். அரசியல் முதல் அடுப்பங்கரைவரை அத்துணையும் சுழற்சி முறையில் அங்கு அலாவப்படும். அதற்கிடையில் நக்கல்,நையாண்டி எல்லாம் கலந்த ஓர் அரட்டையரங்கையே அங்கு பார்க்கலாம். எதை மறந்தாலும் அந்தக் கடைக்கேயுரிய அந்த நேரத்து டீயை யாராலும் மறக்க முடியாது. ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் இது போல டீ போடவே மாட்டாங்கப்பா என்று கூட சிலர் அந்த டீயை மெச்சியதுண்டு.

0 comments:

Post a Comment