இலங்கையில் பேஸ்புக்கினை தடைசெய்யக்கோரி முறைப்பாடு
பேஸ்புக்கினை தடைசெய்வதால் இலங்கையின் இணையப் பாவனையில் பாரிய பின்னடைவு ஏற்படுமென தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட டெய்லி மிரர் இணையத்துக்கு தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் பல மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இணையத்தளமான 'பேஸ்புக்' மீது இலங்கையில் பலர் புகார் கொடுத்திருக்கிறார்கள். பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுக்கு இதுதொடர்பாக 50 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
பேஸ்புக்கில் காணப்படுகின்ற பெண்களின் படங்களினை எடுத்து உடல்மாற்றம் செய்து தவறான இணையங்களில் வெளியிடுவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால் பேஸ்புக்கினை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரியிருக்கிறார்கள். இதுதொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்டவிடம் கேட்டபோது...
எங்களுக்கு பேஸ்புக்கினை தடைசெய்ய முடியாது. பல்லாயிரக்கணக்கான பாவனையாளர்களைக் கொண்ட பேஸ்புக்கினை தடைசெய்தால் இணையப் பாவனையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். ஆகையினால் இதற்கு மாற்று நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பரிசீலிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment