கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி நியமனம்! - (photos)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு இன்று ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதாக தெரிவித்திருந்த மஹிந்த ராஜபக்ச சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

எனினும் அவருடைய புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சமூகமளித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கை கூறுகின்றது.

கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பையும் கட்சிக்குள் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கட்சியின் உயர்பதவியை புதிய ஜனாதிபதியிடமே ஒப்படைப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

தான் அரசியலிலிருந்து ஒதுங்கி விடும் எண்ணத்தில் இருப்பதாக மகிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்ததாக சில ஊடகங்கள் கூறியிருந்தன.

எனினும்,  ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களித்த சுமார் 57 லட்சம் பேரின் அபிலாஷைகளுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.






0 comments:

Post a Comment