கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையில் பள்ளி நிர்வாகிகளுக்கான விசேட கருத்தரங்கு

பள்ளிவால்களின் பணிகளும் அவை எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் பள்ளி நிர்வாகிகளுக்கான ஒரு விசேட கருத்தரங்கொன்றினை ஜாமியா நளீமியாவின் பழைய மாணவா் சங்கம் இன்று 08.03.2014 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்திருந்தது. திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுமார் 60 பேரளவில் பங்குபற்றினா். கம்பகா மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களின் பரிபாலன சபை உறுப்பினா்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் ஸமீர் நளீமி, முன்னால் கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் அஷ்ஷைக் நவவி நளீமி, பேராதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளா் அப்துல் பாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனா்.
 
 
கௌரவ அதிதியாக பிரதித் தோ்தல்கள் ஆணையாளா் எம்.எம்.எம் முஹம்மத் அவா்களும் கலந்து கொண்டார். நிகழ்வில் அறிமுக உரையாற்றிய
அஷ்ஷைக் பாரி அவா்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொண்மையும் பள்ளி வாசல்களின் வரலாறும் என்ற தலைப்பில் மிக முக்கியமான பல விடயங்களை ஆதார புா்வமாக சுட்டிக் காட்டினார்.
 
மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி சுஐப் (தீனி, பின்னூரி) பள்ளி வாசல்களின் பங்களிப்பும் பணியும் என்ற கருப்பொருளில் உரையாற்றி பள்ளிவாசல்கள் சமூகத்திற்கு எத்தகைய சேவைகளை செய்ய வேண்டும் என்பதை விளக்கிக் கூறினார்.
 
 
தொ்டர்ந்தும் நிகழ்வில் உரையாற்றிய பணிப்பாளர் ஸமீர் மற்றும் முன்னால் பணிப்பாளா் நவவி ஆகியோர் சமகாலத்தில் எமது முஸ்ரலிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், பள்ளி வாசல்களுக்கும் வக்பு சபைக்குமான தொடர்பு, பள்ளி வாசல்களை வக்பு செய்வதால் தீர்க்கக் கூடிய தற்காலப் பிரச்சினைகள் எ்னபவற்றை விளக்கிக் கூறினர்.
 
நிகழ்வின் இறுதியில் சந்தேகங்களுக்கான தெளிவுகளைப் பெற ஒரு கேள்வி பதில் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



0 comments:

Post a Comment