கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பிரதம நீதியரசர் மொஹான் பீரிசுக்கு சட்டம் புகட்டப்பட்ட விதம்

புதிய அரசு ஆட்சியமைத்ததிலிருந்து நேற்று இரவு வரை கௌரவமாக பதவி விலகிச்செல்லும்படி ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்துப் பிரிவினரும் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்த நிலையில் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு மொஹான் பீரிஸ் எடுத்த முயற்சியை சட்டத்தில் உள்ள ஓட்டையைக் கொண்டே முறியடித்துள்ளது புதிய அரசாங்கம்.


இதனடிப்படையில், 2013ம் ஆண்டு பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் சட்டத்தை விட அதிகார துஷ்பிரயோகமும் ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலும் தலைவிரித்தாடியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

சட்டவல்லுனர்களின் கருத்துப்படி 2013ம் ஆண்டு பாராளுமன்றத்திடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை எதுவுமின்றியே சிராணி பண்டாரநாயக்கவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணையில் எந்த இடத்திலும் அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற விடயம் அடங்கியிருக்கவில்லையெனவும் இவ்விடயத்திற்கு அப்போதே பாராளுமன்றில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ள சட்ட வல்லுனர்கள், குறிப்பிட்ட கோரிக்கையில்லாது பிரதம நீதியரசரின் பதவி பறிக்கப்பட்டமை செல்லுபடியாகது என ஜனாதிபதி மைத்ரியிடம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இன்று மொஹான் பீரிசை நியமித்தமை சட்டவிரோதமானது என்பதால் சிராணி பண்டாரநாயக்கவே இப்போதும் பிரதம நீதியரசர் என ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த பல மாதங்களாக பிரதம நீதியரசராகக் கடமையாற்றிய மொஹான் பீரிசின் தீர்ப்புகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை அரசியல் சட்டம் 119(2)க்கமைய பிரதம நீதியரசர் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில் அவர் ஒரு சட்டபூர்வமாக நியமிக்கப்படா இடைக்கால பிரதம நீதியரசர் என்பதால் அவரது தீர்ப்புகள் செல்லுபடியாகும் எனவும் ஆனாலும் சட்டபூர்வமான முiறியல் நீதியரசர் நியமிக்கப்படுகையில் அவர் அந்தப் பதவியை இழக்கிறார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே இன்று மீண்டும் பிரதம நீதியரசராகத் தன் கடமையைத் தொடரும் சிராணி பண்டாரநாயக்க நாளைய தினம் சம்பிரதாயபூர்வமாக தனது இராஜினாமாவைக் கையளித்து ஓய்வு பெறுவார் எனவும் இதன் மூம் முன்னாள் நீதியரசர் எனும் நிலையில் ஓய்வூதியம் உட்பட அவருக்கான அனைத்து சலுகைகளும் கௌரவமும் மீளக் கிடைக்கும என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நல்லாட்சிக்கான வாக்குறுதியின் ஒரு கட்டமாக கடந்த அரசின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நீதி நிலை நாட்டல் எனும் அத்தியாயத்திலும் புதிய அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை வென்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

sonakar

0 comments:

Post a Comment