ரிஷானா நபீக்கின் தாய் என்ன செல்கிறார்
எனது மகள் றிஸானாவை அல்லாஹ்தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை என றிஸானா நபீக்கின் தயார் றிஸினா நபீக் தெரிவித்தார். றிஸானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு முதன் முதலாக நேற்று வெள்ளிக் கிழமையன்று ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,,
ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினால் அது எத்தகையதாக இருந்தபோதும் மறுமையில் றிஸானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.
வெள்ளிக்கிழமையான இன்று உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்தச்; சகோதரியாகக் கருதி ‘துஆ’ பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இதனால்; றிஸானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புப்பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
இதேவேளை றிஸானாவுக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்மென பிரார்த்திக்கின்றேன் என்றார்.
0 comments:
Post a Comment