கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

'நீதிமன்றில் அரங்கேறிய துன்பியல் நாடகம்'




சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண்ணின் நான்கு வயது இளம்பிள்ளையொன்று தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமானபோது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு உணர்ச்சிவசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்த நான்குவயது சிறுவனின் பெற்றோர் இருவரும் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு ஒன்பது வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் மேன்முறையீடு தொடர்பாக இப்பிள்ளையின் தாய் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் சிறைச்கு கொண்டு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டபோது தானும் தாயுடன் போகப்போவதாக அந்த சிறுவன் கதறியழதொடங்கினான்.

அச்சிறுவனை சமாதானப்படுத்துவதற்கு உறவினர்கள் முயன்ற போதிலும் அவனது அழுகை அதிகரித்ததோடு தாயிடம் ஓடிப்போகவும் முயன்றான்.

இது துன்பியல் நாடகத்தின் காட்சியொன்றுபோல இருந்தது. அவனது அழுகையும் தாயின் பாசத்திற்கான ஏக்கமும் நீதிமன்ற வளாகத்திலிருந்த சிறை அதிகாரிகள் உட்பட அங்கிருந்த சகலரது இதயத்தையும் தொட்டது.

இந்த பிரச்சினையின் மனிதாபிமான பக்கத்தை கருதில்கொண்ட சிறையதிகாரிகள் அந்த பிள்ளையை தாய் தூக்கி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கு அனுமதித்தனர்.

பின்னர் ஒருவாறு தாய் மகனை பிரித்து கைதியான தாயை சிறைச்சாலை வாகனத்தில் அதிகாரிகள் ஏற்றிச்சென்றனர்.

லக்மால் சூரியகொட

0 comments:

Post a Comment