கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிளை 01- அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

...............................................................................
கிளை 01 : இவர்களும் தூண்டிலும்..
எங்கள் ஊரை ஓரக் கண்ஜாடையால் உரசிச் செல்லும் அந்த ஆறு எங்களுக்கு நண்பனும்தான் எதிரியும்தான். கோடை வெயில் குளியல்தான் அந்த ஆற்றங்கரைக்கு எங்களைக் கூட்டிச் செல்கிறது. சில மணி நேர அந்த சந்தோஷங்கள் எங்கள் வாழ்வின் ரம்யங்கள். ஒரேயொரு கெண்டை மீனுக்காய் ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் கொக்குகள் போல குறிஞ்சி நிலக் குன்றுகளாக ஆற்றிடையே வீட்டிருக்கும் கற்களில் தூண்டிலும் கையுமாய் நாம் ஏங்கிய அந்தக் கனப் பொழுதுகளை மறக்க முடியுமா? ஒரு மீன் சிக்கினால் போதும் அது எங்களக்கு விலை மதிப்பற்ற அம்பருக்குச் சமம். வறுவல்,பொறியல் அத்துனையும் கலந்த ஆற்று மீன் சமயல் ஆயிரம் நாவிருந்தாலும் அதை ருசிக்க அவையும் போதாது. இங்கே பொழுதையும் கழிக்கிறோம் எங்கள் மனச் சுமைகளையும் இறக்கின்றோம். உழைத்துக் களைத்த எங்கள் வாழ்வின் சௌந்தர்ய நிமிடங்களில் இதுவும் ஒன்றுதான்.

0 comments:

Post a Comment