குழப்பம் தீருமா ஹஜ்ஜுப் பெருநாளில்?
கடந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பல்வேறு குழறுபடிகளாம் என ஒரு சில ஆலிம்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஜம்இய்யதுல் உலாமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவா்கள் தன்னிச்சையாக பெருநாள் தினத்தை அறிவித்ததாக இவ்வாலிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பிட்ட அன்றைய தினம் பிறை தென்பட எவ்வித வாய்ப்பும் இல்லையென அறிந்த பின்னரும் அப்பிறையை ஏற்று சவுதி அரேபியாவின் சா்வதேச பிறைக்கு சார்பாக ரிஸ்வி முப்தி நடந்து கொள்கிறார் என்றும் இவ்வாலிம்கள் குற்றம் சுமத்தி ஒரு புத்தகத்தையே வெளியுட்டுள்ளார்களாம். இப்புத்தகத்தில் ஜம்இய்யாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவா்களை குறை கூறியுள்ளார்களாம். அன்றைய பிறை மாநாட்டுக்கு தலைமை தாங்கியது மௌலவி றயாழ் என்றும் அவரையும் மீறி தன்னிச்சையாக ரிஸ்வி முப்தி பெருநாள் சம்பந்தமான முடிவெடுத்து வானொளியில் அறிவித்துவிட்டதாகவும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எது எப்படி இருப்பினும் உலமாக்கள் இவ்வாறு பிரிந்து செல்வது சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு சமூகத்தின் விடிவுக்குப் பாடுபடுவதே சிறந்தது என்பதே பலரினதும் அபிப்பிராயமாகும்.
0 comments:
Post a Comment