கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அடுத்த கட்டம் என்ன? எப்படி வீழ்த்தப்பட்டார் மஹிந்த?

இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் முதல் முறை­யாக அதி­கா­ரத்திலிருந்து கொண்டு மீண்டும் போட்­டி­யிட்ட, ஜனா­தி­பதி ஒருவர், மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்டு, வீட்­டுக்கு அனுப்­பப்­பட்ட சம்­பவம் கடந்த வாரம் நிகழ்ந்­தது.
MR_ERT
இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான திருப்­ப­மாக இந்த தேர்தல் அமைந்­தி­ருந்­தது.

போர் வெற்­றியைப் பயன்­ப­டுத்­தியும், சக அர­சியல் கட்­சி­களை வளைத்துப் போட்டும், பெற்­றுக்­கொண்ட மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தை வைத்துக் கொண்டு, தாம் நினைத்தால் எதையும் செய்­யலாம் என்று இறு­மாந்­தி­ருந்த ஓர் அர­சாங்­கத்­துக்கு தகுந்த பாடம் மக்­களால் கற்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மஹிந்த ராஜபக்ச அர­சாங்­கத்­துக்கு தகுந்த பாடம் புகட்­டு­வ­தற்­காக காத்­தி­ருந்த மக்­க­ளுக்கு இவ்­வ­ளவு விரை­வாக, அந்த வாய்ப்புக் கிட்டும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

இன்னும் இரண்டு ஆண்­டுகள் பத­வியில் இருக்கும் வாய்ப்­பி­ருந்தும், விட்டில் பூச்­சி­யாக மஹிந்த ராஜபக்ச இந்தப் பொறியில் வந்து விழுவார் என்று யாரும் நம்­பி­யி­ருக்­க­வில்லை.

அண்­மைக்­கா­லத்தில், தனது கட்சி சரி­வு­களைக் கண்டு வரு­வதைக் கருத்தில் கொண்டோ, அல்­லது அடுத்த ஏழு ஆண்­டு­க­ளுக்கு பத­வியில் நீடித்துவிட வேண்டும் என்ற ஆசையின் வெளிப்­பா­டா­கவோ, அல்­லது ஜோதி­டர்­களின் ஆலோச­னையைக் கேட்டோ அவர் இந்த முடிவை எடுத்­தி­ருக்­கலாம்.

அடுத்த தேர்­தலைச் சந்­திக்க எடுக்கும் முடிவுதான், தனது வீழ்ச்­சிக்கு வழி­வ­குக்கப் போகி­றது என்­பதை அவர் அறிந்­தி­ருக்­க­வில்லை.

அதனை அவ­ரது ஜோதி­டர்­க­ளாலும் கணித்துக் கூற முடி­ய­வில்லை.

ஜோதி­டர்­களின் அறி­வு­ரையைக் கேட்டு, கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்த கதை­யாக முடிந்­தி­ருக்­கி­றது மஹிந்த ராஜபக்சவின் நிலை.

தனது அர­சியல் பலம், மக்கள் ஆத­ரவு, கட்­சியின் பலம், கொள்கை ஆகி­ய­வற்றை வைத்­துக்­கொண்டு அவர் இந்த தேர்­தலைச் சந்­தித்­தி­ருக்­க­வில்லை.

அவர் முழு­மை­யாக நம்­பி­யது, ஜோதி­டர்­க­ளையும், குறுக்­கு­வ­ழியில் அதி­கா­ரத்தைத் தக்­க­வைப்­ப­தற்­காக வழி­மு­றை­க­ளை யும் தான்.

தேர்தல் அறி­விப்பை வெளி­யிட்­டது தொடக்கம், வேட்­பு­ம­னுவைத் தாக்கல் செய்­தது, பிர­சா­ரங்­களை செய்­தது மட்­டு­மன்றி, மெத­மு­லனவில் வாக்­க­ளிக்கச் சென்ற நேரத்தை தீர்­மா­னிப்­ப­திலும் கூட, ஜோதிடம் தான் ஆதிக்கம் செலுத்­தி­யது.

மஹிந்த ராஜபக்ச இந்த தேர்­தலை வெற்­றிக்­கான போராட்­ட­மாக நடத்­தினார் என்று கூற­மு­டி­யாது.

இந்த தேர்தல் தோல்­வியைத் தவிர்ப்­ப­தற்­கான ஒரு போராட்­ட­மா­கவே நடத்­தப்­பட்­டது.

ஆரம்­பத்தில் வெற்றி குறித்த மிகை­யான நம்­பிக்­கை­க­ளுடன் கள­மி­றங்­கி­யி­ருந்­தாலும், போகப்­போக அதற்­கான வாய்ப்­புகள் அருகத் தொடங்­கி­யதை மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் உணரத் தொடங்­கி­யி­ருந்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

அதனால் எப்­பாடுபட்­டா­வது தோல்­வியைத் தவிர்த்து விட வேண்டும் என்ற வெறி மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­திடம் ஊறிப் போயி­ருந்­தது.

அதற்­காக, எல்­லா­வி­த­மான வழி­க­ளையும் கையாள்­வ­தற்கு அவர்கள் தயங்­க­வில்லை. இந்த தேர்­தலில் மஹிந்த ராஜபக்ச தனது வெற்­றியின் மீதும், கொள்­கையின் மீதும் நம்­பிக்கை வைத்துப் போட்­டி­யிட்­டி­ருக்­க­வில்லை.

அவ்­வாறு போட்­டி­யிட்­டி­ருந்தால், நிச்­ச­ய­மாக, கொள்கை ரீதி­யான ஓர் ஆரோக்­கி­ய­மான போட்­டி­யாக இந்த தேர்தல் மாறி­யி­ருக்கும். அது நாட்­டுக்குப் புதிய முன்­மா­தி­ரி­யா­கவும் அமைந்­தி­ருக்கும்.

குறிப்­பாக, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், மஹிந்த ராஜபக்சவையும், ஒரே மேடையில் நேரடி விவாதம் ஒன்றை நடத்த வைப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், அதற்கு மஹிந்த ராஜபக்ச இணங்­க­வில்லை.

மேலை நாடு­களில் இது­போன்ற நேரடி விவா­தங்­களே, எந்தக் கட்­சி­யையும் சாராத வாக்­கா­ளர்­களின் வாக்­கு­களைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருந்து வரு­கி­றது.

அத்­த­கை­ய­தொரு வாய்ப்பு இம்­முறை இலங்கை வாக்­கா­ளர்­க­ளுக்கு கிடைக்­காமல் போனது துர­திஷ்­டமே.

அதே­வேளை, மஹிந்த ராஜபக்ச இந்த தேர்­தலில் தனது வெற்றி உறுதி என்று மேடை­களில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டாலும், உள்­ளூர அத்­த­கைய நம்­பிக்கை அவ­ரி­டத்­திலோ, அவ­ரது கட்­சி­யி­ன­ரி­டத்­திலோ இருந்­தி­ருக்­க­வில்லை.

அதனால் தான் குறுக்கு வழி­களைப் பயன்­ப­டுத்தி, வெற்றி பெறும் முயற்­சிகள் அவர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இந்தத் தேர்­தலில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைக்கும் வாக்­கு­களை உயர்த்த முடி­யாது என்­பதை உணர்ந்து கொண்ட அர­ச­த­ரப்பு. ஒரு கட்­டத்­துக்கு மேல், எதி­ர­ணியின் வாக்­கு­களை சிதைப்­ப­திலும், குறைப்­ப­தி­லுமே கவனம் செலுத்­தி­யது.

வடக்கு கிழக்கில், தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­குகள் மீது நம்­பிக்கை கொள்­ளாத அர­சாங்கம், அங்கு வாக்­க­ளிப்பு அதி­க­ளவில் இடம்­பெ­றாமல் தடுப்­ப­தற்கு தன்னால் இயன்ற அனைத்­தையும் செய்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பெய­ரிலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஜன­நா­யகப் பிரிவைப் பயன்­ப­டுத்­தியும், சுவ­ரொட்­டி­களை ஒட்­டியும் துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை கொடுத்தும் வாக்­க­ளிக்க வெளியே வரவிடாமல் தடுக்க முயற்­சிக்­கப்­பட்­டது.

குண்­டு­களை வீசியும், வாக்­கா­ளர்­களை மிரட்­டியும், வாக்­க­ளிக்க விடாமல் தடுக்­கவும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இவை­யெல்லாம், அதி­க­ளவு வாக்­குகள் வடக்கு கிழக்கில் பதி­வானால், அது மஹிந்த ராஜபக்சவின் வெற்­றியைப் பாதித்து விடும் என்ற அச்­சத்தில் செய்­யப்­பட்ட முயற்­சி­க­ளே­யாகும்.

சமுர்த்தி பய­னா­ளி­க­ளுக்கு காசோ­லை கள் வழங்­கப்­பட்டு தேர்­தலில் வாக்­க­ளிக்க கோரப்­பட்­டதும், யாழ்ப்­பா­ணத்தில் நடந்­தது.

சம்­பூரில், இடம்­பெ­யர்ந்த மக்­களை சொந்த இடங்­களில் மீளக் குடி­ய­மர்த்­து­வ­தாக கூட்டிச் சென்று, தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தை நடத்தி விட்டு, தேர்தல் முடிந்த பின்னர் வாருங்கள் குடி­ய­மர்த்­து­கிறோம் என்றும் ஏமாற்­றிய சம்­ப­வமும் நிகழ்ந்­தது.

அதே­போல, ஐ.தே.க. பிரதி தலைவர் சஜித் பிரே­ம­தா­சவின் பெயரைப் பயன்­ப­டுத்தி சுவ­ரொட்­டி­களை ஒட்­டியும், அவ­ரது பெயரில் போலி­யான தொலை­பேசி இலக்­கத்தைப் பயன்­ப­டுத்­தியும், தெற்கில் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு வாக்­க­ளிக்க வேண்டாம் என்றும் அர­சாங்கம் கோரிப் பார்த்­தது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் போன்ற உருவ ஒற்­றுமை கொண்­ட­வரைப் போட்­டி­யிட வைத்து வாக்­கா­ளர்­களைக் குழப்­பி­யது போதா­தென்று, அவரைப் போல உடை அணிய வைத்து, வாக்­குச்­சா­வ­டிக்கு தானே அழைத்துச் சென்ற கோமா­ளித்­த­னத்­தையும் அரங்­கேற்­றினார் மஹிந்த ராஜபக்ச.

அத்­துடன் இந்த தேர்­தலில், அரச தொலைக்­காட்­சி­களும், ஊட­கங்­களும் தேர்தல் விதி­மு­றை­களை பின்­பற்­றி­யி­ருக்­க­வே­யில்லை. அது வழக்­க­மா­னதும் கூட.

ஒரு கட்­டத்தில் சஜித் பிரே­ம­தாச பற்றி செய்­யப்­பட்ட பிர­சா­ரத்தை திருத்­து­வ­தற்­காக, தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய, தனது தேர்தல் வேலை­களை விட்டு விட்டு ரூப­வா­ஹினியின் வாசற்­ப­டி யில் ஏற வேண்­டியும் ஏற்­பட்­டது.

முல்­லைத்­தீவு மக்­க­ளிடம் போய் கடந்த காலத்தை மறந்து விடுங்கள், என்று கூறி பிர­சாரம் செய்த மஹிந்த ராஜபக்ச, தெற்கில் குண்­டு­ வெ­டிப்­பு­க­ளையும், கோரக்­ காட்­சி­க­ளையும் போர் வெற்­றி­யையும் நினை­வு­ப­டுத்­தியே வாக்­கு­களைக் கேட்டார்.

இவை­யெல்­லாமே, கொள்கை சார்ந்து தேர்­தலை எதிர்­கொள்ளும் வழி­மு­றை­க­ளல்ல – குறுக்­கு­வ­ழியில் வெற்­றியைத் தேடும் முயற்­சிகள் என்­பதை எவரும் ஒப்­புக்­கொள்வர்.

ஆனாலும், மக்­களின் சக்­திக்கு முன்­பாக, அவர்­களின் கருத்­துக்கு முன்­பாக, இந்தக் குறுக்­கு­வழி முயற்­சி­களால் நின்று பிடிக்க முடி­யாது போனது.

தமிழ்­மக்­க­ளுக்கு எதி­ராக ஒரு கொடிய போரை நடத்­தி­யது போதா­தென்று, அதனை வைத்தே இந்த ஆறு ஆண்­டு­க­ளாக அர­சியல் பிழைப்பும் நடத்தி வந்த அர­சாங்­கத்­துக்குத் தான் மக்கள் முடிவு கட்­டி­யி­ருக்­கி­றார்கள்.

2009ஆம் ஆண்­டுக்குப் பின்னர் எல்லாத் தேர்­தல்­க­ளை­யுமே, போர் வெற்­றியை வைத்து தான் மஹிந்த ராஜபக்ச அர­சாங்கம் எதிர்­கொண்­டி­ருந்­தது.

சிங்­கள மக்­க­ளிடம், போர் வெற்றி என்ற போதையை ஊட்டி மயக்கி வந்த அர­சாங்­கத்­துக்கு, சிங்­கள மக்கள் மட்­டு­மன்றி சிறு­பான்­மை­யின மக்­களும் இணைந்தே சரி­யான பாடம் கற்­பித்­துள்­ளனர்.

கிட்­டத்­தட்ட ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், முடிக்­கப்­பட்ட போரை வைத்து இனியும் அர­சியல் பிழைப்பு நடத்த முடி­யாது என்ற நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

உண்­மையில், கடும்­போட்டி நில­வு­வதை, புரிந்து கொண்­டி­ருந்­தாலும், மஹிந்த ராஜபக்ச இவ்­வ­ளவு இல­கு­வாக வீழ்த்­தப்­ப­டுவார் என்று எவ­ருமே கரு­தி­யி­ருக்­க­வில்லை.

அதை விட, மைத்­தி­ரி­பால சிறி­சேன அவரைத் தோற்­க­டித்தார் என்­பதை, சர்­வ­தேச ஊட­கங்­களால் இன்­னமும் நம்ப முடி­யா­ம­லேயே இருக்­கி­றது.

அதனால் தான், கறுப்புக் குதிரை (Dark Horse) வென்று விட்­ட­தாக பல சர்­வ­தேச ஊட­கங்கள் கருத்து வெளி­யிட்­டுள்­ளன.

மஹிந்த ராஜபக்ச மிகப்­பலம் வாய்ந்த ஒரு­வ­ராக வெளி­நாட்டு ஊட­கங்­களால் கரு­தப்­பட்­டவர் என்­பதால் தான், அவ­ரது தோல்­வியை அவற்­றினால் இல­கு­வாக நம்ப முடி­யா­தி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக்சவின் தோல்வி, அவ­ரது குடும்ப அர­சியல் ஆதிக்­கத்­துக்கு மட்டும் முடிவு கட்­டி­யி­ருக்­க­வில்லை.

அதற்கும் அப்பால் அவ­ரது குடும்­பத்தின் அர­சியல் எதிர்­கா­லத்­தையும் கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன், அவர் அடுத்த கட்­ட­மாக, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மைக்­காக போராட வேண்­டிய நிலை ஒன்று உரு­வா­கலாம்.

ஏனென்றால், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, பொது­வேட்­பா­ள­ராக கொண்டு வந்து அறி­மு­கப்­ப­டுத்­திய போதே, மைத்­தி­ரி­பா­லவை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக்கும் வரை ஓய­மாட்டேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, குமா­ர­துங்க குறிப்­பிட்­டி­ருந்தார்.

தன்னைப் பழி­வாங்­கிய மஹிந்த ராஜபக்சவுக்கு, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, இப்­ப­டி­யொரு ஆப்பை வைப்பார் என்று எவரும் கரு­தி­யி­ருக்­க­வில்லை.

மஹிந்த ராஜபக்சவுக்கு எதி­ராக, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, கொண்டு வந்து நிறுத்தி, ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­திய அவர், இன்று அவ­ரையே ஜனா­தி­ப­தி­யாக்­கியும் இருக்­கிறார்.

இப்­போது அவர், நேரடி அர­சி­யலில் இறங்­கா­வி­டினும், கிங் மேக்­க­ராக அர­சி­யலில் வகிக்கும் பங்கு, மஹிந்த ராஜபக்சவி­னதும், அவ­ரது குடும்­பத்­தி­னதும் அர­சியல் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்கக் கூடும்.

மொத்­தத்தில் இந்த தேர்தல் மஹிந்த ராஜபக்சவின் குடும்ப அர­சி­யலை மட்டும் புரட்டிப் போட­வில்லை. இலங்­கையின் அர­சியல் வர­லாற்­றிலும் புதிய திருப்­பங்­களை ஏற்­ப­டுத்தப் போகி­றது.

100 நாள் செயற்­றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்­படும் புதிய அரசாங்கம் அடுத்தடுத்து நகர்த்தும் ஒவ்வொரு காய்களும், இன்னும் பல அரசியல் திருப்பங்களுக்கு வழி வகுக்கலாம்.

அதைவிட, பாராளுமன்றத்துக்கான தேர்தலையும் விரைவில் நடத்தும் நிலை ஏற்படலாம்.

மாகாணசபைகளின் அதிகாரங்கள் கைமாறலாம்.

இவையெல்லாம், மஹிந்த ராஜபக்ச என்ற ஒருவர், தனது பதவிக்காலத்தை நீடித்துக் கொள்வதற்காக எடுத்த ஒரு முடிவின் தொடர் விளைவுகளாக அமையப் போகின்றன.

மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாக்கப் போவதாக புதிய அரசாங்கம் கூறியிருந்தாலும், மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது நிர்வாகத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், குறித்த விசாரணைகள் தொடங்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன.

அது, கடந்த கால வழக்குகளையும் கூட மீண்டும் கிண்டிக் கிளறும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தக் கூடும்.

ஆக கடந்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வெறும் ஆட்சி, அதிகார கைமாற்றத்துடன் நின்று போகப் போவதில்லை.

இலங்கையின் அரசியலில் பல புதிய மாற்றங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் வழிவகுக்கும் போலவே தென்படுகிறது.

என்.கண்ணன்

0 comments:

Post a Comment