கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மௌனித்துப்போன இறுதி நேர கட்சித் தாவல்கள்

நேற்றைய தினம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இறுதி நேர கட்சித்தாவல்கள் எதுவும் இடம்பெறாது தேர்தல் களம் அமைதியாகிப் போனதன் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்களும் ஊகங்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் எதிரணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இரு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை செய்து பார்த்ததில் இறுதி நேர நிலை மாற்றம் பெரும்பாலும் அச்சம் காரணமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சில ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களைத் தவிர பெரும்பாலானோரது வீடுகள் இருக்கும் பகுதிகளில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையானது அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் ஊகத்தையும் உருவாக்கியிருந்தது. எனினும், தாம் வீட்டுக் காவல் என்ற சூழ்நிலைக்குள் இல்லையென தெளிவுபடுத்தியவர்கள் சாதகமான சூழ்நிலையில்லாத காரணத்தினால் தமது செயற்பாடுகளை தள்ளிவைக்க நேர்ந்ததாக தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, எதிர்க்கட்சியிலிருந்தும் ஆளுங்கட்சியில் இணைந்துகொள்வார்கள் என ஒரு சிலர் எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறும் ஜனாதிபதியுடனான நெருங்கிய வட்டாரம் அவர்கள் குறித்த பெயர் விபரங்களை ஊர்ஜிதப்படுத்த முடியாதுள்ளதாக தகவல் வழங்கியிருந்தது.
ஆயினும், தமது தரப்பிலிருந்து இனியும் மூழ்கும் கப்பலுக்குள் ஏறிக்கொள்ள யாரும் தயாராக இல்லையென ஐக்கிய தேசிய கட்சி தலைமையக வட்டாரம் தெரிவிக்கின்றது. இருப்பினும் தேர்தல் தினத்தன்று திடீர் மாற்றங்கள் நிலவுமா என வினவப்பட்டமைக்கு இரு தரப்பும் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sonakar web

0 comments:

Post a Comment