கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சீர்திருத்த மாநாடு பாதியிலே முறிவுறும் அபாயம்.......!!!

ண்மைக்காலமாக கஹட்டோவிடாவில் பண்பாடு ரீதியாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்திற்கொண்டு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக நாம் ஏலவே வரிவாகக் சுட்டிக்காட்டியிருந்தோம். இவ்விவகாரம் தொடர்பில் இதுவரைக்கும் மூன்று அமர்வுகளில் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன. நான்காம் அமர்விற்கும் தினம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இதுவரைக்கும் இந்தக் கூட்டத் தொடர்களில் காணக் கிடைக்கவில்லை. இது பற்றிய நமது முன்னைய இடுகைகளில் நாம் குறிப்பிட்ட “ஒரு பிரிவனரின் பிரசன்னம் மற்றய பிரிவினருக்குப் பிடியாமை” அல்லது “குறித்த ஒரு பிரிவினர் தமது செல்வாக்கை இப்பொதுக்குழுவில் நிலை நிறுத்த முயற்சித்தல்” என்ற விடயம்தான் தற்போதைய இந்த சீர்திருத்த கூட்டத் தொடரிலும் பெரும் சிக்கல்களை உண்டுபண்ணியிருக்கின்றது. இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த ஒருவர் இன்னொரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி அப்பிரிவினரோடு ஒன்றிணைந்து செயல்படுவதை தாம் விரும்பவில்லையென்பதை உணர்த்தியுள்ளார். கொள்கை ரீதியாக முரண்பட்ட போக்குடைய மூன்று பிரதான பள்ளி நிர்வாகங்கள் ஏதோ ஓர் அடிப்படையில் இப்பொது விடயத்தில் இணைந்து செயற்படுதற்கான சாத்தியக் கூறுகள் ஆரம்பத்தில் ஓரளவு காணப்பட்டன. எனினும் தற்போது நிலைமை தலைகீழாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பிரிவினரைக் காரணம் காட்டி ஊரின் முன்னேற்றங்களை கை நழுவவிடுவது அறிவுடைமையாகாது. என்றாலும் இப்பின்னடைவுக்குப் பின்னனியில் குறிப்பிட்ட சிலர் சதி செய்கின்றார்கள் என்பது நியாயமான ஊகமாகின்றது. ஏனெனில் ஊரின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் சிலர் இந்தப் பொதுக் குழுவில் தாம் உள்வாங்கப்படுதற்கும், தமக்குப் பிடிக்காத சிலர் இப்பொதுக் குழுவிலிருந்து அகற்றப்படுவதற்கும் தந்திரமாக காய் நகர்த்துவதாகவும் தமது சதி முயற்சிகள் தோல்வியடையும் போது குறிப்பிட்ட ஒரு பிரிவினரைக் காரணம் காட்டி “ இவர்கள் இருப்பதால்தான் ஒன்றும் செய்ய முடியாதுள்ளது” என்று சொல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இத்தகைய புள்ளுருவிகள் இருக்கும் வரைக்கும் எந்த நல்ல காரியங்களையும் செய்ய முடியாது என்பது திண்ணம். இத்தகைய களைகள் முளையிலேயே கிள்ளி வீசப்பட வேண்டும். ஆகவே ஒவ்வொரு பள்ளி வாசல்களும் தமது நிருவாகத்தின் கீழுள்ள அங்கத்தவர்களை நெறிப்படுத்துவதே இப்பிரச்சினைக்குத் தகுந்த தீர்வாக அமையுமென்பது நமது கருத்தாகும்.

0 comments:

Post a Comment