கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மியன்மார் - அல்லாஹ்வின் பெயரில் பரப்பப்படும் புதிய பொய், தவிர்ந்து கொள்வோம்

மியன்மார் முஸ்லிம்கள் குறித்தும், அங்கு நடைபெற்ற, நடைபெறும் நிகழ்வுகள் குறித்தும் எவ்வித தெளிவுமற்ற நிலையில்,
வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவதில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதுடன், சமூக ஊடகங்கள் என்னும் வரப்பிரசாதத்தினை பொறுப்பற்ற விதத்தில் துஸ்பிரயோகம் செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில், தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவும் ஒரு பதிவில், விபத்திற்குள்ளான பஸ்வண்டி ஒன்றுடன் காயமடைந்த பெளத்த துறவிள் காணப்படுவதுடன், "மியான்மாரில் முஸ்லிம்களை விரட்டியனுப்பி விட்டு தமது ஊருக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது எங்களுடைய முஸ்லிம்களை நீ அழித்தால் உங்களுக்கு இதை விட கேவலமான நிலைமைதான் ஏற்படும்" போன்ற வாசகங்களும் பகிரப்படுவதை காணமுடியுமாக உள்ளது.

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு வந்த பெளத்த துறவிகளுக்கு அல்லாஹ் தண்டனை கொடுத்துவிட்டான் என்கின்ற அர்த்தத்தில் பகிரப்படும் இந்தப் பொய்ப் பதிவு பல்லாயிரக்கணக்கான தடவைகள், இதனை ஆராய்ந்து பார்க்காமல், வெறுமனே உண்மை என்று நம்பும் முஸ்லிம்களால் பகிரப்பட்டு உள்ளது, இது வைரஸ் போன்று இன்னுமும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது.

குறித்த புகைப்படங்கள் பற்றிய உண்மையான நிலை என்னவென்றால், லாவோஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பெளத்த துறவிகள் அடங்கிய பஸ்வண்டி, 2012 ஆம் மார்ச் மாதம் - அதாவது மியன்மார் வன்முறைகள் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் - தாய்லாந்தின் ச்சியாங் கொங் மாவட்டத்தின் பஹைபன்னாம் மலைப் பாதையில் விபத்தில் சிக்கிய பொழுது எடுக்கப்பட்டவை என்பது ஆகும். ( புகைப்படங்களுடன் தாய்லாந்து செய்தியை பார்க்க : http://www.madchima.org/forum/index.php?PHPSESSID=f1ch8eu81h484oqhqkcs2quue5&topic=7015.msg25971#msg25971 )

இஸ்லாம் ஒருபொழுதும் பொய்யான தகவல்களை பரப்புவது அனுமதிக்காத மார்க்கம் என்கின்ற வகையில், மியான்மாரில் நடந்த வன்முறைகள் குறித்த பழைய படங்களை பகிர்ந்து, இனங்களுக்கு இடையிலான வெறுப்பை வளர்த்தது போன்று, இந்தப் புகைப்படங்கள் மூலமும் இன நல்லுறவு மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகாமல் தவிர்த்துக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரினதும் பொறுப்பாகும்.


சுவைர் மீரான்

0 comments:

Post a Comment