கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மாயமான விமானம் மலாக்கா ஜலசந்தி வழியே பயணமா?

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது. மலேசியாவில் புறப்பட்டுச் சென்ற விமானம் 2 மணி நேரத்துக்குப் பின்னர் (இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி) ரேடார் தொடர்பை இழந்தது. விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்பட 239 பேரும் பலியாகி விட்டனர் என நம்பப்படுகிறது.
kappal
 
தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது தான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என்று கூறப்பட்டது. விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் வியட்நாம் கப்பல்கள் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளன. விமானத்தில் 2 பயணிகள் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்கள் ஈரானியர்கள் என்று தெரியவந்துள்ளது. ஈரானியர்கள் திருட்டு பாஸ்போட்டில் டிக்கெட் வாங்கியுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலாக்கா ஜலசந்தி அருகே விமானம் பயணித்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான மலாக்கா ஜலசந்தி அருகே இறுதியில் விமானம் ரேடார் தொடர்பை இழந்ததுள்ளது என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது என்று செய்திநிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனை அடுத்து மலேசியாவின் மேற்கு கடற்பகுதிக்கும் தேடுதல் வேட்டை பரப்பளவு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. அப்பகுதியா விமானநிலையத்திற்கே திரும்பி வந்திருக்குமா? என்ற நோக்கில் பரப்பளவு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment