கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அரசாங்கத்தைக் காட்டிக் கொடுப்பதை அனுமதிக்க முடியாது கூறுகிறார் பைசர் முஸ்தபா

அரசாங்கத்தில் நாம் அங்கம் வகிக்கின்ற போதும் முஸ்லிம் சமூகம் சவால்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்றபோது வாளாவிரு க்கமுடியாது. எனவே சமூகத்தைப் பாதுகாக்கின்ற பணியை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றோம். அமைச்சுப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் பணியை நாம் ஒரு போதும் செய்யப் போவதில்லை யென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு தாருஸ்ஸலாமில் கட்சியின் முக்கிய நிகழ் வொன்றில் அவர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை தூற்றித் திரிவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் அரசாங்கத்தில் இருப்பதென்றால் நேர்மையாக செயலாற்ற வேண்டுமெனவும் இன்றேல் அரசாங்கத்தை விட்டு அக்கட்சி வெளியேற வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
 
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அவரது சகாக்களும் அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தைக் காட்டிக் கொடுக்க அனுமதிக்க முடியாதென பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் நேற்றைய பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையடுத்து வெளிவந்த இந்தக் கருத்துக்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
தாருஸ்ஸலாம் கூட்டத்தில் மு. கா. தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது :- எங்களுக்கென்று ஒரு வகிபாகம் இருக்கின்றது. அரசாங்கத்தில் இருந்தாலும் நாங்கள் மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றிச் செயற்படும் இயக்கமாக இருக்கின்றோம். நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை என்றார்.
 
இதேவேளை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பற்றியும் கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளதுடன் அரசாங்கத்துடன் மு. கா. இணைந்து கொள்ள வந்த போது நாம் இது தொடர்பில் அரசு தலைமைக்கு விழிப்பூட்டி இருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.-தினகரன்

0 comments:

Post a Comment