கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

"ஹஸரத் உமர் அவர்களால் (இரண்டாவது இஸ்லாமிய கலீபா) அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது" அல் அக்ஸாவை பாதுகாக்க துருக்கி உறுதி

ஜெரூசலம்  அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க துருக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் அஹமட் டவு டொக்லு உறுதியளித் துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மி'hல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருப்பதாக டவுடொக்லு குறிப்பிட்டார்.

அல் குதுஸ் மற்றும் அல் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "நாம் தேவைப்படும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். ஐ.நா. முதற்கொண்டு அல் குதுஸ{க்கு உலக ஆதரவை பெறும் முயற்சிகள் ஆரம்பிக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.

துருக்கியில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய டவுடொக்லு "ஹஸரத் உமர் அவர்களால் (இரண்டாவது இஸ்லாமிய கலீபா) அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று குறிப்பிட்டார். "உஸ்மானி சுல்தான்களான யவு+ஸ் சுல்தான் சலீம் மற்றும் சுலைமானினால் அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. கடைசி உஸ்மானி படை வீரரால் அல் குதுஸ் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை எவர் மறந்த போதும் அது உறுதியானது. துருக்கிக்கும் அல் குதுஸிற்கும் தொடர்பு இல்லை என்று எவராலும் கூற முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.

jaffnamuslim

0 comments:

Post a Comment