பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!
நாயொன்று மூன்று பூனைக்குட்டிகளை ஈன்றுள்ள சம்பவம் கம்பளை வெலிவேரிய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது .
தனது நாய் மூன்று பூனைக்குட்டிகளை பிரசவித்திருப்பதாக அதன் உரிமையாளரான ஜி.கே. சோமதாச தெரிவித்துள்ளார். இவ்வாறு பிறந்த மூன்று பூனை குட்டிகளில் ஒன்று பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அதிசயப் பூனைக்குட்டிகளைப் பார்ப்பதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எஞ்சிய குட்டிகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உரிமையாளர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள், இது சாத்தியமற்ற ஒன்று என்றே கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment