கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இந்தியாவில் 1400 வருடங்கள் பழமையான பள்ளிவாசல்

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி எட்டாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்.இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அரேபியர் கூட்டம் மூலம் முகம்மது நபியைப் பற்றியும் இஸ்லாம் மார்க்கத்தை பற்றியும் கேள்விப்பட்டனர்.மேலும் அவர்கள் கூறிய செய்திகளினால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு சேரமான் பெருமாள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்.
பின் இந்தியாவில் இஸ்லாம் மார்க்கத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஒமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில்(Port of Zabar, Yeman)நோய் வாயப்பட்டு இறந்தார் அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
மாலிக் பின் தினாரும் மற்றும் சிலரும்
கொடுங்கல்லூர்க்கு வந்து, சேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவியபின் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதிய
கடிதத்தை ஆட்சியாளர்களிடம் கொடுத்துள்ளனர்.மாலிக் பின் தினாரும் அவரது சகாக்களும் மசூதி கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மசூதியின் தலைமை காஸியாக இருந்து வந்த மாலிக் பின் தினார் அரேபியாவிற்கு திரும்பவேண்டி வந்தபோது,அவரது மருமகன் ஹபீப் பின் மாலிக் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.இம்மசூதி முதன்முதலாக11ஆவது நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டது.இறுதியாக 1974ம் ஆண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.அப்போது பழைய மசூதியின் முன் பகுதியை இடித்துவிட்டு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. மசூதியின் உட்புறமிருந்த
தொன்மையான பகுதிகள் அப்படியே விடப்பட்டன.தொழுகையாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஏற்ப 1996 மற்றும்2003ம் ஆண்டுகளில் மசூதி அகலப்படுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment