கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பழைய நினைவுகளில் ஒன்று - S.W.R.D பண்டாரநாயக்கவுக்கு எமது ஊரோடு உள்ள தொடர்பு

எமது ஊரின் இரு கண்களாகத் திகழும் இரு பாடசாலைகளும் பல்வேறு சாவால்களை எதிர்நோக்கி, தற்போது ஊரிற்கு பல கல்விமான்களை வழங்கி மிகப்பெரும் சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் எமது ஊரின் பெண்கள் பாடசாலையான பாலிகா வித்தியாலயத்தின் வரலாற்றுப் பக்கத்திலிருந்து ஒரு நிகழ்வை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.


பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக தற்காலிகக் கட்டடம் ஒன்றில்  ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1945ம் ஆண்டு அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. 1954ம் ஆண்டு வீசிய பெரும் புயல் காற்றொன்றினால் இதன் தற்காலிகக் கட்டடம் சரிந்து விழவே புதிய நிரந்தரக் கட்டிடம் ஒன்றை அரசின் மூலமாக பெற்றுக்கொள்ள ஊரார் பெரும் முயற்சிசெய்தனர்.

இந்தவிடயம் பண்டாரநாயக்காவின் காதுகளுக்கு எட்டவே, புதிய கட்டடம் ஒன்றுக்கு அத்திவாரம் இடப்பட்டு 1957ம் ஆண்டு அன்றைய பிரதமா் S.W.R.D பண்டாரநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது.  திறப்பு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் சமூகமளித்திருந்ததாகவும், இதில் சிறப்பு விருந்தினர்களாக அன்றைய கல்வி அமைச்சராக இருந்த W. தகநாயக்க, W.W. கண்ணங்கர, சேர் ராசிக் பரீத், J.B. ஒபசேகர போன்று இன்னம் பல பிரமுகர்கள்  கழந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.



0 comments:

Post a Comment