கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஓரங் கட்டப்பட்ட குறு நில மன்னர்கள் இருவர் இம்முறை கடும் தோல்வியைத் தழுவி உள்ளார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கடந்த முறைகளில் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டும், மகிந்தவின் ஆளும் கட்சிக்குள் இருந்து கொண்டும் தமது பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செய்து முடித்த குறு நில மன்னர்கள் இம்முறை கடும் தோல்வியைத் தழுவி உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்ர் செழிப்பு மிக்க நகராக காத்தான்குடியைக் கட்டி எழுப்பிய ஹிஸ்புல்லாஹ்வும், அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் இனி செய்ய எதுவும் இல்லை எனக் கூறும் அளவுக்கு தெருவுக்குத் தெருவு அபிவிருத்திகளை அள்ளி அள்ளி செய்த அதாவுல்லாவும், ஆளும் கட்சியின் அதிகாரத்தைக் கொண்டு ஆளும் கட்சியின் அமைப்பாளாராக புத்தளத்தின் கல்வி, பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுத்த பாயிசும் தோல்வியைத்தழுவியதன் மூலம் படிப்பினை பெறுவார்களா?

நடை முறையில் உள்ள தேர்தல் முறையான விகிதாசாரத்தேர்தலில் அவர்களின் பார்வை மாவட்டமாக தேர்தல் காலங்களில் இருந்தாலும், வெற்றி பெற்ற பின்னர் தமது தொகுதிகளையும் மறந்து தமது ஊரிலுள்ள எதிரணியினருடன் அன்றாட அரசியல் கிளித்தட்டு விளையாட்டிலும், தமது ஊரை மட்டுமே அபிவிருத்தி செய்வதிலுமே அவர்களின் கவனம் கடந்த காலங்களில் கழிந்ததை அவர்கள் இந்தத் தேர்தல் முடிவின் மூலம் அறிந்து கொண்டிருப்பார்கள்.

இதற்கும் அப்பால் அவர்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பல போது மக்களுக்கு எதிராக தமது அரசியல் அதிகாரப் பலத்தைப் பிரயோகிப்பதிலும், மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு இடம் கொடுக்காமல் மக்களை அடக்கி எதிர்ப்பரசியல் சக்தி ஒன்றினை தாமாகவே உருவாக்கியும் கொண்டனர்.
வெற்றியும், தோல்வியும் சோதனைகளே, இவற்றின் மூலம் ஒன்றில் அதீத பெருமை, அகங்காரம் அல்லது பழிவாங்கும் படலம் மனிதப் பலகீனங்களால் ஏற்படுகிறது. மக்கள் தலைவன் மக்கள் தொண்டன் / சேவகன் என்பதை நடை முறையில் காணப்படுகின்ற ஜனநாயகம் என்ற பெயரில் 5/6 வருடங்களுக்கு ஒரு முறை மக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை என்ற மிகப் பெரிய பலமும் மக்களின் அறியாமையினால் விலை பேசப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய கவலைக்கிடமான அரசியல் செயன் முறையொன்றில் இருந்து மாற்று அரசியல் வழிமுறையின் பால் மக்களையும், எமது அரசியல் பிரதிநிதிகளையும் தயார் செய்கின்ற பாரிய பொறுப்பு எமது சமூகத் தலைமைகளுக்கே இருக்கின்றது.

ஒரு துறையில் புலமைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஒழுங்கு முறையிலான கற்றல் மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. ஆசிரியறாவட்கும், வைதியறாவதட்கும், பொறியியலாளர் ஆவதற்கும் தகைமையும், பயிற்ச்சியும் தேவைப்படும் பொழுது, அரசியல்வாதியாக ஆவதற்கு தலைவரை தன் தோல் மீது சுமந்து செல்லும் தொண்டனாக, தலைவனுக்காய் போஸ்டர் ஓட்டும் போராளியாக மட்டும் இருப்பதே தகைமையாகக் கொள்ளப்படும் வரை எமது சமூகம் விடிவு காணாது.

நாட்டில் நல்லாட்சி நிலவ சானக்கியமுள்ள கல்வி அறிவும், பண்பாடும் உள்ள புதிய அரசியல் வாதிகளை இனம் கண்டு பயிற்றுவிப்போம். தேர்தல் கால அரசியல் செயல்பாடுகளுக்கு அப்பால் நீண்ட அரசியல் செயன்முறைக்கான நீண்ட திட்டமிடலுக்கு வாக்காளராகிய நாம் இன்றே தயாராகுவோம்.
– அபூ மர்யம்
lankamuslim web

0 comments:

Post a Comment