துருக்கியின் அரசியல் அர்தூகான் – கூலென் முரண்பாட்டின் பின்னணி
கடந்த சில வாரங்களாக துருக்கியின் மிதவாத இஸ்லாமியவாதிகளது அரசாங்கத்துக்கும்இஸ்லாமிய சிந்தனையாளா பத்ஹுல்லாஹ் கூலெனின் இயக்கத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ளபதட்ட நிலை ஊடகங்களில் பெரும் போராக வெடித்துள்ளது. துருக்கியின் ஊடகங்களில்மட்டுமல்லாது சர்வதேச ஊடகங்களிலும் இந்த விவகாரம் வெகுவாக அலசப்பட்டு வருகின்றது.
துருக்கிய பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்களைத் தயார்படுத்துவதற்காகநடாத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்கில், அவற்றை தனியார்மயப்படுத்தப் போவதாக துருக்கிய அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே இந்தப் பதட்டம்பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனெனில், இவ்வகை கல்வி நிறுவனங்களில் அரைவாசியை பத்ஹுல்லாஹ் கூலெனின்இயக்கமே நடாத்தி வருகின்றது.
அரசாங்கம் மிதவாத இஸ்லாமியவாதிகளாக இருக்கின்ற நிலையில் இன்னுமொரு இஸ்லாமியஅணிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏன் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,இரு பக்கஊடகங்களுக்கிடையில் இது ஏன் பெரும் ஊடகப் போர் வெடித்துள்ளது என்பன பலருக்கும்குழப்பமாகவே இருக்கின்றது.
ஆனாலும், இந்தப் பதட்ட சூழ்நிலையின் பின்னணியில் இரு வேறு சிந்தனைப்போக்குகளுக்கிடையிலான போட்டியொன்றும் அதிகாரப் போட்டியொன்றும் மறைந்திருக்கின்றது.இந்தப் பின்னணியில் நின்று துருக்கியின் அண்மைய அரசியல் பதட்ட நிலைஅலசப்படுகின்றது.
துருக்கியின் சுருக்க அரசியல் வரலாறு
1924 ஆம் ஆண்டு முஸ்தபா கமால், துருக்கிய இஸ்லாமிய கிலாபத்தை ரத்துச் செய்து மதச்சார்பற்றதுருக்கிய குடியரசை ஸ்தாபித்தது முதல் அங்கு இஸ்லாமிய அடையாளங்கள்இல்லாதொழிக்கப்பட்டு, புவியமைப்பைப் போன்றே கலாசாரத்திலும் மேற்கத்தேய பாணி கொண்ட நாடாக துருக்கியமாற்றப்பட்டது.
பின்னர், 1950 இல் ஆட்சிக்கு வந்த ஜனநாயகவாதியான அத்னான் மன்தரீஸ், இல்லாதொழிக்கப்பட்ட சில மதசுதந்திரங்களை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இந்த வகையில், இமாம் கதீப் பாடசாலை,அரபு மொழியில்அதான் சொல்லுதல் போன்ற விடயங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன. அத்னான் மன்தரீஸ்ஒரு இஸ்லாமியவாதியாக இல்லாதபோதும், இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியவாதிகள் மீதும் மிகுந்தநம்பிக்கை கொண்டிருந்தார்.
அத்னான் மன்தரீஸின் நடவடிக்கைகளை அவதானித்து வந்த துருக்கியமதச்சார்பின்மையைக் கட்டிக் காக்கும் இராணுவம், 1960 இல் இராணுவ சதிப் புரட்சிமேற்கொண்டு அவரைத் தூக்கிலிட்டு ஜனநாயகத்துக்கு வேட்டு வைத்தது.
பின்னர், 1996 ஆம் ஆண்டு இஸ்லாமியவாதியான நஜிமுத்தீன் அர்பகான் ஆட்சிக்கு வந்தார்.துருக்கிய அரசியலில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அர்பகான்முயற்சித்தார். முழு இஸ்லாமிய உம்மத்துக்கும் தலைமைத்துவத்தை வழங்கும் நிலைக்குதுருக்கியை கொண்டு செல்வதற்கான பல திட்டங்களை அவர் தீட்டியிருந்தார்.
தொழில் ரீதியில் ஒரு பொறியியலாளரான அர்பகான், துருக்கியை கைத்தொழில் ரீதியில்கட்டியெழுப்புவது அதிகம் சிந்தித்தார். இருப்பினும், வழமைபோன்றே, துருக்கியின்மதச்சார்பற்ற இராணுவம், சதிப் புரட்சி மூலம் 1997 ஆம் ஆண்டு அர்பகானின்அரசாங்கத்தையும் பதவி கவிழ்த்தியது.
மத உணர்வைத் தூண்டும் கவிதையொன்றை வாசித்தார் என்ற குற்றச்சாட்டில் அர்பகானின்கட்சியில் செயலூக்கம் மிக்க உறுப்பினராக இருந்த ரஜப் தைய்யிப் அர்தூகானும் 1999 ஆம் ஆண்டுசிறையிலடைக்கப்பட்டார். நன்னடத்தை காரணமாக 4 மாதங்களிலேயே சிறையிலிருந்துவிடுதலை பெற்ற அர்தூகான். தனது ஆசான் அர்பகானின் கட்சியிலிருந்து பிரிந்த இன்னும்சிலரை இணைத்துக் கொண்டு 2001 ஆம் ஆண்டு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை AKP ஸ்தாபித்தார்.
இந்த AKP கட்சி 2002 இல நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி,இதுவரை நடைபெற்றமூன்று பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ந்தும் 11 ஆவது வருடத்தில்வெற்றிகரமாக ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றது.
நஜிமுத்தீன் அர்பகானின் சிந்தனைப் போக்கு (மில்லி கோரஸ் இயக்கம்)
1996 இல் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த நஜிமுத்தீன் அர்பாகன், துருக்கியின் அரசியல்இஸ்லாத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். மில்லி கோரஸ் என்ற இஸ்லாமிய இயக்கத்தைஸ்தாபித்திருந்த அர்பகான், தனது அரசியல் கட்சிகள் தடை செய்யப்படுகின்றபோது மீண்டும்மீண்டும் புதிய பெயர்களில் கட்சியை ஸ்தாபித்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
இவரது சிந்தனைப் போக்கு கிட்டத்தட்ட அரபுலக இஸ்லாமியவாதிகளது சிந்தனைக்குஒப்பானது. எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஸெய்யித் குத்ப், ஹஸனுல் பன்னா போன்றஅறிஞர்களின் சிந்தனைகளால் இவரது இயக்கம் அதிக தாக்கமடைந்திருந்தது.
அரபு நாட்டு முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், ஜனநாயக முறையில் தம் நாட்டுஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் அரசியல் ஒழுங்கை சீரமைக்கும் முறைமையைக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தேசியவாதத்துக்குப் பதிலாக சர்வதேசமுஸ்லிம் உம்மாவின் ஒற்றுமையை வலியுறுத்துகின்றது. இந்த அனைத்துப் போக்குகளும் அர்பகானின்மில்லி கோரஸ் இயக்கத்தில் பிரதிபலித்தது.
இஸ்லாமிய உலகுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் நிலைக்கு துருக்கியைக்கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனையையும் அர்பகான் கொண்டிருந்தார். அதற்காக,இஸ்லாமியநாடுகளுக்கிடையிலான பொது நாணயமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியையும் அவர்முன்னெடுத்திருந்தார்.
பத்ஹுல்லாஹ் கூலெனின் சிந்தனைப் போக்கு (கூலென் இயக்கம்)
72 வயதான பத்ஹுல்லாஹ் கூலென், துருக்கியிலிருந்து வெளியேறி, 1999 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின்பெனின்சில்வேனியாவில் வசித்து வருகிறார். இவரது இயக்கம் கூலென் இயக்கம் அல்லதுஹிஸ்மத் இயக்கம் என்று வழங்கப்படுகின்றது. இந்த இயக்கம் துருக்கியின் மிகச் சிறந்தஅறிஞராக கருதப்படுகின்ற இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸியின் சிந்தனைகளாலும்பத்ஹுல்லாஹ் கூலெனின் சிந்தனைகளாலும் தாக்கம் பெற்றிருக்கின்றது.
இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி துருக்கியர் மத்தியில் மிகுந்த செல்வாக்குசெலுத்தய மிகப் பெரும் இஸ்லாமியசிந்தனையாளரும் சீர்திருத்தவாதியுமாவார். சூபி சிந்தனையையும் நவீன இஸ்லாமியசிந்தனையையும் ஒரு சேரப் பெற்றிருந்த இவர், துருக்கியர்களின் சமகால சிந்தனைப்போக்கை வடிவமைத்ததில் மிக முக்கியமானவர்.
இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸியின் சிந்தனைகளை மையப்படுத்திய பல இயக்கங்கள்துருக்கியில் செயற்படுகின்றன. அவற்றில் இஸ்லாமிய சிந்தனையாளர் பத்ஹுல்லாஹ்கூலெனின் இயக்கம் பல தளங்களிலும் மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருக்கின்றது. கூலென்இயக்கம் துருக்கியிலும் துருக்கிக்கு வெளியிலும் பல பத்திரிகைகளையும் செய்திமுகவர் நிலையங்களையும் ஆயிரக்கணக்கான பாடசாலைகளையும் கொண்டிருக்கின்றது.
இந்த இயக்கம் மில்லி கோரஸ் இயக்கத்தின் சிந்தனைப் போக்கைப் போலல்லாதுதுருக்கியின் பாரம்பரிய சூபி சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கின்றது. துருக்கியதேசியவாதத்தை முன்னிறுத்துகின்ற இந்த இயக்கம், வழிமுறைகளிலும் படிமுறைக்கோட்பாட்டிலும் மில்லி கோரஸைப் பார்க்கிலும் மாறுபட்டது.
துருக்கி தனது வெளியுறவுக் கொள்கையை அரபு நாடுகளையும் விட மேற்கை சார்ந்தேஅமைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த இயக்கம் கருதுகின்றது. இஸ்ரேலுடன் துருக்கிகொண்டிருக்கின்ற பகைமைப் போக்கையும் இந்த இயக்கம் எதிர்க்கின்றது.
ரஜப் தையிப் அர்தூகானின் சிந்தனைப் போக்கு (ஆளும் AKP கட்சி)
துருக்கியின் தற்போதைய பிரதமரான ரஜப் தையிப் அர்தூகான், நஜிமுத்தீன் அர்பகான் ஸ்தாபித்தகட்சிகளில் மிகுந்த செயலூக்கத்துடன் செயற்பட்ட ஒரு இளம் தலைவராவார். மத உணர்வைத்தூண்டும் கவிதையொன்றை வாசித்தார் என்ற குற்றச்சாட்டில் 1999 ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டஇவர், நன்னடத்தைகாரணமாக 4மாதங்களிலேயே விடுதலை செய்ப்பட்டார்.
பின்னர், தனது ஆசான் நஜிமுத்தீன் அர்பகானின் கட்சியிலிருந்து விலகிய சிலரை இணைத்துக்கொண்டு, 2001 ஆம் ஆண்டு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை (AKP) ஸ்தாபித்தார். அரபுநாட்டு இஸ்லாமியவாதிகளது சாயலைக் கொண்ட மில்லி கோரஸின் கட்சிகளில் செயற்பட்டு வந்தஅர்தூகான், AKP ஐஸ்தாபித்ததும், தான் பழைய சிந்தனைகளைக் களைந்து விட்டதாகத் தெரிவித்தார்.
அத்தோடு, துருக்கியின் மதச்சார்பற்ற முறைமைக்குக் கட்டுப்பட்டு அரசியல் செய்வதாகவும்,துருக்கியைஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும்எடுப்பதாகவும் தெரிவத்தார். இந்த சிந்தனைப் போக்கும் கூலென் இயக்கத்தின் சிந்தனைப்போக்கும் கிட்டதட்ட ஒரே வகையானதாகவே தென்பட்டது.
கூலென் இயக்கத்துக்கும் AKP க்கும் இடையிலான உறவு
தமது சிந்தனைப் போக்குக்கு ஒத்து வருகின்ற அர்தூகானின் AKP கட்சி 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், கூலென் இயக்கத்துக்கும் AKP அரசாங்கத்துக்கும்இடையில் அறிவிக்கப்படாததொரு கூட்டணி உருவாகியது.
எனவே, கூலென்இயக்கத்தைச் சேர்ந்த பலருக்கும் பல உயர் பதவிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே, பல அரசாங்கங்கள் கூலென்இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பதற்கான முயற்சிகளை எடுத்திருந்தபோதும்,AKP அரசாங்கம் அவர்களுக்குபூரண சுதந்திரத்தை வழங்கியிருந்தது. இந்தப் பின்னணியில் இரு பக்க உறவும்பலமாகியது. ஆனாலும், அண்மையில் இந்த உறவு விரிசலடைந்துள்ளது.
கூலென் இயக்கத்துக்கும் AKP க்கும் இடையிலான முரண்பாடு
AKP இற்கும் கூலென் இயக்கத்துக்கும்இடையில் நல்லுறவு நிலவி வந்தபோதும், அண்மையில் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்தமுரண்பாட்டுக்கான காரணங்களை கூலென் இயக்கத்தின் ஊடகங்கள் முன்வைத்து வருகின்றன.கூலென் இயக்கம் முன்வைக்கும் காரணங்களின் சுருக்கம் பின்வருமாறு:
• துருக்கியின் யாப்பைமாற்றி புதியதொரு யாப்பை AKP இனால் உருவாக்க முடியாமல்போயுள்ளமை.
• துருக்கியை ஐரோப்பியயூனியனில் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை AKP கைவிட்டுள்ளமை.
• துருக்கி மத்தியகிழக்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை.
• ஈரானுடன் நம்பிககைமிகுந்த உறவை துருக்கி கட்டியெழுப்புகின்றமை.
• பல்கலைக்கழக நுழைவுக்குத்தயார்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீதான புதிய மாற்றங்கள்
கூலென் இயக்கத்தின் ஊடகங்கள் குறிப்பிடுகின்ற காரணங்களை அவதானிக்கையில்,அவர்களது சிந்தனைப்போக்குக்கு மாற்றமாக அர்தூகான் செயற்படுவதுதான் இரு தரப்புகளுக்கும் இடையிலானபதட்டத்துக்கான பின்னணிக் காரணமாக நோக்கப்படுகின்றது. ஆனாலும், AKP முன்வைக்கும் காரணங்கள் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தையும்பேசுகின்றது. அதாவது, கூலென் இயக்கம் அரசுக்குள் ஒரு அரசை நடாத்த முயற்சிப்பதாக AKP கருதுகின்றது. வேறொருவகையில் சொல்வதென்றால், அரசாங்கத்துக்குள் தமக்கு அதிக செல்வாக்கையும்அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு கூலென் இயக்கம் முயற்சிப்பதாக AKP கருதுகின்றது.
AKP யின் கருத்தை நியாயப்படுத்தும் சில சம்பவங்கள்…
• 2010 ஆம் ஆண்டு துருக்கியின் IHH சமூக சேவை நிறுவனம்காஸாவுக்கான உதவிகளை கப்பல்களில் ஏற்றிக் கொண்டு, சர்வதேச செயற்பாட்டாளர்களுடன் காஸாநோக்கி சென்றது. கப்பல்கள் சர்வதேச கடற்பரப்புக்குள் இருக்கும்போதே, கப்பல்கள் மீது தாக்குதல்மேற்கொண்ட இஸ்ரேலிய படை 9 துருக்கிய செயற்பாட்டாளர்களை கொன்றது.
இந்த சம்பவத்தின் பின்னர், துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு முறிந்தது.ஆனால், பத்ஹுல்லாஹ்கூலென் இஸ்ரேலுடன் ஒருங்கிணைந்தே இந்த உதவி நடவடிக்கையை செய்திருக்க வேண்டும்என்று தெரிவித்திருந்தார். அத்தோடு, இந்த முயற்சியை விமர்சித்துமிருந்தார். இந்தவிமர்சனம் AKP இற்கும் கூலென் இயக்கத்துக்கும்இடையிலான முதலாவது முரண்பாடாக நோக்கப்படுகின்றது.
• AKP குறிப்பிடுவதுபோல், கூலென் இயக்கம் அரசுக்குள் தமது இயக்கத்தின்செல்வாக்கை அதிகரிப்பதற்கு எடுத்த முயற்சியின் தோல்வியாக உளவுத் துறைத் தலைவராகஹாகான் ஃபிதான் நியமிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டப்படுகின்றது. பல உயர்பதவிகளில் கூலென் இயக்கத்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தபோதும், உளவுப் பிரிவின் தலைவராகதமது இயக்கத்தவர் ஒருவர் வர வேண்டும் என்ற கருத்தில் கூலென் இயக்கம் இருந்துள்ளது.ஆனாலும், ஹாகான்ஃபிதான் உளவுத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டதும் தமது எதிர்பார்ப்பு கனவாகியதாககூலென் இயக்கம் உணர்ந்தது.
பின்னர், துருக்கி பயங்கரவாத இயக்கமாகக் கருதும் குர்திஷ் போராட்ட இயக்கமான PKK உடன் 2012 ஆம் ஆண்டு, நோர்வே தலைநகரில் உளவுத்துறை நடாத்திய கலந்துரையாடல்கள் கூலென் இயக்கத்தவர்களால் வெளிக்கொணரப்பட்டு,ஹாகான் ஃபிதான்குறித்த எதிர்மறைக்கருத்துக்களை பரப்புவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. என்றாலும்,தற்போது PKK உடன்ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்துக்கான முன்னெடுப்பாகவே அக்கலந்துரையாடல்நடைபெற்றதாக பின்னர் தெரிய வந்தது.
• 2013 மே மாதம் ஸ்தான்புல்நகரின் தக்ஸிம் சதுக்கத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நடாத்தப்பட்டஆர்ப்பாட்டங்களில் கூலென் இயக்கம் பங்கெடுக்காதபோதும், ஆளும் கட்சியின் செல்வாக்கைகுறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், எதிர்வரும் உள்ளுராட்சித்தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயற்படுவதாகவும் கூலென் இயக்கம்உடன்படிக்கை செய்துள்ளமைக்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக துருக்கி ஊடகவியலாளர்அப்துர்ரஹ்மான் டிலிபெக் குறிப்பிட்டிருந்தார்.
முடிவாக…
தற்போது துருக்கியின் மிதவாத இஸ்லாமியவாத அரசாங்கத்துக்கும் கூலென்இயக்கத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை மொத்தமாகப் பார்க்கையில் இந்தப்பதட்டத்தில் பின்வரும் இரு காரணிகளும் பங்கெடுத்திருப்பதனை அவதானிக்கலாம்.
1. கூலென் இயக்கத்தின்சிந்தனைப் போக்குக்கும் அர்தூகானின் தற்போதைய நடைவடிக்கைகளில் தென்படும் சிந்தனைப்போக்குக்கும் இடையிலான வித்தியாசம்.
2. அரசாங்கத்துக்குள் தம்செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு கூலென் இயக்கம் எடுக்கும் முயற்சி.
கூலென் இயக்கத்தவர்கள் மொத்த வாக்காளர் தொகையில் 3 இற்கும் 5 இற்கும் இடைப்பட்டவீதத்தில் இருப்பதாகவே உத்தியோகபூர்வமற்றகணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. எனவே, எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் இந்தப் பதட்டம்பெரிய பாதிப்பைச் செலுத்தாது என்று கருதப்படுகினறது.
ஆயினும், கூலென் இயக்கம் துருக்கியில் பலம்வாய்நத ஊடக வலையமைப்பைக் கொண்டிருப்பதனால்,அர்தூகானின்செல்வாக்கை குறையச் செய்வதில் அவை பங்கெடுக்கலாம் என்றும் எதிர்வு கூறலாம்.
பலம் வாய்நத துருக்கியைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் வெளியில் இருந்து வரும்சவால்களை விடவும் உள்ளிருந்து வரும் சவால்களை வெற்றி கொள்வது மிகவும் அவசியம்.துருக்கியை மிகப் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாக்கிய அர்தூகானின் அரசாங்கம் இதனைப்புரிந்து செயற்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
– அஷ்கர் தஸ்லீம்
0 comments:
Post a Comment