கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இஸ்லாம் பாட நூல் விவகாரமும் தேரரின் புரளியும்!

குறித்த தேரரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவரது கருத்துக்கு (?) முக்கியத்துவம் கொடுத்து முஸ்லிம் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டமை மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும்.
குறித்த தேரரின் அறியாமைக்கு ஒரே ஓர் உதாரணம்:
திருத்திய பதிப்புக்கு முன்னைய பதிப்பில், மகாவம்சத்தை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த வில்லியம் கைகர் என்பவரின் தகவலொன்றை ஆதாரம் காட்டி, விஜயனின் வருகைக்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் மூதாதையரான அரபுகள் இலங்கைக்கு வந்து குடியேறத் தொடங்கினர் என்ற விடயம் பதியப்பட்டிருந்தது.
இதில் வருகின்ற வில்லியம் கைகர் என்பவர் மகாவம்சத்தை மொழிபெயர்க்கவில்லை என்றும் இப்படித்தான் முஸ்லிம்கள் பொய்யான தகவல்களைத் தந்து வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள் என்றும் ஊடகங்கள் சிலவற்றினூடாக கொக்கரித்து இஸ்லாம் பாட நூலை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கினார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட முஸ்லிம் அதிகாரிகள் கலந்துரையாடி அலசி ஆராய்ந்தபோதுதான் அவரது அறிவீனம் மேலும் உறுதியாகியது. பாட நூலில் காணப்பட்ட தகவலைத் தந்திருந்தவரின் விடயத்தில் தவறேதும் இருக்கவில்லை; மாற்றமாக அவரது பெயரில் மட்டுமே அந்தத் தவறு இடம்பெற்றிருந்தது. வில்ஹெல்ம் கைகர் என்பதற்குப் பதிலாக வில்லியம் கைகர் என எழுதப்பட்டிருந்ததே எமது தரப்பில் காணப்பட்ட தவறாகும்.
இந்தச் சிறு விடயத்துக்காக எவ்வளவு பெரிய ஆட்டம் ஆடினார் தெரியுமா? ஆனால் அவரால் ஓட்ட எண்ணக்கையைப் பெற முடியவில்லை. ஓட்டுக்களையும் பெற முடியவில்லை.
எனவே இந்த மாதிரியான செய்திகளை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் கலந்துரையாடிச் செய்திகளை வெளியிட முயற்சி செய்வது நல்லது. இதுவே ஊடக தர்மமாகும்.
அபூ ஷௌகீ

0 comments:

Post a Comment