கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முகம்மது நபியே ஆணையாளராக வந்தாலும் 100 வீத நியாயமான தேர்தலை நடத்த முடியாது !! தேசப்பிரிய அதிரடி

தேர்தல்கள் ஆணையாளர் பதவிக்கு புத்தபெருமானையோ, இயோசு நாதரையோ அல்லது முஹம்மது நபியையோ கொண்டு வந்து உட்கார வைத்தாலும் தற்போதுள்ள தேர்தல் முறைமையின் ஊடாக நூற்றுக்கு நூறு வீதம் நியாயமான, நீதியானதொரு தேர்தலை நடாத்த முடியாதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
lead-Elections-Commissioner-Press
இந்த உண்மை ஊவாவுக்கும் விதிவிலக்கல்ல. இந்த நாட்டிலுள்ள அரசியல் கலாசாரம் மாறும் வரையில் இந்த வன்முறை அரசியலை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. தேர்தல்கள் திணைக்களம் எடுக்க வேண்டிய உச்ச அளவு நடவடிக்கையை எடுத்தாலும் நலவு சொல்வோர் யாரும் இல்லை என்பதை கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளதாகவும் ஆணையாளர் இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, தொடர்ந்து வன்முறைகள் உச்சமடைந்தாள் தான் ஊவா தேர்தலை தள்ளிப் போட உள்ளதாக  தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment