கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

FIFA வின் தங்கப்பந்து விருதை வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ



எதிர்வு கூறல்களுக்கு ஏற்றது போல், பீஃபாவின் தங்கப்பந்து விருதை (Ballo d'Or) போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவே இன்று கைப்பற்றியுள்ளார்.
இதன் மூலம் தொடர்ந்து நான்கு வருடங்கள் இவ்விருதை வென்றுவந்த மெஸியின் வெற்றிச் சகாப்தத்திற்கு முடிவு கட்டியுள்ளார் கிரிஸ்டியானோ ரொனால்டோ. 2013ம் ஆண்டின் மிகச்சிறந்த வீரராகவும், அதிக கோல்கள் அடித்த வீரராகவும் பெருமை சேர்த்துள்ள கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இம்முறை தங்ப்பந்து விருது கிடைப்பதாக சர்வதேச காற்பந்து சம்மேளனம் இன்று சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதும், ரொனால்டோ உடனடியாக தனது குடும்பத்தினருக்கு விடுத்த தகவலில், 'இனி நீங்கள் வான வேடிக்கை நிகழ்வுகளை தொடங்கலாம்' என்றார். லயனல் மெஸ்ஸி, பிராங் ரிபெரி ஆகியோர் ரொனால்டோவுக்கு போட்டி கொடுத்த போதும் இறுதியில் வென்றது ரொனால்டோ தான். போர்த்துக்கல் வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ தற்சமயம் ரியல் மட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மெஸி பார்சிலோனா அணிக்காக விளையாடிவருகிறார். இதனால், தங்கப்பந்து விருது யாருக்கு என்பதை வைத்து தான் எப்போதும் பார்சிலோனா, ரியல் மேட்ரிட் அணி ரசிகர்களுக்கு இடையிலான மோதல் தொடரும்.
2008 இலிருந்து ரொனால்டோ - மெஸி இருவருக்கும் இடையில் தான் அதிக தடவை இந்த தங்கப்பந்து விருதுக்கான போட்டி தொடர்ந்திருக்கிறது. இம்முறை மூன்றாவது இடத்திற்கு ஃபிரான் ரிபெரி தெரிவாகியிருப்பது தான் இதில் புதிய தகவல்.
2008க்கு பிறகு கிரிஸ்டியானோ ரொனால்டோ உலகின் நம்பர் 1 வீரராக தெரிவாவது இதுவே முதன்முறை. 28 வயதான ரொனால்டோ தற்போது போர்த்துக்கல் அணியின் தலைவராக இருக்கிறார்.

தங்கப்பந்து விருதுக்கு ஒரு வீரரை தெரிவு செய்வது அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை மாத்திரம் அல்ல. உலகின் அனைத்து நாடுகளினதும் காற்பந்து தேசிய அணிகளின் தலைவர்களும்,  தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்கலாம். அதோடு தேசிய அணிகளின் பயிற்றுகனர்கள், ஏன் குளோபல் மீடியாவில் அங்கத்தவர்களாக உள்ள  ஊடகவியலாளர்கள் கூட தமக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களிக்கலாம்.

இவ்வாறு வாக்குகளின் அடிப்படையில் அதிகப் புள்ளிகள் பெற்றே ரொனால்டோ இம்முறை தெரிவாகியுள்ளார். இதே போன்று காற்பந்து பெண்கள் அணியின் மிகச்சிறந்த வீரராக ஜேர்மனி கோல்கீப்பர் நதின் அங்கெரெர்  தெரிவாகியுள்ளார்.

கடந்த வருடத்திற்கான சிறந்த பயிற்றுனராக  பாயெர்ன் மூனிச் அணியின் முன்னாள் பயிற்றுனர் ஜூப் ஹெய்ன்கெஸ் தெரிவாகியுள்ளார்.

ரொனால்டோ கடந்த வருடம் தான் விளையாடிய 56 போட்டிகளில் 66 கோல்கள் அடித்துள்ளார். அதில் 2014 உலக கோப்பை காற்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டியில் ஸ்வீடன் அணிக்கு எதிராக போர்த்துக்கல் சார்பில் ரொனால்டோ அடித்த மூன்று ஹாட்ரிக் கோல்கள் குறிப்பிடத்தக்கன. இதனாலேயே போர்த்துக்கல் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

0 comments:

Post a Comment