கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஜூகமையில் முச்சக்கரவண்டி-பஸ் மோதல் இருவர் இஸ்தளத்திலே மரணம்.



நேற்று இரவு முச்சக்கர வண்டியில் ஒரு சிலர் கண்டியிலிருந்து கொழும்புக்கு மரணவீடொன்றுக்கு வந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது கஜூகமையில் முச்சக்கரவண்டி  பஸ்ஸென்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 3 பெண்களில் ஒருவரும், 3 சிறுவர்களில் ஒரு சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிலந்துள்ளார்கள். ஏனையோர் பாரிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இங்கு முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் மனைவியும், 1.5 வயதுக் குழந்தையுமே உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. பஸ் சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து உடனே எமது ஊரைச்சோ்ந்த சில சகோதரர்கள் முன்னால் மு.கா. பிரதேச சபை உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சகோதரர் நாஸர் தலைமையில் உடனடியாக அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், வந்தவர்களுக்குத் தேவையான உணவு தங்குமிட வசதிகளையும் செய்துகொடுத்ததாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

12 comments:

Anonymous said...

கவளைபடக்கூடிய விடயம் சாதாரன ஜனாஸாக்கலைக் கூட இலகுவாக எடுக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த அரசியல் குறிக்கீடுகளினால் மிகமிக தாமதமாக்கிய விடயம் கோடிட்டுக்காட்டப்பட வேண்டும். ஏனெனில் இன்று 11.30 மணியலவில் தான் இந்த ஜனாஸாக்கல் வெளியெ எடுக்கப்பட்டதாம்.

தமிழன்பன் said...

மீடியாக்காரரே, உங்கள் தளத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப எழுத்துப்பிழைகளும் மொழிவழுக்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. செய்தித் தளமொன்றுக்கு இது ஆரோக்கியமான நிலையல்ல. ஆசிரியர் பீடமே, முதலில் நீங்கள் மொழிச்செம்மை செய்து கொள்ளுங்கள். செம்மொழி மாநாடு நடந்து முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட பூர்த்தியாகவில்லை. பாவம் அந்தத் தமிழ். இதனால்தான், "மெல்லச் சாகும் இனி இந்தத் தமிழ்" என்று சொன்னார்களோ?

kahatow Blog editor said...

அன்பின் தழிழன்பனுக்கு( ? )
எங்களுக்கு வரும் ஈமைல் செய்திகளை நாம் பப்ளி~; பண்றோம். எமது நோக்கம் செய்தியை மக்களுக்குச் சொல்வதேயன்றி தழிழ் பாடம் கற்பிப்பதல்ல. ஒருவரின் கருத்தை இன்னொருவருக்கு விளங்கும்படி எடுத்துக் கூறுவதுதான் தொடர்பாடலின் நோக்கம். யாருக்கும் விளங்காத திருக்குறள் தமிழில் நாம் கருத்துப் பரிமாற மாட்டோம். இப்படித்தான் தங்களைப் போன்ற ஒரு சில தமிழ் பைத்தியங்கள் தமிழ் கொலை தமிழ் கொலை என்று கத்திட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் நாம் மேல சொன்ன பதிலையே ஒரு தமிழ் பேராசிரியர் கொடுத்தார் என்பதை தழிழ்பித்தனாகிய உங்களுக்கு சொலிக்கொள்கிறோம்..!

தமிழன்பன் said...

சொல்வதை விளங்கிக்கொள்ளாத போராசிரியரே! (போர் + ஆசிரியர்) மொழிச் செழுமை ஊடகப் பண்பாட்டின் முக்கிய கூறு என்பதை மறந்துவிடாதீர்கள். இறைவன் கூட தனது கருத்துக்களை ஜாஹிலிய்யாக் காலத்துக்கு மக்களுக்கு செம்மையான அரபு மொழியில்தான் சொன்னான். அதுவும் இலக்கிய நயத்தோடு. கவித்துவமும் அதில் மணத்தது.சொல்வதை சரியாகவும் ஒழுங்காகவும் முறையாகவும் சொல்லுங்கள் என்பதுதானே ஊடகப் பண்பாடு. ஆத்திரப்படாமல் தவறை ஏற்றுக்கொள்வது ஊடகத்தின் பிறிதொரு பண்பாடு. இஸ்லாமும் அதைத்தானே சொல்கிறது. இந்த நவீன யுகத்தில் வாழும் நீங்கள் இப்படி தங்களின் இயலாமையை - அறியாமையை பத்தாம்பசலித்தனமாக வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. உங்களது தளத்தின் அபிமானி என்றவகையில் அதன் முன்னேற்றம் கருதித்தான் கொமெண்ட் அடித்தேன். தவறு என்று பிடிவாதம் செய்தால் என்ன செய்வது? வாதக்கித்தான் மருந்துண்டு. பிடிவாதத்துக்கில்லையே. விதி.

zubir said...

எங்களுக்கு செய்திவாசிக்கக் கிடைத்தால் மட்டும் போதும். அதசெய்கப்பா????

BlogEditors said...

தமிழன்பனுக்கு்
ஜாஹிலியாக்காலத்தை உதாரணம்காட்டி உங்களது வாதத்தை முன்வைத்துள்ளீர்கள். ஜாஹிலிய்யாக்கால மக்கள் அரபு மொழியி்ல் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர்களாக இருந்தார்கள்.எனவே அல்லாஹுத்தஆலா அவர்களின் மொழியிலேயே பேசினான். எனினும் கஹட்டோவிடாவின் இன்றைய சமூகம் மொழியி்ல் பெரியளவு பாண்டித்தியம் பெற்றவர்கள் அல்லர் என்பதை தாங்கள் சமூகத்துடன் இரண்டரக் கலந்து பழகியிருந்தால் அறிந்திருப்பீர்கள். தாங்கள் சமூகத்தைப்பற்றி அறியாதவரோ என தங்களது கொமென்டைப் பார்க்கும்போது எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கஹட்டோவிட மக்களை இலக்காகக் கொண்டே இந்தத் தளத்தை செய்கிறோம். எனவே அவர்களிற்கு அவர்கள் விளங்கும் மொழி நடையில் கருத்துக்களை நாம் பரிமாற விளைகிறோம். தாங்கள் வேண்டுமென்றால் தழிழ் பண்டிதராக இருக்கலாம். தங்களைப் போல் இந்த சமூகமும் பண்டிதர்கள் என்று எடை போட வேண்டாம். சற்று வெளியில் இறங்கி சமூகத்துடன் பழகினால் இந்த உண்மையைத் தாங்கள் அறிவீர்கள். மேலும் எமக்கு வரும் அதிகமான ஆக்கங்கள் எமது ஊர் மக்கள் எழுதி எமது தளத்துக்கு அனுப்புபவையே.. எனவே பலரும் இதில் பலவாறு எழுதுவார்கள். இவற்றில் நாம் தமிழ்ப்பிழைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ள எமக்கு முடியாமல் போயிருக்கும். தாங்கள் விரும்பினால் எம்முடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும். எமக்கு வரும் ஆக்கங்களில் உள்ள தமிழ்ப் பிழைகளை உங்களுக்குக் காட்டி சரிசெய்து தகவல்களை வெளியிடலாம். மேலும் தாங்களே சொல்லியுள்ளீர்கள் ”சொல்வதை சரியாகவும் ஒழுங்காகவும் முறையாகவும் சொல்லுங்கள் என்பதுதானே” அல்லாஹ்வின் கூற்றென்று. ஆம் நாம் எமது மக்களுக்கு விளங்கும் பாணியில் சொல்வதை சரியாகவும் ஒழுங்காகவும் முறையாகவும் சொல்கிறோம். தங்களது கருத்துக்கு நன்றி......ஃஃஃஃஃஃஃஃ1

Anonymous said...

தழிழன்பர் அமைதியாயிட்டார் போலும்........!

Anonymous said...

Our language is eechchiyo, paduththo, shirichcho, bulingino, etc....... so, how this thamilanban (puna) can talk about tamil?

Anonymous said...

palam neeyappa, njaanappalam neeyappaaaaaaaa,

Anonymous said...

தமிழன்பன் பாவம்... இப்படி நோண்டியாக்க வாணம்...!

தமிழன்பன் said...

ஒரு செய்தித் தளத்தின் வெற்றியில் பாஷை அல்லது மொழியின் பங்கு மிக மிக முக்கியமானது. இதைத்தான் தமிழன்பன் தொட்டுக் காட்டினார். படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றுதான் தவறைச் சுட்டிக் காட்டினேன். அந்தத் தவறைத் தவறேயல்ல என்று வாதிடும் மொழி உணர்வில்லா ஊமைகளோடு பேசி ஏன் காலத்தை விரயமாக்கவேண்டும் என்றுதான் சும்மா இருந்துவிட்டேன். நீங்களாச்சு, உங்கள் தளமாச்சு. முட்டாள் பஷங்களே, போகப்போக ஒரு தளத்துக்கு மொழியின் தேவை எத்தகையது என்பது புரியும். அப்போது பேசுவோம். வேண்டாம் வீண் சண்டை. மெல்லச் செத்தது அந்த இன்பத் தமிழ்! நீங்கள் நோண்டியாக்கியது தமிழன்பனையல; ஒரு வாழும் மொழியை.

Anonymous said...

eththuna thamil pilaikal ullana melulla comments il????
sariyaka widaiyalippawarukku thamilanban oru wrist watch parishaka thara maattaar.

Post a Comment