கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சீரற்ற காலநிலை, வெள்ளம், ஆகியவற்றினால் பாதிக்கப்ட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகோரல்.

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பல சகோதர சகோதரிகள் மிகுந்த அல்லற்படுவதை அனைவரும் அறிவீர்கள். இம்மழையினால் தினமும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பலர் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பலர் பொது இடங்களில் தஞ்சம் பெருகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள், குடி நீர் போத்தல் மற்றும் பல அத்தியவசிய பொருட்கள் மிக அவசியமாகவுள்ளன.

எனவே அவசரமாக உங்களால் முடிந்த உதவியை பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு வழங்குங்கள். அதற்கான ஒரு சந்தர்ப்பம் எமது ஊர்மக்களையும் நாடி வந்திருக்கிறது. இந்த ஏற்பாட்டை நல்லுள்ளம் கொண்ட எமது ஊா்சகோதர்களுல் ஒரு குழுவினர் ஏற்பாடுசெய்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. இவர்களின் வேண்டுகோள் இன்று பிரதான பள்ளிவாயல்களின் ஒலிபெரிக்கிகள் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஷாஅல்லாஹ் இவர்கள் நாளை அஸர்தொழுகையின் பின்னர் இந்நிவாரன உதவிக்காக உங்களை நாடி வர ஏற்பாடுகள் தயார்செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேடமாக எமது மக்களிடம் நிவாரண உதவியாக எதிர்பார்க்கப்படும் உதவிப் பொருட்கள்  அரிசி, பால்மா, சீனி, அப்பிகாச கொபி போன்றவை இருப்பதாக இவர்கள் தெரிவிப்பதை காணக்கூடியதாக இருந்தது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அல்லது பண உதவிகளை அன்மையில் உள்ள பள்ளிவாசல்களோடு தொடபுகொண்டு கையளிக்கலாம் என்பதையும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்கள்.

“பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை(தர்மம் செய்வதைக்)கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்: அதிய்யுப்னு ஹாதம்(ரலி); நூல்:புகாரி

0 comments:

Post a Comment