கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிளை 02 : சூர்யோதய சீண்டல்கள்..

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....
கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.
......................................................................
‘பஜ்ர்’ தொழுகைக்கான அதான் நாற்றிசையெங்கும் ஒலிக்கும் கம்பீரம், கட்டாக்காளி நாய்களின் ஊலையிடும் இறைச்சல்கள், பருந்துக்கஞ்சி தாயின் இறக்கைக்குள் தஞ்சம் புகுந்த கோழிக் குஞ்சுகள் அச்சம் நீங்கியதும் வெளியில் வருவது போல உழைத்துக் களைத்து, நிறைவேறவேண்டிய கனாக்களுடன் அவ்வப்போது செல்லமாய் சீண்டும் சோகங்களும் ஒரே நொடியில் அதயத்தில் சங்கமித்தமையால் அந்த நிமிடமே கண்ணயர்ந்து இரவின் மடியில் ஆறுதல் கானும் அந்த இதமான வைகறைப் பொழுதினிலே இவ்வுலகிலேயே நிம்மதியை தரும் ஒரே இடமான பள்ளி வாசல்களை நோக்கி நடக்கும் சில கால்களின் செருப்போசைகள். தன்னையே நம்பி வாழும் விட்டில் பூச்சுக்களுக்காகவும், பாதை சாரிகளக்காகவும் இரவு முழுதும் சளைக்காது ஒளி வீசிக்கொண்டிருக்கும் பாதையோர மின் விளக்குகள், சின்னஞ்சிறுசுகள், தத்தித்தத்தி நொண்டிக்கோடு விளையாடுவது போல விடியலின் வருகையை ஊருக்குச் சொல்லும் பாலங் குருவிகளின் கீச்சல்கள், இவையனைத்தும் எங்க@ரின் உதய தரிசனத்துக்குரியவையாகும்.

3 comments:

Anonymous said...

http://www.onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/manithan_paviyay_pirapathillai/

Anonymous said...

'முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன்'என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதென்ன?
"இது ஒரு மணிரத்னம் படம்" என்பதையா?

Anonymous said...

"முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன்"
what is this? ungal karuththu unmaiyatrazu, neengal niraiya eluthiyirukkireerkal. surukkamaaka eluthungowan.

Post a Comment