கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எதிர்ப்பிக்கும் ஆதரவக்குமிடையில் தள்ளாடும் கஹடோவிட்டாவின் பிரதான வீதி விஸ்தரிப்பு!

கஹடோவிடாவின் பிரதான பாதையை விரிவுபடுத்துவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு அது சர்ச்சையாகி பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்களைக் தோற்றுவித்திருக்கும் இவ்வேளையில் அது தொடர்பிலான நமது அவதானங்களையும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றோம்.

பாதை விஸ்தரிப்பு முயற்சியின் தொடக்கம்.

கடந்த தொன்னூறுகளின் ஆரம்பப் பகுதியில் அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. ஆட்ச்சிக்காலத்தில் அப்போதைய கஹடோவிட்டா ஐ.தே.க. தொண்டர்களால் ஊரின் பிரதான பாதையை விரிவாக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவிருந்த்தாகவும் ஊர்வாசிகளின் பலத்த எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் பாதையை விஸ்தரிக்க வேண்டும்?

மாறிவரும் சமூகப் பொருளாதார மாற்றங்களும் நாளுக்கு நாள் பெருகிவரும் சனநெரிசல்களும் பாதையின் விஸ்தரிப்பைக் கட்டியங்கூறுவதாகவுள்ளன. குறிப்பாக தற்போது ஊருக்குள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளமையால் பெரிய வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வாகனங்களுக்கு கூட போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடநெருக்கடியெற்பட்டுள்ளதை அன்றாடம் அவதானிக்க முடிகின்றது. இவை போன்ற நியாயமான சில காரணங்களால் பாதைவிஸ்தரிப்பானது தவிர்க்க முடியாததாகவே தெரிகின்றது. கஹடோவிட்டா ஒரு சிறிய கிராம்மாகவிருந்தாலும் சூழவுள்ள கிராமங்களோடு ஒப்பிடும் போது சிறப்பான சில வர்த்தகப் பண்புகளைக் கொண்டதாக்க் காணப்படுகின்றது. இந்த சிறப்புத் தன்மையில் முன்னேற்றத்தையோ வளர்ச்சியையோ காண வேண்டுமாயின் பிரதான பாதையை விசாலப்படுத்த வேண்டுமென்பது அவசியமாகின்றது.


பாதை விஸ்தரிப்பால் பாதிப்புக்கள் ஏற்படுமா?

இவ்விடயம் இப்பணியின் இயக்கத்தில் முக்கிய புள்ளியெனலாம். என்னதான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் அதனால் நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகிய சமூக விழுமியங்கள் சீர்குலைந்து போகுமாயின் அப்படியான ஒரு வளர்ச்சி எமக்குத் தேவையில்லை என்பதில் ஐயமில்லை. பாதையை விரிவாக்கி வாகனப் போக்கு வரத்து அதிகரிக்கும் போது பிற சமூகத்தவர்களின் வருகையும் கனிசமான அளவில் அதிகரிக்கலாம். அதனால் கலப்பற்ற நமது பண்பாட்டுத் தனித்துவத்தில் மாசுகள் ஏற்படலாம். பிற சமூகத்தவர்கள் கூடுதலான அளவில் வந்தாக வேண்டும் என்றளவுக்கு நகர் பானியிலான வர்த்தக மையமாக நமது கிராமம் மாறிடலாம் என்றவாரான முற்போக்குக் கருத்துக்களும் பரவலாக்க் காணப்படுகின்றன. இது ஆற அமர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒர் அம்சமாகும்.


இப்பணி எதற்காக எதிர்க்கப்படுகின்றது?

ஊரின் நெருக்கமான குடியிருப்புக்களை ஊடறுத்த்தாக பாதை அமைந்துள்ளதால் பாதையை விசாலப்படுத்தும் போது அருகிலுள்ள சிறு காணிகள், வீடுகள், கடைகள் போன்றன குறிப்பிடத்தக்களவில் பாதிப்புள்ளாகின்றன. இதனால் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை குறிப்பிட்ட அக்குடும்பங்களே சுமக்க வேண்டியுள்ளது. அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் இக்குடும்பங்களுக்கு பாதை விஸ்தரிப்பால் ஏற்படும் இழப்புக்களை தாங்கிக் கொள்ள முடியாது என்பது ஒரு புறமிருக்க சிதைவுக்குள்ளாகும் தமது கட்ட்டங்களை மீள் நிர்மாணிப்பதும் அவர்களால் முடியாத காரியமாகும். மேற்படி திட்டமானது பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுவதால் பாதிப்புக்குள்ளானோருக்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது என்றும் மாகாண சபையினால் மேற் கொள்ளப்பாடும் இவ்வாறான திட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்களுக்கே இழப்பீடு வழங்கப்படுமெனவும் அவ்வாறு மாகணசபை இத்திட்டத்தை முன்னெடுக்குமாயின் சாதாரணமாக 40 அடி அளவில் பாதை விரிவுபடுத்தப்படலாமெனவும் அப்போது பாதிப்ப இன்னும் பலமடங்காகலாமென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. பாதிப்புக்குள்ளாகவிருக்கும் சில நடுத்தரக் குடும்பங்கள் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருக்கும் அதே சமயம் வசதி படைத்த சிலர் இத்திட்டத்தை முழுமையா எதிர்ப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் சில சந்தர்ப்பவாத கூட்டணிகள் இதைக் குழப்புவதற்கு ஆயத்தமாகும் அதேவேலை பாதிப்புக்குள்ளாகும் இன்னுமொறுகூட்டம் இரவு பகலாக்க் கூட்டம் போட்டு அயராது உழைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதற்குத் தீர்வுதான் என்ன?

பாதையோரங்களிலுள்ளவர்களைத் தவிர ஏனையோர் பெரும்பாலும் இதை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. பிரதேச சபையும், ஊர் பெரும்பான்மையும் ஒன்றினைந்து இத்திட்டத்தை அமுல்படுத்தினால் அதை எதிர்ப்பது அவ்வளவு சுலபமானதன்று. இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளவர்கள் தம்மால் முடியுமான அளவில் பாதிப்புக்களுக்கான நஷ்டஈடு தொடர்பிலும் கவனமெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எதுவாயினும் சம்பந்தப்பட்ட இரு வகுப்பாரும் விட்டுக்கொடுப்போடும்,கனிவோடும் கலந்தாலோசித்து சுமுகமானதும்,பொதுவானதுமான ஓருடன்பாட்டைக் காண்பதுவே இத்திட்டத்தை வெற்றிகரமாக் கொண்டு செல்லக்கூடியதாகும். அவருக்காய், இவருக்காய் அவரிடமும் ,இவரிடமும் பேசித்திரியாமல் நமக்காய் நாமே நம்முன் பேசித்தீர்த்துக்கொள்வோம்.

உங்களது கருத்துக்களையும் நீங்கள் இங்கே எழுதலாம்.....

13 comments:

Anonymous said...

இது எமதூருக்கான ஒரு அபிவிருத்தி திட்டமாகும். அனைவரும் இதில் பங்கு பெற வேண்டுமாயின், பாதை ஓரங்களில் உள்ளவர்கள் பெரும் நஷ்டங்களில் அனைத்து மக்களும் பங்கு பெற வேண்டும்.... அல்லது, அவர்களுக்காக ஒரு நிதியை திரட்டி கொடுத்தால் அவர்கள் அதை வைத்து தமது உடைந்த கட்டடங்களை திருத்தம் செய்வார்கள்....

Anonymous said...

as a kahatowitayan, we not live near to main road but we could understand what's their feeling regarding the matter. but onething they all should think, they have to give the land to main road in futue if today didnt give.

மர்யம் said...

போக்குவரத்து நலன் கருதி மேற்கொள்ளும் இப்பணியால் பாதையோர மக்கள் கட்டடஇடிபாட்டினால் பேரிழப்புக்களை சந்திக்கவிருக்கின்றனர்.அவர்கள் அதனை கருத்திற்கொள்ளாது,அது மறுமையில் நமக்கு கைகொடுக்கக்கூடியதொரு வாய்ப்பாகும், நிலையான தர்மம் என்ற பட்டியலில் சேர்க்கப்படும் என கருத்தில் கொள்ளுங்கள்

Anonymous said...

What Mariam's opinion is correct. We have good examples in our Islamic History who gave up even a big garden(Bairaha) which was the most benificial to heim for the benefit of common folk. so being a muslim we must think of it...1

Anonymous said...

இந்த மாதிரியான எதிர்ப்புக்கள் வருவது சகஜம், இதே போன்றுதான் ஊருக்கு மின்சாரம் எடுக்கும் போதும், அக்கால யூ,என், பீ அரஷாங்கத்துக்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது ஆனால் இப்பொழுது மக்கள் அனைவரும் அவர்களின் செயலினை புகழ்கின்றனர்.

Anonymous said...

என்ன நல்லவிடயங்கள் செய்ய வந்தாலும் அதற்கு எதிரான குரல்கள் எலவே செய்யும். ஆனால் இதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு குறிப்பாக வரியவர்களுக்கு எதாவது உதவித்திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

எல்லாரும் ரோட்டு பெரிசாகோனும் என்னு செல்லிய ஆனா அவங்களுக்கு ஒரு கஷ்டமுமோ அல்லது இலப்போ இல்லதானே எல்லம் எங்களுக்கு மட்டும்தான்.

Kahatowita Mannan said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
பல இஸ்லாமிய இயக்கங்களையும், ஜமாத்துகளையும் கொண்ட கஹடோவிட கிராமத்தை, அபிவிருத்தி செய்வது மக்களின் கடமை மட்டுமல்ல, இவ்விட்டய்த்தில், பள்ளிவாயில்களும், ஜமாஅத்தார்களும், இயக்கங்களும், கட்டாயம் தமது உழைப்பை ஊருக்கு வழங்க வேண்டும். பாதை பெரிதாக்கும் இம்முயற்சியில் உள்ள ஒரே ஒரு பிரச்சினை, பாதை ஓரங்களில் உள்ள மக்களின் வீடு, கடை, சுவர்கள் உடைபடுவாதே ஆகும்.... பாதைக்கு இரண்டு ஓரங்கள் உள்ளன. இரண்டிலும் உள்ள சுவர்களை உடைக்காமல், ஒரு பக்கம் மட்டும் உடைக்கலாம், உடைக்கப்பட்ட சுவரின் திருத்த வேலைகளை மற்ற ஓரத்தில் உள்ள வீட்டாரும், ஊர் மக்களும் பொறுப்பெடுத்து செய்து கொடுக்க வேண்டும். மேலதிகமாக அவர்களுக்கு ஒரு நஷ்ட ஈட்டையும் பெற்றுக்கொடுப்பது நன்று. இவ்விடயத்தை, நாம் ஒன்று பட்டு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எமதூர் சந்திக்கும். அரசாங்கத்துக்கு தேவை அவர்களது ஆட்சியை தக்க வைப்பது மட்டுமே. அதற்காக அரசியல்வாதிகள் என்ன வேண்டுமெண்டாலும் செய்வார்கள். பாதை ஓரங்களிலுள்ளவர்கள் நன்றாக சிந்தியுங்கள். அரசாங்கத்துக்கு ஊரிலுள்ள மக்களின் ஆதரவுதான் தேவை, பிரதான பாதையிலுள்ள மக்களை அவர்கள் பெரிதும் கணக்கெடுக்க மாட்டார்கள். பாதை பெரிதாக்குவது நிச்சயம். அது பாதையோர மக்களின் ஆதரவுடன் நடந்தால், அனைவரும் பயன் பெறுவார்கள். அரசாங்கத்துடன் மோதுவது எம்மைப்போன்ற சிறுபான்மையினருக்கு அழகல்ல. சிந்தித்து செயற்படுங்கள் மக்களே.

அப்துல் said...

Yes we have to think a bit regarding the comment of Mr. Kahatowita Mannan but it is not easy way.... Anyhow there are working somany islamic moments and Masjids. they also involve in this matter, surely we can get good results and minimise the nagative opinions.. thanks

Wala wandhaan said...

Nothing is easy, Work to gather, Everything will be easy.
But, it's Impossible in this kahatowita. We know, kahatowita people are selfish. that's why still they are poor in everything.

Waalfawan said...

Waalfawan..

How do u say kahatowita people are self fish? If they self fish even u can not live here. Since they are generous still you live here. Think b4 u leap!

கஹடோவிட மன்னன் said...

Mr. wala wandhaan ! நான் நினைக்கிறேன் நீங்கள் வாழ வந்தான் என்று. நீங்கள் எமதூருக்கு புதிதாய் குடிவந்தவர் என்று நினைக்கிறேன். கஹடோவிட பற்றிய வரலாறு தெரியாமல், எம்மக்களை selfish என்று சொல்வது முட்டாள்தனம். வார்த்தையை சரியாக பிரயோகிக்கவும். நீங்கள் வாழ்வது கஹடோவிடவில் இப்போது. Mind it first. வாழ்ந்திட்டு போவது உங்களுக்கு நல்லது. இங்கு வந்து வம்பளக்காதீர்கள்.
இது
கஹடோவிட மன்னன்

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல முயற்சி, விரைவாக நடைபெற எமது பிரர்த்தனைகள்

Post a Comment