கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சூடான்: உமர் பஷீர் மீண்டும் வெற்றி



சூடானில் கடந்த 24 ஆண்டு களுக்குப் பின்னர் நடந்த, பல கட்சிகள் களமிறங்கிய தேர்தலில் உமர் ஹஸன் அல் பஷீர் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள் ளார். எதிர்க்கட்சியின் பல வேட் பாளர்கள் பின்வாங்கியதை அடுத்து பஷீர் மீண்டும் தெரிவுசெய்யப்படு வார் என்ற பரவலான எதிர்பார்ப்பு அந்நாட்டில் நிலவியதாக அவ தானிகள் கூறுகின்றனர்.


ஏப்ரல் 26ம் திகதி தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள முடிவின்படி உமர் பஷீர் 68%மான வாக்குகளைப் பெற்றுள்ளார். சூடான் தேசிய தேர் தல் ஆணையகத்தின் தலைவர் ஆபில் அய்யாஷ், "பஷீர் அதிகப் படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்" என்பதை உத்தியோக பூர்வமாக அறிவித்துள் ளார். தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, நாட்டு மக்களுக்கு உரை யாற்றிய பஷீர், "தனக்கு ஆதரவ ளித்த, ஆதரவளிக்காத அனைத்துப் பிரஜைகளுக்கும் தாம் சேவையாற் றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று அரைச் சுயாட்சி நிலவும் தெற்குப் பிராந்தியத்தில் நடந்த மீள் தேர்தலில் சூடான் மக்கள் விடுதலை இயக்க தலைவர் சல்வா கிர் வெற்றி பெற்றுள்ளார். அப்பிராந்தியத்தில் 92.9%மான வாக்குகளை கிர் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவிக்கின் றது. 2,616,613 வாக்குகளை கிர் பெற்றுள் ளார். தென் பிராந்தியம் கிறிஸ்தவர்களை பெரும்பான்மை யாகக் கொண்டுள் ளமை குறிப் பிடத்தக்கது.
2005ல் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போ தைய தேர்தல் கள் நடைபெற்று முடிந்துள்ளன. இவ்வமைதி ஒப்பந் தத்தின் மூலமே வடக் கிற்கும் தெற்கிற்குமான சிவில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அதிகா ரப் பரவலாக்கம் தொடர் பான இணக்கம் காணப்பட்டது. பஷீரின் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் தெற்கின் சூடான் மக்கள் விடுதலை அமைப் பிற்கும் இடையில் இவ்வமைதி ஒப்பந்தம் நடைபெற்றது.
தற்போது ஜனாதிபதி, பாராளு மன்ற, பிராந்திய உள்ளூராட்சி என மூன்று தேர்தல்களும் ஒருசேர நடைபெற்று முடிந்துள்ளன. எதிர்க் கட்சிகள் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சிக் கின்றபோதும் தேர்தல் ஆணைய கம் அதனை மறுத்துள்ளது. நாட் டின் சில பிரதேசங்களில் இவ்வா றான குழப்படிகள் நடைபெற் றுள்ளதாக கார்டூமிலுள்ள ஆபிரிக்க நீதியமைப்பின் தலைவர் ஹாபிஸ் முஹம்மத் கருத்து வெளியிட்டுள் ளார்.
வடக்கின் பல மாநிலங்களில் சூடான் மக்கள் விடுதலை இயக் கம் பாராளு மன்றத் தேர்தலை பகிஷ்கரித்திருந்தது. அதேபோன்று ஜனாதிபதி வேட்பா ளராகக் கள மிறங்கிய யாஸிர் அர்மானும் முன்னாள் பிரதமர் ஸாதிக் அல் மஹ்தி ஆகியோரும் தேர்தலைப் பகிஷ்கரித்தமை குறிப்பிடத்தக்கது.
2011 ஜனவரியில் எண்ணெய் வளம் கொண்ட தெற்குப் பிராந் தியத்தின் சுயாட்சி குறித்த அபிப் பிராய வாக்கெடுப்பொன்று நடை பெறுவதற்கு முன்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட வாறு இந்த அபிப்பிராய வாக் கெடுப்பு நடத்தப்படும் என பஷீர் உறுதியளித்துள்ளார். சூடானின் தேசிய தொலைக்காட்சியில் உரை யாற்றியபோது, "திட்டமிடப்பட் டுள்ளவாறே தெற்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு நடைபெறும் என பஷீர் தெரிவித்தார். இதேவேளை, நாட்டின் மேற்குப் புறமாக உள்ள தார்பூர் பிராந்தியத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்க ளும் நடைபெறும்" எனவும் அவர் கூறினார்.
பஷீர் மீது பிடியாணை விதித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உட்பட அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

0 comments:

Post a Comment