கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இன்ஷா அல்லாஹ், காட்டு மிராண்டித்தன காட்டுதர்பார் அடிதடி எடுபிடி அரசியல் செய்ய விளையும் முகவர்கள் கைசேதப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை

நேற்று மாலை சாய்ந்தமருதில் "நல்லாட்சி முன்னணி" சந்திப்பில் குளறுபடி செய்தவர்கள் கைசேதப்படுவார்கள்!
நல்லாட்சி விழுமியங்களை ஜனாநயக அரசியல் கட்டமைப்புக்குள் உள்வாங்கச் செய்து தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு முஸ்லிம் அரசியலை முரண்பட்டுக் கொள்ளாது நகர்த்துகின்ற வேலைத்திட்டத்தினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாரிய அர்ப்பணிப்புக்களோடு முன்னெடுத்துச் செல்கின்றது.
சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பிரமுகர்களும் ஆளும் கட்சியில் அடங்கிப் போயிருந்த நிலையில் எதிர்க் கட்சி பொதுக் கூட்டணியில் இணைந்து தேசிய அரசியலில் கால்பதித்து மிகவும் காத்திரமான பங்களிப்புக்களை அவர்கள் செய்து வந்தார்கள்.
சர்வாதிகாரத்தின் உச்சத்தில், அரசியலிலும்,ஆள்பலத்திலும், அதிகார மையத்திலும், இராணுவ பலத்திலும் உச்சத்தில் இருந்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூட செய்யாத அளவு கேவலமான ஜனநயாக விரோத காட்டு மிராண்டித் தனங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இடம் பெறுவது சந்தர்ப்பவாத சராணகதி முஸ்லிம் அரசியலின் வங்குரோத்து நிலையினை எடுத்துக் காட்டுகிறது.
தென்னிலங்கை சிங்கள மக்கள், யுத்த காலத்திலும் சரி, சமாதான காலத்திலும் சரி இவ்வாறான கேவலமான அரசியலை செய்ய வில்லை என்றே சொல்லவேண்டும், அவ்வாறு செய்ய முனைந்தவர்களை ஜனநாயக வரம்புகளுக்குள் நின்று எவ்வாறு தூக்கி வீசியுள்ளார்கள் என்பதுவும் இன்று வரலாறு ஆகியிருக்கின்றது.
முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெறும் பாரம்பரிய அடிதடி எடுபிடி அரசியலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறும், அடியாட்களுக்கு கடிவாளமிடுமாறும் முஸ்லிம் அரசியல் குழுக்களின் தலைவர்களை வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
தமது கருத்துக்களை வெளியிடவும், கூட்டங்கள் நடத்தவும் நல்லாட்சி மக்கள் முன்னணி முன்னோடிகளுக்குரிய உரிமையும், அவர்கள் கருத்துக்களை செவிமடுக்க மக்களுக்கு உள்ள உரிமையும் மதிக்கப்படல் வேண்டும்.
சாய்ந்தமருது, அக்கரைப்பற்று,மூதூர் போன்ற இடங்களில் இடம் பெற்ற அடாவடித்தனங்கள் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியவை, அதேவேளை சம்பந்தபபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் அவ்வறான காடைத் தனங்கள் இடம் பெறாதிருப்பதனை உறுதி செய்யவும் உரிய தரப்புக்களிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.
எமது கடந்த கால சோரம் போன, சூதாட்ட அரசியலின் உச்ச கட்ட சராணாகதி வங்குரோத்து அரசியலின் விளைவுகளையே கடந்த காலங்களில் சமூகம் அறுவடை செய்தது என்பதனையும், அவற்றிற்கு மஹிந்தவின் பக்கம் விரல் நீட்டுவதிலோ, மைத்ரிஇடம் விமோசனம் தேடுவதிலோ அர்த்தமில்லை என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாகவே இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ், காட்டு மிராண்டித்தன காட்டுதர்பார் அடிதடி எடுபிடி அரசியல் செய்ய விளையும் முகவர்கள் கைசேதப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை அவர்கள் அறிந்து செயற்படல் வேண்டும்!
Inamullah Masihudeen

0 comments:

Post a Comment