கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அப்ரிடி அதிரடி: பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்றில்..!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அதிரடியுடன் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

பங்களாதேஷில் 12ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது.
மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அனாமுல் ஹக் மற்றும் இம்ருல் கயிஸ் ஆகியோர் சிறப்பாக துடுப்பபெடுத்தாடி நல்லதொரு ஆரம்பத்தை பெற்று கொடுத்தனர்.
இருவரும் இணைப்பாட்டமாக 150 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த இம்ருல் கயிஸ் 59 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
பின்னர் களத்தில் இருந்த அனாமுல் ஹக்குடன், மொமினுள் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய போது அனாமுல் ஹக் சர்வதேச ஒரு நாள் அரங்கில் தனது 2 ஆவது சதத்தை கடந்து 100 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்தில் இருந்த மொமினுள் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முஸ்பிகுர் ரஹீம் மற்றும் சகிப் ஹல் அசான் களத்திற்கு வந்தனர்.
சகிப் அதிரடியை தொடர முஸ்பிகுர் அரைச்தத்தை கடந்தார். முஸ்பிகுர் 51 ஓட்டங்களையும் சகில் அல் ஹசான் 16 பந்துகளில் அதிரடியாக 6 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 44 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது. மிஸ்பா உல் ஹக் 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய போது பங்களாதேஷ் அணியின் ஓட்ட வீதத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சயிட் அஸ்மால் மாத்திரம் இரு விக்கெட்டுகளை கைப்பற்ற முஹமட் தலாஹா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 327 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அகமட் சயிட் மற்றும் முகமட் ஹாபிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்று கொடுத்தனர்.
இருவரும் இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச்சதத்தை கடந்து துடுப்பெடுத்தாடிக்கொண்ருந்த ஹாபிஸ் 52 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.
இதனையடுத்து களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் 4, மாசூட் 2, அபதூர் ரஹ்மான் 8 என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி பங்களாதேஷ் பக்கம் திரும்பியது.
இதன்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அகமட் செயிட் 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் களத்தில் இருந்த பவ்சாட் அலாமுடன் அப்ரிடி இணைச் சேர்ந்தார். அப்பரிடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி வெறும் 25 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க வெற்றி பாகிஸ்தான் அணி பக்கம் திரும்பியது.
இதனையடுத்து பவ்சாட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 74 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் உமர் ஹக்மால் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களை பெற்றார்.
பங்களாதேஷ் அணியின் பந்து ஆரம்பத்தில் சிறப்பாக காணப்பட்ட போதும் இறுதி நேரத்தில் அவர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது.
இறுதி பந்து வரை மிக பரபரப்பாக காணப்பட்ட இப்போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. தொடரே போராட்டமாக இருந்த பங்களாதேஷ் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment