கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சவூதி, யு.ஏ., மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்களது தூதர்களை கத்தாரிலிருந்து திரும்ப அழைத்துள்ளன!



சவூதி அரேபியா, யு.ஏ.இ மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தாரிலிருந்து தங்களது தூதர்களை திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

தங்களது நாடுகளின் பாதுகாப்பிற்காகவும் ஸ்திரத்தன்மைக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (மார்ச்-04) ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவுத்துறை மந்திரிகளின் சந்திப்புகளின் பொழுது இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து இந்த முடிவை எடுத்ததாக யு.ஏ.இ. அரசின் செய்தி நிறுவனமான 'வாம்' வெளியிட்ட செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இதைப் பற்றி கத்தாரின் வெளியுறவுத்துறை அலுவலகம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆனால் ரியாத்தில் நடந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு பற்றி கத்தார் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் ரியாத்தில் நடைபெற்ற 130 வது ஜி.சி.சி.யின் மந்திரிகள் கூட்டத்தில் கத்தரின் வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் காலித் பின் முஹம்மது அல்-அத்தியாஹ் அவர்களும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில் ஜி.சி.சி. நாடுகளது கூட்டுறவு பற்றியும் அரபு பிராந்திய மற்றும் உலக அளவிலான வளர்ச்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஜி.சி.சி. நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொது இலக்கு பற்றியும் விவாதிக்கப்பட்டது. என தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment