கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஒபாமாவை கால்பந்து விளையாட அழைத்த “ரோபோ”

ஜப்பானில் உள்ள அறிவியல் கண்காட்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா ரோபோவுடன் விளையாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று ஜப்பானுக்கு வந்த அவர், டோக்கியோவில் நடந்த 'மிரைகான்' அறிவியல் கண்காட்சியை பார்வையி்ட்டார்.

அங்கு 'ஹோண்டா' நிறுவனம் தயாரித்துள்ள மனிதனைப் போன்றே ஓடி, ஆடி, குதித்து விளையாடும் 'அசிமோ' என்ற ரோபாட்டும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.

அது பார்ப்பதற்கு 10 வயது குழந்தை ஒன்று விண்வெளி வீரரின் உடையை அணிந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அதிபர் ஒபாமாவை கண்டதும் அந்த ரோபாட் ஜப்பான் நாட்டு முறையில் தலையை குனிந்து வணக்கம் தெரிவித்தது.

இதைக் கண்டு ஆர்ச்சரியமடைந்த அதிபர் ஒபாமா, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று அந்த ரோபாட்டை பார்த்து கூறினார். இதைக் கேட்டவுடன் அந்த ரோபட் எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறி அவரை வரவேற்றது.

மேலும் ஆர்ச்சரியமடைந்த ஒபாமா, என்னால் கால்பந்தை எட்டி உதைக்க முடியும் என்று ரோபாட்டிடம் கூறியுள்ளார். உடனே என்னாலும் கால்பந்தை உதைக்க முடியும் என்று ரோபாட் பதிலளித்தது.

அப்படியென்றால் 'விளையாடு பார்க்கலாம்' என்று ஒபாமா சொல்ல, உடனே அந்த ரோபட் ஒரு பந்தை எடுத்து ஒபாமாவை நோக்கி செல்லுமாறு தனது காலால் எட்டி உதைத்தது. அவரும் ரோபாட்டுடன் விளையாடினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடிய ஒபாமா, உயிருள்ள மனிதர்களை போலவே ரோபாட்டுகள் இவ்வாறு விளையாடுவது ஆச்சர்யமாக இருந்தாலும் சிறிது பயமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment