வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் _
சபையின் தலைவர் நிமல் அமரசிங்க இது தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளது நலன் கருதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். அடுத்த வாரம் எமது குழு அங்கு செல்லவுள்ளது.
இவ் ஓய்வூதியத் திட்;டமானது 3 அம்சங்களை கொண்டமைந்தது. இதன் மூலம் 60 வயதின் பின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக மாதாந்தம் வெளிநாட்டில் இருந்து வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.
தற்போது 364 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து ஊழியர்களையும் இத்திட்டத்தில் உள்வாங்கவுள்ளோம். அத்துடன் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களையும் இதில் உள்வாங்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment